கொத்து ரோஷி

தேதி: April 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

சப்பாத்தி / ஃபுல்கா - 6
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு - சிறிது
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
கேரட், பீன்ஸ் - சிறிது
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
கறிவேப்பிலை
உப்பு


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெரிதாக நறுக்கிய ஒரு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கசகசா மற்றும் முந்திரி சேர்த்து பிரட்டி எடுத்து ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் மீதமுள்ள் எண்ணெயை விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும். மூடி போட்டு லேசாக ஆவியில் காய்களை வேக விடவும்.
பின் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து சில நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான வெஜிடபுள் கொத்து ரோஷி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா! இன்னிக்கி முதன்முதலா நான் தான் முதல் ஆளா வந்திருக்கேன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் வனி. ரொம்ப அருமை வழக்கம்போல். எனக்கு முதல் தடவை பார்சல் ப்ளீஸ்

அன்புடன்,
ஹலீமா

வனி,

'கொத்து' பரோட்டா மாதிரி, 'கொத்து ரோஷி' நல்ல ஐடியாவா இருக்கு! :) காய்கறிகளும் சேர்த்து, சப்பாத்தியை இந்தமாதிரி செய்திட்டா, ஆல் இன் ஒன் பாட் ஐய்ட்டமா சாப்பிட சுவையாவும், லன்ச் பாக்ஸ் கொண்டுபோக ஈசியாவும் இருக்கும் இல்ல?! ;‍) செய்துப்பார்த்திட்டு வந்து சொல்றேன். வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி கொத்து ரோஷி சுவை நல்லா இருந்தது, வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்:)
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

nalla idea

வனி,
சூப்பர்ப் ஐடியா!!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தங்கச்சி,
மூன்று நாட்களுக்கு முன் கொத்து ரோஷி செய்தேன், வழக்கம் போல் சூப்பர் :-)

நன்றி!!!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் பதிவுக்கு மிக்க நன்றி :) கட்டாயம் பார்சல் அனுப்பிடுறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இது மாலே’ல பண்றது... நான் கொஞ்சம் நம்ம ஊர் ஸ்டைலுக்கு மாத்திகிட்டேன். அவசியம் ட்ரை பண்ணிட்டு குட்டீஸ்க்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :) ஃபோட்டோ எங்க மேடம்?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொத்துரோஷி சுவையில் கலக்கலாக இருந்நதது....

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைகு மிக்க நன்றி பிரியா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா