ரோஸ்மெரி டீ

தேதி: April 20, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரோஸ்மெரி நெட்டுகள் - 4
டீ பாக்ஸ் - 2
சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப


 

அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்திலிட்டு ஒன்றரை கோப்பை கொதிநீர் விட்டு மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.

இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் போழுது, இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.

இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக் கொள்ளவும்.

தேவைக்கு பால், சீனி சேர்த்துக் கலக்கினால் சுவையான, புத்துணர்ச்சியூட்டும் ரோஸ்மெரி டீ தயார்.


ரோஸ்மெரி டீ தலைவலி, தடிமல் வேளைகளில் இதம் தரும்.
பூக்கள், மொட்டுகள் & பூச்சிகள் இல்லாத இளம் ரோஸ்மெரி நெட்டுகளை மட்டும் தெரிந்துகொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இமாம்மா.
நல்லதொரு சுவையும் மணமுமான தேனீர். கண்டிப்பாக செய்து பார்த்து பின்னூட்டம் தருகின்றேன்.

very nice

இமாம்மா ரோஸ்மேரி டீ போட்டுக் குடிச்சாச்சுது. நல்ல மணமும் சுவையுமான டீ. என்ர கணவருக்கும் மகள்மாருக்கும் ரொம்பப் பிடிச்சுது. எப்படி டீ போட்டாலும் குறை சொல்லுறவர். எங்கை சைனீஸ் கடையில வேண்டினியோ என்றார். இல்லை அறுசுவையில பார்த்து எடுத்த குறிப்பு. ரோஸ்மேரி மட்டும் கடையில வாங்கினது என்றேன். ஒன்று செய்து கொடுத்தால் பல நூறு கேள்வி கேட்பார். நன்றி இமாம்மா.

அன்புடன்
சியாமளா