பீர்க்கங்காய் சட்னி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கங்காய் - 2
பச்சைமிளகாய் - 6
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு கப்
கொத்தமல்லி இலை - ஒரு கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
புளி - அரை நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

பீர்க்கங்காயை சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதனுடன் பச்சைமிளகாயும், பீர்க்கங்காயையும் சேர்த்து வதக்கவும்.
இரண்டும் நன்றாக வதங்கியவுடன் தேங்காய்த்துருவலை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வேறோரு வாணலியில் எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.
இவையனைத்தயும் மிக்ஸியில் போட்டு கொத்தமல்லி இலை, புளி, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்