டீப் ஃப்ரைடு மீன் பக்கோடா

தேதி: October 11, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - ஒரு கிலோ
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
சாம்பார் வெங்காயம் - பத்து
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கேசரி நிறத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மைதாமாவு - ஒரு கோப்பை
முட்டை - மூன்று
ரொட்டித்தூள் - இரண்டு கோப்பை
உப்புத்தூள் - இரண்டுதேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு கோப்பை


 

சதைபற்றுள்ள மீனாக பார்த்து வாங்கவும். பிறகு அதிலுள்ள முட்களை நீக்கிவிட்டு கழுவி நன்கு வடிகட்டி வைக்கவும். அதிகபடியான நீரை காகித துவாலையால் ஒற்றி எடுக்கவும். வேண்டியளவுக்கு துண்டுகள் போடவும்.
பிறகு இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை மையாக அரைத்துக் கொண்டு மிளகாய்தூள், உப்புத்தூள், கேசரிநிறத்தூளையும் சேர்த்து நன்கு கலக்கி மீனை சேர்த்து நன்கு பூசவும்.
இந்த கலவை அரைமணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பிறகு மூன்று கோப்பைகளை எடுத்துக் கொண்டு முதலில் மைதாமாவுடன் மிளகுதூளையும், ஒரு சிட்டிகை உப்புத்தூளையும் போட்டு கலந்து வைக்கவும். இரண்டாவதில் முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து அடித்து வைக்கவும். மூன்றாவதில் ரொட்டித்தூளை போட்டு வைக்கவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து ஊறிய மீனை ஒவ்வொன்றாக எடுத்து மைதாவில் பிரட்டி, முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூளில் பிரட்டி எண்ணெயில் போடவும்.
இதேப் போல் எல்லாத்துண்டுகளையும் சட்டியின் அளவிற்கு ஏற்ப போட்டு பொன்னிறமான பக்கோடாக்களாக பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்