மீன் பிரியாணி

தேதி: April 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (10 votes)

 

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
மீன் - ஒரு கிலோ (பெரிய வகை)
இறால் - ஒரு கைப்பிடி
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா 2
தயிர் - ஒன்றரை கப்
மிளகாய் தூள் - 2 + 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
பன்னீர் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய்
புதினா, மல்லித் தழை
உப்பு


 

மீன் மற்றும் இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் இறால், தக்காளி, மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின் மல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விடவும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும். குருமாவில் மீன் பொரித்த எண்ணெயை ஊற்றவும்.
பின் அரிசியைக் களைந்து குருமாவில் போட்டு, பன்னீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக விடவும். பின் நன்கு கிளறிவிட்டு, மீன் துண்டுகளைப் போடவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான மீன் பிரியாணி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முசி,

மீன் பிரியாணி சூப்பரா இருக்கு! என்னவோ நான் இதுவரை மீனில் பிரியாணி மட்டும் செய்ததே இல்லை. ஒருமுறை கண்டிப்பா செய்துப்பார்க்கனும். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

உங்கள் பிரியாணி சூப்பர் பா. எனக்கு ஒரு doubt. எதுக்கு பன்னீர் சேர்க்கணும்?

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,பன்னீர் வாசனைக்காக எல்லா வகை பிரியாணிக்கும் சேர்ப்போம்,விரும்பாவிடில் தேவையில்லை.பன்னீர் என்றால் ரோஸ் வாட்டர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி,
செய்ய ஆசையா இருக்கு.
ஒரு சந்தேகம் ,மீன் பொரிக்கும் போது எந்த பதத்தில் எடுக்கணும்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மீனை ரொம்ப கிரிஸ்பியாக பொறிக்காமல்,அரை வேக்காடாக பொறிக்கவும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

super priyani today i try it

super priyani today i try it

super priyani today i try it