நாட்டுக்கோழி வறுவல்

தேதி: October 10, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒரு கிலோ
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - முழுதாக ஒன்று
காய்ந்தமிளகாய் - இருபது
தனியா - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கோப்பை


 

கோழியை நன்கு கழுவிக் கொண்டு வேண்டிய துண்டுகள் போடவும்.
பிறகு அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், உப்புத்தூள் போட்டு ஒரு கோப்பை நீரை ஊற்றி அரை அவியலாக வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு மீதியுள்ள பொருட்களை எலுமிச்சைரசத்தை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த விழுதுடன் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி கொண்டு கோழித்துண்டுகளின் மீது பூசவும்.
இந்த கலவையை இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து ஊறிய கோழித்துண்டுகளை சட்டியின் அளவிற்கு ஏற்ப போட்டு பொன்முறுவலாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்