2.6 வயது மகன் திட உணவு சாப்பிட்டு 6 நாளாச்சு ...

2.6 வயது மகன் திட உணவு சாப்பிட்டு 6 நாளாச்சு ...
வெறும் பாலும் ஜூஸும் தான் ( வடிகட்டி சிப்பர் கப்பில் ) சாப்பிடறான் .
சாப்பாடு , மினி தோசை , variti தோசை,சப்பாத்தி - இதை எல்லாம்
பார்த்தாலே தள்ளி விடுகிறான் .
ப்ளீஸ் யாராவது உதவுங்கள் ...

அன்புடன்
அனிதா

Oru nalaiku ethana murai kudikiran pa. Avanuku fever mathiri entha problem um illaina avanuku juice kodukura time kuraichi patni podunga. Thana pasicha satham sapduvan. Seiya kastama than irukum. Kuzhanthai nalla irukka nan manasa kallaakittu athai than pa senjen. Ore velai than. Oru time sapta regular a saptuduvan. Try pannunga. Sapta sollunga.

ஒரு நாளைக்கு 4-5 முறை மட்டுமே குடிப்பான். இதை நிறுத்தினாலும் சாப்பாடு இறங்குவது இல்லை. மீறினால் 2-3 பருக்கை சாதம் சாப்பிடுவான். ரொம்ப கஷ்டமாய் இருக்கும் , இரவில் தூங்க முடியாமல் பசியை மறந்து rhymes பார்த்திட்டு இருப்பான். வேற வழியில்லாமல் பிஸ்கட் கொடுப்பேன்.
திரும்பவும் நீங்க சொன்ன மாதிரி செய்து பார்கிறேன் .fever எதுவும் இல்லைப்பா. சாப்பாடு தவிர்த்து அவன் activ ஆக தான் இருக்கிறான். சரியாகி விடுவான் என நம்புகிறேன் .

- am

சில நேரம் பிள்ளைகள் இப்படி பண்றது சகஜம் தான். அவங்க சாப்பிடலன்னாலும் ஒழுங்கா ஒரு நாளைக்கு 5 முறையாவது யூரின் போறாங்களான்னு கவனிங்க. நல்லா போகனும். நல்லா தண்னி குடிக்கனும். பழ வகை கொடுத்து பாருங்க ஜூஸா இல்லாம. இந்த வயசு விளையாட்டு வயசு... இப்படி தான் அப்பப்ப உணவுக்கு நோ சொல்வாங்க. புதுசா எதாவது உணவு கொடுத்து பாருங்க. என் மகளுக்கு இந்த பிரெச்சனை அதிகமா இருந்தது. 1 மாசம் கூட வெறும் பால் குடிச்சுட்டு இருந்திருக்கா. எனக்கு டாக்டர் சொன்னதை உங்களுக்கு சொல்லி இருக்கேன். குழந்தை ஆக்டிவா இருக்கவரை பயம் வேண்டாம். அவனுக்கு பிடிச்சதை கொடுங்க. சாப்பிடட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi friend, உங்கள் வேதனை நன்றாக புரிகிறது. என் செல்ல மகன் படுத்திய பாடுதான் நினைவில் வருகிறது. காலை பால் கொடுக்கமால் தோசையை கிரியேட்டிவ் செய்து தாருங்கள் . மினி இட்லி , சின்ன சின்னதா ஸ்டார்  வடிவில் தோசை செய்து கண்கள் வாய்கள் jam வரையுங்கள் . குட்டி கலர் கிண்ணங்கள் குட்டி கார்ட்டுன் தட்டுகளில் கொடுத்து பாருங்கள் கதை சொல்லணும் நிறைய.மூன்று வாய் சாப்பிட்டால் பெரிய விஷயம்.பழங்கள் கொடுங்கள் .நான் ஒரு வேலை pedia sure கொடுப்பேன்.     வாணிசேகர்

நன்றி வனிதா
யூரின் சரியாதான் போகிறான், இன்னமும் டயப்பர் தான். தண்ணி ஓரளவு குடிக்கிறான். அவனுக்கு toilet போவதும் வாரம் ஒரு முறை மட்டுமே. டாக்டர் மருந்து கொடுத்திருக்காங்க. 4 நாளாக கொடுக்கிறேன். உங்க பழைய பதிவில் படித்தது படி விளக்கெண்ணெய் கொடுத்தும்சரியாகலை. ஆனால் கொஞ்சம் பெரிய பையன் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.
ஒரு ஹேப்பி நியுஸ் இன்று காலை 4 மினி தோசை சாப்பிட்டான். பெரிய சாதனை எனக்கு. பழங்கள் பிங்கர் சிப்ஸ் போல கட் செய்து கொடுத்தால் சாப்பிடுகிறான்.
யாருக்கு உதவி என்றாலும் ஓடோடி வரும் வனிதாவுக்கு என் அன்பான நன்றிகள் பல.

