பூண்டு குழம்பு

தேதி: April 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (12 votes)

 

பூண்டு - 15 பல் (அ) நாட்டு பூண்டு - 2
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - சிறிது
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் - 5
தனியா - அரை மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பூண்டு - 3, 4 பல்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
கறிவேப்பிலை


 

ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய துருவல் சேர்த்து பிரட்டி எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும். பெரிய பூண்டாக இருந்தால் நறுக்கிச் சேர்க்கவும். நாட்டு பூண்டு சிறிதாக இருந்தால் அப்படியே போடலாம்.
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, புளிக் கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான பூண்டு குழம்பு தயார்.

இந்தக் குழம்பு அதிகமாக இருக்காது. அதிகமாக வேண்டுமெனில் தக்காளி வதங்கிய பின் சாம்பார் தூள் சேர்த்து பிரட்டி நீர் ஊற்றி கொதிக்கவிட்டு தூள் வாசம் போனதும் அரைத்த விழுது சேர்க்கவும். தூள் கட்டாயம் இல்லை. தூள் சேர்க்காமலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் வனி...நான் அரைச்சு விட்டு செய்ததில்ல..இது மாதிரி டிரை பண்ணறேன்...

Be simple be sample

hi akka,
nan intha mathiri poondu kuzhambu vachathu illa. inaiku night enga veetla intha kuzhambu than. seithutu eppadi irukunu solren.

பூண்டு குழம்பு குறிப்பு நல்லா இருக்கு:)
வாழ்த்துக்கள் வனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி சிஸ்டர் கலக்குரிங்க போங்க.super குறிப்பு.im a big fan of you sister.

super mam

maha

Hi i am new....But i often see ur recipies..its all very good.....am fan of u&ur recipies

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணி படத்தை போட்டுடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்தீங்களா? எப்படி வந்துது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு எந்த குறிப்பும் இல்லயா?

என்னையா கேட்கறீங்க? இல்ல பொதுவா கேட்டீங்களா? பொதுவான்னா... அட்மின் இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்டேட் செய்வாங்க. :) என்னை கேட்டிருந்தா... நான் குறிப்புகள் அனுப்பி 2 மாசம் ஆயிடுச்சு ;) அது தான் இப்ப வந்துகிட்டிருக்கு. நான் கொஞ்சம் பிசியாகிட்டேன். இன்னும் ஒரு மாசம் ஆகும் நான் மீண்டும் குறிப்புகள் அனுப்ப :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super a irunthuchunga akka sorry akka nan inaiku than unga reply pathen akka. Thappa ninaichukatheenga akka

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :) பரவாயில்லை குறிப்புகள் உள்ள போயிட்டா கமண்ட்ஸ் பார்ப்பது சிரமம் என எனக்கு நல்லா தெரியும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா இந்த குழம்பு செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u Vanitha for ur receipe

வனி இததான் நான் யார்கிட்டே கேட்கலாம்னு நினச்சேன்.என்பொன்னுக்கு அவங்க மாமியார் வச்சு கொடுத்தாங்களாம் .நல்லாயிருந்துச்சுனு என்ன வைக்கசொன்னா நான் வச்சது அவளுக்கு அந்த டேஸ்ட் இல்லனு சொல்லிட்டா.இப்ப உங்க பதிவு பார்த்து அவளே செஞ்சா சூப்பராயிருக்காம் அதே டேஸ்டாயிருக்காம் ஆன்டிக்கு நன்றி சொல்லுமானு சொன்னா வனி.நன்றிம்மா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி சொன்னேன்னு உங்கள் மகளிடம் சொல்லிவிடுங்கள் நிசா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அவ உங்கள் மகள் போல நன்றிலாம் சொல்லக்கூடாது. அவளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகனும்னு வாழ்த்துங்க அதான் வேனும்

Ammaadiyo!! Paati aaga porenaa??? nallapadi pillai perredukka piraathanaigal. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மா சொல்லாதீங்க‌ நிஷாம்மானு டைப் பண்ணேன் நீங்களே சொல்லிட்டீங்க‌ ஹய்யோ ஹய்யோ( வடிவேலு வாய்ஸ் )

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Ennaa oru aanandha sirippu!!! Naan paati aana sandhosham??!! Mm... nadakattum. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி&மெர்சி வனிபாட்டி இல்ல சாரி வனிபெரியம்மா இது ஒகேயா

வனி நான் சும்மா சொன்னேன் கோச்சுக்காதிங்க நீங்க அக்காதான் என்பொன்னுக்கு என்பொன்னுக்கு 21 வயசு ஆகுது 92லதான் பிறந்தா நான் எனக்கு உடம்பு முடியலன்னு காலேஜ் கூட முடிக்காம கல்யானம் பன்னிட்டேன்மா வனி ஏதும் கோவமில்லைல்ல

Kovama??!! Adhellaam illainga. Busy with some personal work. Adhaan arusuvai pakkam vara mudiyala. Ivlo neram adhai paarthuttu ippa dhaan thungum mun idhai oru paarvai paarkaraen. Mobile post. Kaalaila varaen. Bye.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி தூங்குங்க குட்னைட்

யக்கோவ்

குழம்பு செம டேஸ்ட், ஆமா, யம்மி.. மதியம் செய்து சுட சுட சாதத்தோட சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டே இங்க ஓடிவந்திட்டேன்.

குளிர்பான பெட்டியில் வச்சாச்சு, நாளைக்கு லன்ச்கும் இதான். கலக்கிட்டேள் டார்லிங்...

அன்புடன்
பவித்ரா

Vani akka superkka