Hi friends ,என்னோட பேசுவீங்களா?

Hi friends ,என்னோட பேசுவீங்களா ?

ஹேர் friends ,இப்போ எந்த அரட்டை இழையும் running ல இல்லை தானே ?
நான் ஆரம்பிக்கலாமானு தெரியல ..உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோடவும் பேசுங்க :)

இந்த புத்தகம் வாங்கி வச்சிருக்கேன் படிக்க நேரம் இல்லாமல் படிக்க முடியவில்லை நீங்க சொன்னதும் இன்னைக்கே ஆரம்பிக்கிறேன் நிறைய நேரத்தில் நான் ரொம்ப சோர்வாகிடுவேன் என்னடா வாழ்க்கை இதுன்னு.

what r u doing now? any rain in Banlore?

ஹாய் சுசி,
இருபது வயசுல ஒரு விபத்து என் அம்மாவ என்கிட்ட இருந்து பிரிச்சது. அதையே என்னால தாங்க முடியல. இன்னைக்கு வரை தினமும் அம்மா photo வை பார்த்து பார்த்து அழுவேன். அம்மா கண்ணுக்கு தெரிந்த கடவுள். நீங்க எவ்ளோ கஷ்டபட்டு இருப்பிங்கனு எனக்கு புரியுது. எல்லா தோழிகளுக்கும் நா செல்றது ஒன்னு தான் இருக்கும் போதே அம்மாவ சந்தோசமா பாத்துக்கங்க. வீட்ல அம்மா இல்லாதப்ப மட்டும் நாம எல்லா வேலையும் செய்வோம் அதுவே இருந்தா ஒரு வேலையும் செய்ய மாட்டோம். அது தப்பு நம்மாள முடிந்த வேலைய அம்மாக்கு செய்யனும். நா அப்படி செய்யாதது இன்று வேதனையாக உள்ளது. கடைசி வரை நமக்காகவே உழைத்து உழைத்து எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காம போய்டறாங்க. அப்பறம் photo கு தான் சமைச்சு போடுறோம். இது நரக வேதனை இனியேனும் எல்லாரும் அம்மாவ நல்லா பாத்துப்பிங்கனு நம்புறன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஈஸ்வரி இங்க என்ன ..சமைச்சு சாப்ட்டுட்டு வீட்டை கிளீன் பண்ணி டைம் பாஸ் ஆகும் .அப்புறம் இன்டர்நெட் .அதோட husband ஆபீஸ் வொர்க் ஐ வீட்ல இருந்து செஞ்சு கொடுப்பேன் .

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம் :

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

சுசி உங்க ம் உதவி பன்ரீங்க சூப்பர் பா,
ரோஜா இங்க ஒரு வாரமா தினமும் மழை வருது பா,குட்டி பயனுக்கு லீவ் இருக்குமே,எப்படி இருகார் ரொம்ப வாலா இல்லை எப்படி ,
தேவி,நீங்க எந்த ஊரு பா,உங்கள பத்தி சொல்லுங்கலேன் பெங்களுர் பிடிக்குமா இங்க வந்துடுங்க பா ,சுபி ஆபீஸ்ல இருந்து கிளம்பியாச்சா,
எனக்கும் நேரம் ஆச்சி நானும் கிளம்பரேன் நாளைக்கு பன்னலாம்

அஸ்விதா நீங்க சொல்றது ரொம்ப சரி பா . தாயை பிரிஞ்சு இருக்குறது எவ்ளோ கொடுமையான விஷயம் நு எனக்கு நல்லாவே தெரியும் .அதுவும் விபத்துல பரி கொடுத்த உங்களுக்கு எப்படி இருக்கும் .ஒருதங்க நம்ம கூட இருக்கும்போது அவங்க அருமை தெரியாது.நான் கஷ்ட படுத்தினது என் இரண்டாவது அம்மாவை .நான் 3 st படிக்கும்போது என் அப்பாக்கு இரண்டாவது திருமணம் நடந்தது .அப்போ என் இரண்டாவது அம்மாக்கு 16 வயசுதான் .அந்த வயசுல அவங்களுக்கு என்ன தெரியும் ..பாவம் .நான்தான் அவங்கள சரியா புருஞ்சுகாம நெறைய கஷ்ட படுத்தி இருக்கேன் .எனக்கு திருமணம் நிச்சயமாகும்போது தான் உணர்ந்தேன் .நமக்கு வரும்கால கணவனை பற்றி எவ்வளவு ஆசைகள் ,கனவுகள் .இப்படி தானே அவங்களும் கனவுகளோட இருந்துருப்பாங்க .பெற்றோரின் வருப்புருதலால தன்னை விட 20 வயது பெரியவங்களை மணந்து ,திருமணம் ஆகும்போதே இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றல் அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் ?அந்த வயசுல அவங்க அடிகிறதை திட்டுறதை எனக்கு பிடிக்கல .அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ புரியுது .அவங்க மூலமா எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சா .இப்போ நான், என் தம்பி,என் தங்கை ரொம்ப சந்தோசமா இருக்கோம் .என் இரண்டாவது அம்மா கு இப்போ 32 வயசு தான் .என்னை விட பத்து வயது தான் அதிகம் .

செண்பா ,கருவாச்சி காவியம் நான் ஆனந்த விகடன் ல தொடர் கதையா படிச்சிருக்கேன் பா.ரொம்ப நல்ல கதை .

by see u

ஹேர் friends ,என்ன யாராவது இருக்கீங்களா??

மேலும் சில பதிவுகள்