ஹவாதுலி பிஸ்

தேதி: April 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

மேல் மாவுக்கு:
மைதா - ஒரு கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கொதிக்கும் நீர் - தேவைக்கு
உப்பு
ஸ்டஃபிங் செய்ய:
ஸ்மோக்டு டூனா மீன் (Valhoamas) - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
கிதியோ மிருஸ் (Githeyo Mirus) - பாதி
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சை - பாதி
உப்பு
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
மசாலா செய்ய:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் - பாதி
கிதியோ மிருஸ் (Githeyo Mirus) - பாதி
கறிவேப்பிலை - சிறிது
பந்தன் / ரம்பை இலை - 2 துண்டு
பூண்டு - 2 பல்
வறுத்த கறி தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி
உப்பு


 

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, கிதியோ மிருஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்தவற்றுடன் பொடித்த மீன், தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை முட்டை வடிவில் உருண்டைகளாக பிடிக்கவும்.
மைதாவில் எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பிசைந்த மாவை மீன் கலவை உருண்டையின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறு உருண்டைகளாக்கவும்.
ஒவ்வொரு உருண்டையும் சிறிதாக தட்டி உள்ளே மீன் கலவை உருண்டையை வைத்து மூடவும். (மூடும் போது மைதா மெல்லியதாக இருக்க வேண்டும்).
பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீர் மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொதிக்க துவங்கியதும், அதிக தீயில் வைத்து முட்டை வடிவில் தயார் செய்த உருண்டைகளை அதில் போட்டு வேக விடவும். (மூடி வைக்கத் தேவையில்லை).
உருண்டைகள் வெந்து மேலே மிதந்து வந்ததும் வடித்து எடுக்கவும்.
மசாலா செய்ய தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, ரம்பை இலை, மிளகாய், பூண்டு அனைத்தும் சேர்த்து வதக்கி, கறி தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்கவும். தேங்காய் பால் விட்டு கலந்து விடவும்.
தூள் வாசம் முழுவதும் போனதும், வேக வைத்த முட்டை உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும்.
சுவையான மாலத்தீவு ஸ்பெஷல் ஹவாதுலி பிஸ் (Havaadhulee Bis) தயார்.

ஹவாதுலீ பிஸ் என்பது Curried Tuna Balls / Curried Eggs. பிஸ் என்றால் முட்டை. இதில் முட்டை சேர்க்கவில்லை. ஆனால், முட்டை வடிவில் மீன் உருண்டைகள் செய்வதால் இந்த பெயர். மாலத்தீவு சமையலில் நம் ஊரில் கறிவேப்பிலை தாளிப்பது போல கறிவேப்பிலையுடன், ரம்பை இலையையும் சேர்ப்பார்கள். கிதியோ மிருஸ் இல்லாதவர்கள் பச்சை மிளகாய் அளவை சற்று கூடுதலாக சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிடித்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்

Nanraga irukinrathu.