Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

உங்க நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் பா .
நாமதான் இப்போ friends ஆகிட்டோம்ல

ஈஸ்வரிமஞ்சு எங்க போட்டாங்க

சுசி சிங்கபூர் எப்படி இருக்கு பா,
ரோஜா அப்போ குட்டி பயனை பாத்துக்கவே உங்களுக்கு நேரம் போதாது ,என் சார்பா சார்-கு ஒரு முத்தம்.
சுபி உங்கள போல தான் நானும் இப்போ கூட ஊருக்கு போயிருந்தோம்,என் அண்ணா பயன் இருக்கான் ,அவன் கூட எப்போவுமே சரியான கலாட்டா தான் ,
தேவி,நீங்களும் வாங்க பா ,எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ,இவ்ளோ தோழீஸ் கிடச்சிருக்காங்க

தேவி ,பசங்க இல்ல பா,try பண்ணிட்டு தான் இருக்கோம் .உங்களுக்கு?

ஈஸ்வரி மஞ்சு ,சிங்கப்பூர் சூப்பரா இருக்கு பா.இப்போ சூடு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு .அங்க பெங்களூர் எப்படி இருக்கு ?

சின்ன வயசுல கிராமத்துக்கு போவோம் லீவுக்குலாம் அங்க நிறைய ப்ரண்ட்ஸ் இருப்பாங்க, அவங்க கூட சேர்ந்துகிட்டு நிறைய சுத்துவோம் சைக்கிள் ஓட்டுவோம். அப்பறம் சும்மா சின்னதா கொட்டகை மாதிரி போட்டு கடை மாதிரி அமைச்சு விளையாடுவோம் ரொம்ப ஜாலியா இருக்கும் அந்த ஒரு மாதம் முழுவதும் இப்ப நினைச்சாலும் கிடைக்காது

ஆமா பா .friends எல்லாரும் இப்போ கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகிட்டாங்க .நட்பு இப்போ செல்போன் லயும் ,facebook லயும் தான் .பழைய enjoyment இப்போ கிடைக்கவே கிடைக்காது :(

ஹாய் சுபி வாலு பொண்ணு, குட்டி பையன் எப்படி இருக்கான் அவன் கூட டெய்லி விளையாடுறியா ஜாலியா?
ஈஸ்வரி நீங்க பெங்களூருவா ம் நல்லா கூலிங்கா இருக்குமே எப்போதுமே
சுசி ஆமாம் எங்கப்பா பழைய நட்புலாம் கிடைக்கவே கிடைக்காது இப்போலாம்

பெங்களுர் சூப்பரா இருக்கு பா,இங்கயும் சூடா இருக்கு ,ஆனால் நான் ஆபீஸ் ல இருக்கேனா அவ்லோவா வெயில் தெரியல,என்ன நீங்க ஈஸ்வரிநே கூப்பிடுங்க பா அவர் பெயர் மஞ்ஜுனாத்,அவர் வரவரைக்கும் உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு ,எனக்கு இங்க ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு போனா அவர் வரதுக்குள்ள சரியான போரா இருக்கும்.

மண் வாசனை மாறாம ஒரு கிராமத்து பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டியிருக்கிறார் வைரமுத்து.

உலக அனுபவம் இல்லாத இந்த நாயகி கருவாச்சியைப் போல பல கிராமத்து பெண்களின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் உலகத்தின் பார்வைக்கு தெரிவதில்லை.

அப்படிப் பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை நேரில் பார்த்தது போன்ற ஒரு அனுபவம்.இதை படித்த பின்பு வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன கஷ்டங்கலுக்காக வருத்தப் பட்டு மன உலைச்சலுக்கு உள்ளாவது
எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்றும் அந்த கஷ்டத்தில் இருந்து விடுபடுவது எப்படி என இனிமேலாவது யோசிக்க வேண்டும் என்றும் தெளிவு பிறந்தது..அனைவரும் முக்கியமாக பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது..

Hard Work Never Fails..

மேலும் சில பதிவுகள்