பாகற்காய் தொக்கு

தேதி: April 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

பாகற்காய் -‍ 4
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிள‌காய் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறு துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து பொடிக்க‌:
அரிசி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு


 

முதலில் பாகற்காயை கழுவி சுத்தம் செய்து, விதைகளை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சற்று வாசனை வரும் வரை சில நொடிகள் வறுத்து, மிக்ஸியில் அரைக்க‌வும். ஊற வைத்த புளியை கரைத்து புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 6 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து பொரிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து, சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு, பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும்.
பாகற்காய் எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்க்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.
பாகற்காய், வெங்காயம் தக்காளி எல்லாமும் சேர்ந்து நன்றாக குழைந்து வந்ததும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றவும். தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்க்கலாம். உப்பு சரிப்பார்த்து மூடி நன்றாக கொதிக்க விடவும்.
காய் ந‌ன்றாக‌ வெந்து வரும்போது, வெல்ல‌த்தை பொடி செய்து சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்போது, பொடித்து வைத்திருக்கும் தூளை சேர்க்க‌வும். சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கலந்துவிடவும். தொக்கு திரண்டு, வேண்டிய பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
சுவையான பாகற்காய் தொக்கு தயார். சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட புளிப்பு, காரம், கசப்பு, இனிப்பு கலந்த சுவையில் அருமையாக இருக்கும். இந்த பாகற்காய் தொக்கு. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ரொம்ப பெஸ்ட் மேட்ச்சாக இருக்கும்.

காயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்குவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. காய் கொஞ்சம் முற்றலாக இருக்கும்போது இப்படி விதைகளை நீக்கி சமைப்பது கண்டிப்பாக கசப்பை குறைக்க உதவும். இந்த பாகற்காய் தொக்குக்கு வழக்கத்தைவிட சிறிது எண்ணெய் கூடசேர்த்து செய்து, கைப்படாமல் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம், 10 நாள் வரைக்கூட பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தேடி தேடி பார்த்தேன் ப்ரொக்கலியை காணோம்!!! :o எங்க வெச்சிருக்கீங்க சுஸ்ரீ ;) சூப்பர்... குறிப்பு, படம், கலர் எல்லாமே அருமை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமை,கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுஸ்ரீ,
இனி தான் இங்கே பாகற்காய் வரும்.
அவசியம் ட்ரை பண்ணுறேன்.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுஸ்ரீ விளக்கபடமும் குறிப்பும் அருமை வாழ்த்துக்கள். என்ன நானும் பாகற்காயும் நெறுங்கிய தோழிகள் ஹிஹிஹி ;)

அன்புடன்,
லலிதா

சுஸ்ரீ பாகற்காய் தொக்கு மிக அருமையா இருந்தது. அனைவருக்கும் பிடித்தது.
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் இன்று உங்க பாகற்காய் தொக்கு செய்தேன் ரொம்ப அருமயா இருந்தது