Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

நீங்க எது சம்பந்தமா கேள்வி கேக்கணும் பா?

ஹாய் ,இங்க மேல மன்றம் தலைப்ப க்ளிக் பன்னுங்க,அதில் அனைத்துமே இருக்கு ,நீங்கள் எதைப்பற்றி கேட்கவேண்டுமோ அதைபற்றி யாராவது பேசி இருந்தால் அதில் க்ளிக் செய்து நீங்கள் பேசலாம் (அ) வலது புரத்தின் மேல் புது கேள்வி கேட்பதற்கு என்று இருக்கும் ,அதில் சென்று உங்கள் பிரச்சனயை சொல்லலாம் பா

கடந்த கால சந்தோசத்தை நினைத்து ஏங்குவதை விட நிகழ் காலத்தில் எப்படி சந்தோசமாக இருக்க முடியும் என்பதை பற்றி யோசித்து செயல் படுவதே சிறந்த ஆரோக்கியமான செயலாகும். கடந்த காலம் - முடிந்து போனவை. வருங்காலம் - இறைவன் கையில். நிகழ் காலம் - நம் கையில்.

வாழு.....வாழ விடு....

என் சிறு வயதில் நிகழ்ந்த மறக்க முடியாத சோகமான நிகழ்வு என் தாய் என்னை விட்டு பிரிந்ததுதான் .எனக்கு 5 வயசுல என் அம்மாக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது .3 நாள் தான் காய்ச்சல் இருந்தது .3 நாளும் ஹோஸ்பிடல் லதான் இருந்தாங்க .மருத்துவரின் கவனக்குறைவால் காய்ச்சல் முளையை தாக்கி விட்டது .எங்களை பிரிந்து போய்ட்டாங்க .என் தம்பி அப்பொழுது 10 மாத கை குழந்தை .அவங்க hospital ல இறந்தது எனக்கு தெரியாது .வீட்ல திடீர்னு நிறைய கூட்டம் .யாரையோ வெள்ளை துணில மூடி படுக்க வச்சிருகாங்க .அவங்க தான் என் அம்மா ..அவங்க உடம்புல இப்போ உயிர் இல்லை ..அவங்க எப்பவும் இனி வரமாட்டங்க னு தெரிஞ்சப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?அந்த நிலை யாருக்குமே வரக்கூடாது .அப்புறம் என் வாழ்கையே மாறி போச்சு .

நீங்கள் சொல்வது சரி தான் ,ஆனால் தனிமையில் இருக்கும் போது என்ன என்னவோ நினைக்க தோன்றுகிறது,அந்த சமயத்தில் பழய நினைவுகள் தோன்றுகிறது.

உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வுக்கு மிகவும் வருந்துகிறேன். நமக்கு ஏற்பட்ட அத்துணை இழப்புகளுக்கும் காலம் தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது.

வாழு.....வாழ விடு....

தனிமையில் இருப்பதை தவிருங்கள். புத்தகம் படிக்க பழகிக்கொள்ளுங்கள்.

வாழு.....வாழ விடு....

அந்த நிலைமை யாருக்கும் வரகூடாது பா,அம்மா இல்லாமல் எவ்ளோ கஸ்டபட்டிருபீங்க,உங்கள் திருமண வாழ்க்கையில் அதெல்லாம் போய் கண்டிப்பா சந்தோஷமா இருப்பீங்க, life la ஒரு பகுதி கஷ்டமாக இருந்தா கண்டிப்பா அடுத்த பகுதி சந்தோஷமாகதான் இருக்கும்

தனிமயை தவிர்க்க நான் கொஞ்ச நாளாவே முயற்ச்சி செய்து கொன்டிருக்கிரேன்,புத்தகம் படிப்பது,இசை ,சமயல் இப்படி பல.

எனக்கு துணை தேவை பட்ட நேரத்தில் நான் தனிமையில் தான் தவித்தேன் .இப்போ தனிமையே என் விருப்பமாக ஆகி விட்டது .தனிமையில் புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும் .

மேலும் சில பதிவுகள்