Paal katti vittathu. Plz help me.

Ennaku delivery agi 3 days achu. Baby paal kudikka matenguthu. Paal katti vali migayum athigamaga erukku plz help me. I can't take this pain. Very very painfull. Plz help me. Plz....

உங்களுக்கு முதலில் தாய் ஆனதற்கு என் வாழ்த்துக்கள்.பால் கட்டி இருந்தால் முதலில் அதை பிழிந்து அல்லது breast pump என்று ஒன்று இருக்கும்.அதன் மூலமாக கட்டி இருக்கும் பாலை pump செய்து வெளியேற்றி விட்டு பிறகு குழந்தைக்கு கொடுங்கள்.வலி இருக்க தான் செய்யும் தோழி.பொறுக்க முடியவில்லை என்றால் மருத்துவரை பாருங்கள்.
நான் செய்ததை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.இல்லை உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை கேட்டு பாருங்கள்.முதலில் உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக குழந்தை பால் குடிப்பான்.முதலில் அவன் பழக கொஞ்சம் நேரம்,காலம் ஆகும்.அவனுக்கு பால் புகட்டும் போது சந்தோஷமாக அவனை கொஞ்சி கொண்டே கொடுங்கள்.சில நாட்களில் சரி ஆகிவிடும்.பாஸிட்டிவ் எண்ணங்கள் கொண்டு குழந்தையை அணுகுங்கள்.எக்காரணங்கொண்டும் கட்டி இருக்கும் பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டாம்.
தவறாக ஏதாவது பேசி இருந்தால் மன்னிக்கவும் தோழி.டேக் கேர்.

Expectation lead to Disappointment

Very thanks friend.

Congratz for u and ur new born....
வெண்ணீர்ல துணியை நனைத்து மார்பு மேல அழுத்தி ஒத்தடம் கொடுங்க. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா மார்பை அழுத்தி பால release பண்ணுங்க. சில சமயம் நம்ம விரலால காம்பை சுன்டிவிட்டால் கூட பால் release ஆகும். இது என்னுடய அனுபவம்.குழந்தை பசிக்காக அழும்பொது மார்புக்காம்பை குழந்தையின் வாய் கிட்ட வெச்சு உரசுங்க. குழந்தையின் வாய் காம்பை தேடும். அப்போது பால் குடிக்கற மாதிரி செய்யுங்க. குழந்தை suck பண்ணுவதர்க்கு சிரமப்பட்டால் மருத்துவரிடம் சோதித்து நல்ல ஆலோசனை பெறவும்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

is it possible to secrete the mother milk again after 5 years without pregnancy?

சுரக்கலாம். ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட இப்படி இருக்கலாம். குழந்தைகள் - பால்குடி மறந்தபின் சரியாகிவிடுவார்கள். மற்றவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும்.

நீங்கள் மருத்துவரை நாடுவது நல்லது - அவசியம் என்பேன். ஹோர்மோன்கள் காரணமாக இருக்கலாம் என்றாலும் வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும். கர்ப்பத்தினால் உண்டாகும் சுரப்பு பாலூட்டுவதை நிறுத்திய சில நாட்களில் நின்றுவிடும். கர்ப்பமல்லாமல் சுரப்பிகள் தொழிற்படுமானால் அவற்றின் செயற்பாட்டைச் சரிசெய்ய சிகிச்சை தேவை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்