ராகி லட்டு

தேதி: April 24, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

ராகி மாவு - ஒரு கப்
பாதாம், கருப்பு எள், வேர்க்கடலை, தேங்காய் - ஒரு கப்
கருப்பட்டி - கால் கப்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்கவும். விரும்பினால் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை ப்ளெண்டரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மாவு, கருப்பட்டி சேர்த்து மேலும் 2 சுற்று அரைக்கவும்.
கலவையை விரும்பும் அளவு உருண்டைகளாக பிடிக்கவும். இதற்கு பால், நெய் தேவைப்படாது. உருண்டை பிடிக்க வரவில்லையெனில் லேசாக பால்/நெய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான, ஹெல்தியான ராகி லட்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் குறிப்பா?? அருமை அருமை... இனிப்பான ஆரோக்கியமான குறிப்பு... சூப்பர் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் குறிப்பு ஆரோகியமான இனிப்போட ஆரம்ப்ச்சிருக்கீங்க
வாழ்த்துக்கள் கலை:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள் :)

Kalai

என் முதல் குறிப்புக்கு முதல் ஆளா வந்து பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி :) வாழ்த்துக்கும் நன்றி :)

Kalai

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

Kalai

ரொம்ப healthy ஆன sweet.. கண்டிப்பா try பண்றென்,. கருப்பட்டி தண்ணீ விடுமா? எப்படி லட்டு பிடிக்க வரும்?