உருளைக்கிழங்கு மட்டன் ஃப்ரை

தேதி: October 13, 2006

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - ஒரு கிலோ
சின்ன உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - நான்கு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - பத்து பற்கள்
தக்காளி - நான்கு
மிளகாய்தூள் - நான்கு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
பட்டை - ஒரு துண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை


 

மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அரைதேக்கரண்டி உப்புத்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும். தக்காளி வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற அடிகனமான சட்டியில் எண்ணெயை காயவைத்து பட்டை வெங்காயம் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.
பிறகு எல்லாத்தூளையும், உப்புத்தூள், கரம்மசாலாவையும் போட்டு வதக்கி இரண்டாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியை கொட்டி வதக்கி வெந்தக்கறியை போட்டு நன்கு கிளறவும்.
தண்ணீர் ஊற்றாமல் மசாலாவில் உள்ள நீரிலேயே உருளைக்கிழங்கு வேகும்படி அடிக்கடி கிளறிவிடவும்.
கிழங்கு வேகும்வரை மிதமான அனலில் வைத்திருந்து நன்கு சுருள வதக்கி கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று வீட்டில் செய்தேன் நல்ல ருசியாக இருந்தது.நன்றி மேடம்.

ஹலோ சுகு எப்படி இருக்கின்றீர்கள்? இந்த குறிப்பை செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்க்கு மிக்க நன்றி. மேலும் நான் குறிப்பின் செய்முறையில் வெங்காயம் வதக்கிய பிறகு இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும் என்ற விளக்கம் கொடுக்க தவறியுள்ளேன்,இன்று தான் அதை கவனித்தேன். இருந்தாலும் முறையாக செய்துப் பார்த்து இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள். விட்டுப் போன அந்த வரிகளை சேர்த்து எழுதிவிட்டேன்,நன்றி.

நலமா?உங்கள் பாரட்டிற்கும் அன்பிற்கும் நன்றி.உங்கள் குறிப்பை சரியாக செய்ததற்கு பாராட்டும் உங்கள் குணத்திற்கு ஒரு சல்யூட்.

anbudan
vidyavasudevan,

seekiram 300 kurippugal kodukka
vazhthukkal.
asathareenga madam,
keep it up.

anbudan

anbudan

Dear manohari madam,
congrates,
if u give the recipies very fast like this how can we try all these recipies madam,
just for fun i told like this,

kalakkareengale madam,
keep it up,
seekiram 300 kurippugal kodukka vazhthugiren,
Vidyavasudevan

anbudan

ஹலோ வித்யா எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நிச்சயமாக நீங்கள் தமாசாக எழுதியிருந்தது போலவே நானும் பல முறை யோசனை செய்திருக்கின்றேன். ஆனால் என்னைப் பொருத்தவரையில் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. ஆகவே என்னென்ன செய்துப் பார்த்திருக்கின்றேனோ அவைகள் ஞாபகத்திற்க்கு வரும் போதெல்லாம் அறுசுவையில் எழுதிவிடுவேன். ஆகவே தான் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. முறையாக அம்மாவிடமிருந்தோ, அத்தையிடமிருந்தோ நான் சமையலை கற்றுக் கொள்ளவில்லை. நானாக செய்துப் பார்த்து பழகியது தான்.

நீங்கள் கூறியுள்ளதுப் போல் முன்னூறு குறிப்புகளை கட்டாயம் கூடிய விரைவில் கொடுப்பேன், ஆனால் எனது இலக்கு அதுவல்ல சமையல் என்பது ஒரு கடல், அதில் எடுக்க எடுக்க வந்துக் கொண்டே இருக்கும். ஆகவே தாங்கள் அனைத்தையும் செய்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பிடித்ததை செய்யுங்கள் பிடிக்காததை விட்டு விடுங்கள். தங்களின் கடிதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது. மிக்க நன்றி.

அன்புள்ள வித்யா
திருமதி செய்யது கதீஜா அவர்களுக்குரிய வாழ்த்து பகுதியில் uk வில் இல்லை என்று சொல்லியிருந்ததை பார்த்தேன். நான் UK வில் தான் இருக்கிறேன். இங்கு நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் விருப்பமிருந்தால் சொல்லுங்கள்

anbudan

I am living in a town called HEREFORDSHIRE, its 150 miles from London. I cant get indian vegetables. we have to go to Birmingham which is one and half hours travel from our town.
i am very happy that u r also in uk. thank u for the reply sugu.
exactly in which place are u staying, are u working, i am a house wife have two kids. i am very happy to read the topics in the forum. take care sugu, keep in touch.bye bye.

Vidyavasudevan.

anbudan

நலமா? நான் ஈஸ்ட் ஹாம் (Eastham)பகுதியில் இருக்கிறேன். எனக்கு 11 மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறாள்,வீட்டில் தான் இருக்கிறேன்.பொழுது மகளுடனேயே கழிந்து விடும்.

anbudan

nalame, from 11th april to 15th april i was in london. just we went to london to spend few days. we stayed in travelodge and on 14th and 15th we visited Eastham.
oh sugu i really missed you. whats your daughter's name. My daughters name is vaijayanthi she is in year 1, my sons name is vikram and he is 18 months old.My brothers friends house near Ayngaran video shop in eastham, so we came to eastham to see him. if we were in touch through arusuvai before, we would have met. ok no problem, thanks for the reply sugu. take care suganya, keep in touch. bye bye.

anbudan