ஃபொனி குலா

தேதி: April 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (3 votes)

 

மைதா - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 5 - 10
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று (விரும்பினால்)
வெனிலா / ரோஸ் எஸன்ஸ் - சில துளிகள் (விரும்பினால்)
எண்ணெய் - தேவையான அளவு


 

தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து நீர் இல்லாமல் துருவல் போல் அரைத்துக் கொள்ளவும்.
மைதாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், தேங்காய் துருவல் கலவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிக் கொள்ளவும்.
முட்டை சேர்க்க விரும்பினால் முட்டையுடன் எஸன்ஸ் சேர்த்து அடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வடையை முட்டை கலவையில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க பொரித்து எடுக்கவும். (முட்டை கலவையில் தோய்த்து எடுக்காமலும் பொரித்து எடுக்கலாம்).
சுவையான ஃபொனி குலா தயார்.

இது மாலத் தீவில் சிறு தீவுகளில் பிரபலமான இனிப்பு வகை. முட்டையில் தோய்த்து பொரித்தால் மேல் பக்கம் பஞ்சு போல் இருக்கும். முட்டை இல்லாமல் செய்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாஃப்ட்டாகவும், சுவையாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் அருமையான குறிப்பு. இன்று செய்து பார்த்து பின்னுட்டம் அனுப்புகிறேன்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

இன்று செய்தேன். நான் முட்டையில்லாமல் செய்தேன். நெய் ஊற்றி பொரித்தேன். வெளிப்பக்கம் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாப்டாகவும் இருந்தது. செய்வதற்க்கு எளிமையாக இருந்தது. மிக்க நன்றி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

இன்று தான் செய்து பார்த்தேன் அக்கா சூப்பரா இருந்தது நன்றி