Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

நீங்கள் பேச விரும்பும் தலைப்பை தெரிவியுங்கள். தொடர்ந்து பேசுவோம் காத்திருங்கள்.

வாழு.....வாழ விடு....

நம்மை பற்றி ..
வாழ்கையில் சுக துக்கங்கள் பற்றி ..பிடித்தது பிடிக்காதது பற்றி ..
எது வேண்டுமானாலும் பேசலாம் .:)

சரி நீங்கள் உங்களைப் பற்றி தெரிவியுங்கள்

வாழு.....வாழ விடு....

நீங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கும் போது அந்த சந்தோசத்தை எப்படி வெளிப்படுத்துவீர்கள். அதே போல் சோகமாக இருக்கும் அந்த சோகத்தை எப்படி வெளிப்படுத்துவீர்கள்.

வாழு.....வாழ விடு....

ரொம்ப சந்தோசம் அடைந்தால் கண்ணீர்...சோகமாக இருந்தாலும் கண்ணீர்தான்... இதில் என்ன வேடிக்கை என்றால்....என் கணவர் சொல்ற்றார் நீ அழுது அழுது உன் கண்ணீருக்கே மதிப்பு இல்லாம போச்சு என்று....என்ன செய்றது பெண்களுக்கு பலம் பலவீனம் இரண்டுமே கண்ணீர்தான்.

புகைப்படத்துடன் குறிப்புகளை எப்படி அறுசுவைக்கு அனுப்புவது, எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.நான் புதுசு, எனக்கு எப்படி அனுப்புவதுன்னு தெரில, நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

உங்கள் குறிப்புகளையும் டைப் செய்து படங்களையும் இந்த ஈ மெயிலுக்கு அனுப்புங்கள். arusuvaiadmin@gmail.com இரண்டு மூன்று நாட்களில் வெளிவந்துவிடும்.

ஆண்கள் அழ கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சுகம் துக்கம் அதன் உணர்வு இருவருக்குமே சமம் எனும் போது ஆண்கள் ஏன் அந்த நிமிடமே அதை வெளிப்படுத்தி தங்கள் மன இருக்கத்தை குறைத்து கொள்ள கூடாது. இதனால் ஆண்களுக்கு வர கூடிய இருதய நிறுத்தம் குறையுமே. நான் சொல்வது சரி தானே.

வாழு.....வாழ விடு....

நீங்கள் கொடுத்த ஈமெய்ல் ஐடீ சரிதான். ஆனாலும் இங்க டைப் பண்ணும் போது இடையில் எங்காவது ஒரு ஸ்பேஸ் வைச்சு டைப் பண்ணுங்க. arusuvaiadmin @gmail.com முடிந்தால் மாற்றிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் என்னயும் உங்க தோழியா ஏத்துப்பீங்களா

மேலும் சில பதிவுகள்