அன்புடன்
AM

ஹேய்! 4 மினி தோசை சாப்பிட்டான் . கண், வாய் எல்லாம் வைத்து , அப்புறம் இது பஸ் , இது flight என வண்டி ஓட்டி கொடுக்க சாப்பிட்டான்.
உங்க மாதிரி நண்பர்களிடம் இருந்து பதில் வரும் போது ரொம்ப சந்தோசமாய் இருக்கு. நான் அவனுக்கு நம்ம அறுசுவை இன்ஸ்டண்ட் சத்துமாவு கொடுக்கிறேன்.

அன்புடன்
AM

வாவ்!!! தட்ஸ் க்ரேட் :) நானும் என் மகளுக்கு ஜன்னல் ஸ்க்ரீனில் உள்ள பொம்மை எல்லாம் காட்டி கதை சொல்லுவேன். பீம் பாய் ஆகணும்னா சாப்பிடணும்னு சொல்லுவேன். ஆனா 4 வாய்க்கு மேல வேலை ஆகாது ;) உங்க மகன் சாப்பிட்டது மகிழ்ச்சியா இருக்கு. பழங்கள் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி கொடுங்க. மோஷன் போகும் பிரெச்சனைக்கு 1/4 கப் வெது வெதுப்பான நீரில் சர்க்கரை 4 தேக்கரண்டி கலந்து வெது வெதுன்னு குடிக்க வைங்க. மோஷன் போகவும் செய்யும், கூடவே அப்படி போகாம இருந்து போகும் போது டைட்டாகி குழந்தை சிரமப்படாமலும் போகும். இது தான் நான் என் மகளுக்கு செய்வது. கட்டாயம் பலன் கொடுக்கும். கவலை வேண்டாம். சைட் எஃபக்ட்ஸும் கிடையாது. டாக்டரே சொன்ன வைத்தியம் தான். 2 நாள் பாருங்க... போகலன்னா கொடுத்துடுங்க. ரெகுலரா போக பழகிட்டா அப்பறம் நீங்க கொடுக்க வேண்டியதில்லை, ரெகுலராகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் பையனும் இதேதான் பண்றான் age 2.4, ஒருவேளை சாப்பிட்டால் அன்று எனக்கு பெரிய belssing கிடைத்தது போல இருக்கும்...force பனி கொடுக்கவும் முடியவில்லை...எப்பொதுமே விளையாட்டு தான்...எப்படி சாப்பாடு கொடுப்பது என்றே தெரியவில்லை...நானும் என்னால் முடிந்த அளவு variery தான் முயற்சி பண்றேன்...இருந்தாலும் பயன் இல்லை :(

'ஹாய் ப்ரண்ட் ரொம்ப சந்தோஷம் .ஆன ஐடியாவை மாத்திகிட்டே இருக்கணும். பூனைக்குட்டி பேரை சொல்லி நிறைய ஏமாத்துவேன்.கையில் சாதம் வைத்துட்டு கண்ணை மூடிட்டு பூனை சாப்பிட்டும் சொன்ன வந்து வேகமா சாப்பிடுவான். அவனும் மோஷன் இரண்டு அல்லது 3 நாள் கழித்து போவான் .இரத்தம் கூட வந்திருக்கு. சாப்பிட்டால் தானே ,கதை சொல்வேன் காரட் என்ன இருக்கு ஏன் சாப்பிடணும் குழந்தை வளர்த்திறது பெரிய ௧லை.காரட் ஜூஸ் கொடுங்கள்,வெஜிடபில் சூப் தாருங்கள் டிரை கிரேப்ஸ் தாங்க. பழங்கள் நிறைய தாங்கள் . நீங்கள் வெஜ்.இல்லை என்றால் முட்டை தாருங்கள் தினம் .முட்டையில் ஒரு நாளைக்கு தேவையான புரதம் உள்ளது.

எனக்கும் இரன்டறை வயதில் ஒரு பென் குழந்தை இருக்கின்றாள். அவளுக்கு தயிர் (Yoghurt) ரொம்ப பிடிக்கும். இனிப்பு வகைகளும் நன்றாக சாப்பிடுவாள். அதனால் எந்த உணவு கொடுத்தாலும், சிறிது தயிர் சேர்த்தால் சந்தோசமாக சாப்பிடுவாள். அது பொல உங்கள் பையனுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து அதை கொடுக்க முயர்சித்து பாருங்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்