வல்சியம்

தேதி: April 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

பலாச் சுளைகள் - 10
வெல்லம் - 50 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி


 

பலாச் சுளைகளை பொடியாக நறுக்கவும். (மிக்சியிலிட்டு விப்பரில் ஒரு சுற்று சுற்றியும் எடுக்கலாம்).
நறுக்கிய பலாச் சுளைகளுடன் 2 கரண்டி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெல்லத்தை பொடித்து கால் கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் (அல்லது நாண் ஸ்டிக் பாத்திரத்தில்) வேக வைத்து லேசாக மசித்த பலாச் சுளைகள், கரைத்து வடிகட்டிய வெல்லம், ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். ஓரளவு சுருண்டு வரும் போது ஏலக்காய் பொடி, மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் கிளறவும். (விரும்பினால் இப்போது கால் கப் தேங்காய் துருவல் சேர்க்கலாம். தேங்காய் சேர்த்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது).
அனைத்தும் சேர்ந்து நன்றாக சுருண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான வல்சியம் தயார்.

இது கேரளாவில் பிரபலமான சக்க வல்சியம் அல்லது சக்க வரட்டியது. நன்றாக சுருள கிளறி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். சக்க பிரதமன் என்னும் பலாப்பழ பாயாசம் செய்ய இதையே எப்போது வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக அளவில் செய்யும் போது ஒரு கிலோ பலாச் சுளைக்கு அரை கிலோ வெல்லம் என்ற அளவில் சேர்க்கலாம். பலாச் சுளையின் இனிப்பை பொறுத்து வெல்லத்தின் அளவை சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம். நாண் ஸ்டிக் பாத்திரத்தில் செய்யும் போது மேலே சொன்ன அளவுக்கு நான் 2 தேக்கரண்டி நெய் மட்டுமே சேர்த்தேன். சாதாரண பாத்திரத்தில் செய்யும் போது 2 மேசைக்கரண்டி அளவு நெய் தேவைப்படும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... :) பார்த்ததுமே எப்ப செய்யலாம்னு யோசிக்க வெச்சுடுச்சு. சீக்கிரம் செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சக்க வரட்டி எனக்கு பிடிச்ச அயிட்டம் பா..நீங்க அழகா செய்து காமிச்சுருக்கீங்க. என் அம்மாவும் நல்லா செய்வாங்க.( நான் ஒன்லி சாப்பிடுவேன்..;) ) என் அம்மா வீட்டுல பலாப் பழுத்த உடனே செய்து வெச்சுக்கிற டிஷ். வருசம் முழுவதும் ஏதுனா விஷேஷத்துக்கு பாயசம் செய்ய வுபயோகிப்பாங்க. அதனால் தேங்காய் சேர்க்கமாட்டாங்க, நிறைய நெய் சேர்ப்பாங்க. நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பை வெளியிட்ட டீம் க்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சந்தோஷம் வனி! யோசிக்காமல் சீக்கிரம் செய்துடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிமேல் நீங்களும் செய்யுங்க. நிறைய அளவில் செய்யணும்னாதான் கிளறுவதற்கு ரொம்ப நேரம் எடுக்கும். மேலே சொன்ன அளவில் செய்ய எனக்கு அரை மணிநேரம்தான் ஆச்சுது. எங்க அம்மாவும் பலாப்பழ சீசனில் அதிக அளவில் செய்து வைப்பாங்க. வெண்கல உருளியில் நிறைய நெய் சேர்த்து செய்யும் போதே அந்த வாசம் ஆளைத் தூக்கும் :). நான் செய்தது நெய் குறைவா சேர்த்த ஹெல்தி வெர்ஷன் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவி வல்சியம் கொடுத்து 2 தங்கபதக்கத்தை வசியப்படுத்திட்டீங்க வாழ்த்துக்கள்:)
தேனில் விழுந்த பலாச்சுளை மாதிரி இது வெல்லத்தில் விழுந்த பலாச்சுளையா??
நான் இன்னும் சாப்பிட்டதில்ல..ஒரு வருஷம் வெச்சிருக்கலாம்னு சொல்றீங்க, எப்படியும் ஸ்டாக் வெச்சிருப்பீங்கதானே...இதுக்காகவே பத்தாம்க்கு படையெடுக்கலாம்னு இருக்கோம்.
குறிப்பு பார்த்தாலே இனிப்புசுவை தெரியுது:) வாழ்த்துக்கள் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//ஒரு வருஷம் வெச்சிருக்கலாம்னு சொல்றீங்க, எப்படியும் ஸ்டாக் வெச்சிருப்பீங்கதானே...இதுக்காகவே பத்தாம்க்கு படையெடுக்கலாம்னு இருக்கோம்.//

10 சுளை வச்சு செய்ததை எங்கே வருடக்கணக்கில் வைக்க :(. ஊருக்கு வந்தால்தான் மொத்தமாக செய்வது எல்லாம். நீங்க பத்தாம் க்கு வரும் போது ஒரு பலாப்பழத்தோட வாங்க நாம சேர்ந்தே செய்யலாம் :)

நன்றி அருள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதை பனைவெல்லம் சேர்த்து செய்யலாமா?

அன்புடன் ஜெயா