கிட்ஸ் க்ரீன் பர்பி (வேறுமுறை)

தேதி: April 7, 2013

பரிமாறும் அளவு: 10 துண்டுகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ரெடிமேட் பிஸ்தா பவுடர்-1 பாக்கெட்(150கிராம்)
கடலை மாவு-50கிராம்
மில்க் பவுடர்-50கிராம்
சர்க்கரை-150கிராம்
நெய்- 2 டேபிஸ்பூன்


 

1 கப் நீரை கொதிக்கவிட்டு அதில் சர்க்கரை கலக்கவும்
ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு வைக்கவும்.
மற்றொரு வாணலியில் 1டேபிள்ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் முதலில் கடலை மாவை பச்சை வாசம் போக வறுக்கவும்.
பின் அதனுடன் பிஸ்தாபவுரை கொட்டி கிளறவும்.
பிறகு மில்க்பவுடரை கொட்டி கிளறவும்.
மூன்றையும் கட்டியில்லாமல் கிளறி சிம்மில் வைக்கவும்.
பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதை வறுத்த பிஸ்தாகலவையில் கொட்டி மிதமான தீயில் விடாமல் கிளறவும்..வாணலியில் ஒட்டும்போது மீதி நெய்யை விட்டு கிளறை ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்


இதில் கடலை மாவுக்கு பதில் மைதாமாவும் சேர்க்கலாம்.
வெறும் பிஸ்தாபவுடரில் செய்யும் முறை ஏற்கனவே கொடுத்துள்ளேன்..அப்படி செய்யும்போதும் சுவை நன்றாக இருக்கும்.ஆனால் மிகவும் ஹெவியாக(ரிச்சாக) இருக்கும்.ஒரு துண்டுக்கு மேல் சாப்பிட முடியாது.இதுபோல் ப்ளேவருக்காக சிறிது மில்க்பவுடரும் கடலைமாவும் சேர்த்து செய்யும் போது ஹெவியாக தெரியாது நிறைய துண்டுகள் உள்ளே போக வாய்ப்பிருக்கிறது.இதில் நான் கொடுத்துள்ள சர்க்கரை அளவு இனிப்பு மிதமாக இருக்கும். விரும்பினால் சுவைக்கேற்ப கூடுதல் சர்க்கரை சேர்க்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் sweet ரொம்ப நல்லா இருக்கு. இது son papdi மாதிரி இருக்குமா?

கிட்ஸ் கிரீன் பர்பி சூப்பர்ரா இருக்கு