ஃபொனி ரோஷி

தேதி: April 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மைதா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் - ஒரு முடி
ஏலக்காய் - 5 - 10
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி


 

தேங்காயுடன், ஏலக்காய் சேர்த்து நீர் இல்லாமல் துருவல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மைதாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பிசைந்த மாவை மைதாவில் பிரட்டி மெல்லிய சப்பாத்திகளாக இடவும். பின் ஒரு மூடியால் ஒரே வடிவில் வெட்டி எடுக்கவும்.
பின் தோசை கல்லில் போட்டு மிகவும் சிறு தீயில் வைத்து இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.
சுவையான மாலத்தீவு ஸ்பெஷல் ஃபொனி ரோஷி தயார்.

மாலத் தீவின் மிகப் பழமையான இனிப்பு வகை இது. இந்த இனிப்பு வகையில் தேங்காய் சேர்த்தாலும் சில மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். இதனை தோசை கல்லில் போட்டு எடுப்பதற்கு பதிலாக அவனில் போட்டும் எடுக்கலாம். மிக குறைந்த சூட்டில் ட்ரேயில் அடுக்கி திருப்பிவிட்டு எடுக்க வேண்டும். சிறு தீயில் அடுப்பில் வைத்து எடுத்தாலும் ஒவ்வொன்றிற்கும் அரை மணி நேரம் வரை ஆகும். அதனால் அத்தனை விரைவில் கெட்டு போகாது. இது சாஃப்ட்டாக இருக்காது. நம்ம ஊர் தட்டை போல ஹார்டாக இருக்கும். ஏலக்காயின் வாசம் சற்று தூக்கலாக இருக்கும். இப்போதும் மாலத் தீவை விட சிறு சிறு கிராமம் போன்ற தீவுகளில் உள்ளவர்கள் தான் இதை அதிகம் செய்கிறார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மறக்க முடியுமா ;) குட்டீஸ் விரும்பி சாப்பிட்டாங்க விஜி. இன்னொரு முறை இங்க செய்து வைக்கனும். நீங்க செய்து கொடுத்தது எல்லாம் முடிஞ்சுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

packing powder illamal seyyalaama

i am usha ,how are u தோசைகல்லில் போடும் போது ஆயில் உற்ற வேன்டாமா

ஆயில் ஊற்ற வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விஜி,
ஃபொனி ரோஷி புதுமையா அருமையா இருக்குங்க‌. அடடா செய்வதும்கூட ஈசியா இருக்கேன்னு தோணுது! அவன்ல வைத்து செய்துபார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

viji PACKING POWDER ILLAAMA SEYYALAAMAA

அவங்க பேக்கிங் பவுடர் சேர்த்து தான் செய்தாங்க. நீங்க வேணும்னா கொஞ்சமா அளவெடுத்து இல்லாம செய்து பாருங்க. நல்லா தான் வரும்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா