முருங்கைக்கீரை சாம்பார்

தேதி: April 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

முருங்கைக் கீரை - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய், பூண்டு - 2
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி, ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
புளி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை


 

துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு முருங்கைக்கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளி நீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அதை வேக வைத்த பருப்புடன் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு நுரைத்து வரும் போது ஆல் பர்பஸ் பொடி சேர்க்கவும். இறக்கும் போது சிறிது கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படம் பார்க்கவே தெரிகிறது, நிச்சயம் நன்றாக இருக்கும்.
முயற்சித்துப் பார்க்க இயலாது. இங்கு கீரை கிடைக்காது. ;(

‍- இமா க்றிஸ்

நல்லா இருக்கு;நானும் கீரை சேர்த்து செய்வதுண்டு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இமா,
எனக்கும் இங்கு கிடைப்பதில்லை..
ஊரில் அம்மா செய்தது,நான் கிளிக்கியது மட்டுமே ;)
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

//படம் பார்க்கவே தெரிகிறது, நிச்சயம் நன்றாக இருக்கும்.
முயற்சித்துப் பார்க்க இயலாது. இங்கு கீரை கிடைக்காது. ;(
//
அதே அதே, நானும் இதேதான் சொல்ல வந்தேன்! ;-) எனக்கு முருங்கைக்கீரை என்றால் ரொம்ப பிடிக்கும். ம்ம்..ஹீம்ம்..., கவிதா, அழகா ஃப்ரெஷ் கீரையை க்ளிக்கி, ஆசை காட்டிட்டிங்க!! :-( நல்ல குறிப்பு! :‍-)வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கவிதா குறிப்பு சூப்பர்... வாழ்த்துக்கள்... இந்த ஆல் பர்பஸ் பொடி என்றால் என்னது அதை மட்டும் கொஞ்சம் எனக்கு புரிய வச்சிடுங்கோ...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்