மஸ் ஹுனி ரோஷி

தேதி: April 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (7 votes)

 

டூனா மீன் - ஒரு டின்
மைதா மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு தூள் - சிறிது
எலுமிச்சை - பாதி
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு


 

மைதா மாவுடன் உப்பு கலந்து வெது வெதுப்பான நீர் விட்டு பிசைந்து வைக்கவும். டூனா மீனை பிழிந்து உதிர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.
மீன் கலவையுடன் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பின் தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கைகளால் பிரட்டி வைக்கவும்.
மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து லேசாக திரட்டி உள்ளே மீன் கலவையை வைத்து மூடவும்.
அதை ஸ்டஃப்டு பராத்தா போல் சற்று திக்காக திரட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.
சுவையான மஸ் ஹுனி ரோஷி தயார்.

மஸ் ஹுனி ரோஷி என்பது மாலத் தீவின் பிரபலமான உணவு வகை. மஸ் என்றால் மீன். ஹுனி என்றால் தேங்காய். ரோஷி என்பது ரொட்டி. இதில் எப்போதும் ஸ்மோக்டு டூனா தான் பயன்படுத்துவார்கள் (நான் ஸ்மோக்டு பயன்படுத்தவில்லை). சில நேரம் மாவிலும் தேங்காய் துருவல் சேர்த்து பிசைவார்கள். தேங்காய் இல்லாமலும் இதே போல் செய்யலாம். அதன் பெயர் மஸ் ரோஷி. நான் மைதா மாவில் மட்டும் செய்யாமல் பாதி கோதுமை மாவும், பாதி மைதா மாவும் கலந்து செய்திருக்கிறேன். இவர்கள் மாவில் எண்ணெய் மற்றும் வெது வெதுப்பான நீர் விட்டு பிசைவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மஸ் ஹுனி ரோஷி பார்க்கவே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு. வழக்கம் போல படங்கள் கிறிஸ்டல் கிளியர்.விளக்கமும் அருமை.செய்வதும் சுலபம் போல... எல்லாமே கை வசம் இருக்கு. நாளைக்கு செய்துட்டு எப்படி இருந்துதுன்னு சொல்கிறேன் வனி.உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.( இதுக்கு சைட் டிஷ் என்ன செய்யலன்னும் சொல்லுங்க)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மஸ் ஹுனி ரோஷி படங்களே பார்க்க அழகா இருக்கு, ரொம்ப ரொம்ப அருமைங், :-) வாழ்த்துக்கள்ங்க

நட்புடன்
குணா

புதுசு புதுசா சமையல் குறிப்பு தரிங்க.ரூம் போட்டு யோசிப்பிங்கலோ.(ஹிஹிஹி...........)வனி சிஸ்டர் வழக்கம் போல சமையல் குறிப்புல கலக்கிட்டிங்க.பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.super.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எடுத்து சாப்பிட்டுடுங்க. ;) அவசியம் செய்துட்டு சொல்லுங்க. இதுக்கு தயிர் நல்லா இருக்கும். ஆனா நான் எதுவும் சைட் டிஷ் பண்றதில்லை... அதுவே காரம் நல்லா இருக்கும். இங்க இதை ரொம்ப சின்னதா மாலை நேர சிற்றுண்டியா ஷார்ட் ஈட்ஸா செய்வாங்க. அதனால் நோ பக்க உணவு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இன்னிக்கு டின்னர்க்கு மஸ் ஹூனி ரோஷி செய்தேன். என்னிடம் டின் டுனா இல்லை. அதனால் வேக வைத்து உதிர்த்த வஞ்சிரம் மீன் சேர்த்து செய்தேன். ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு. இதுவே காரசாரமாக இருந்ததால் சைட் டிஷ் எதுவும் தேவைப்படலை. கொஞ்சம் தயிர் வைத்து சாப்பிட்டேன். சூப்பர் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கடகடன்னு செய்து சொல்லி ஃபோட்டோவும் போட்டு அசத்திபுட்டீங்க :) மகிழ்ச்சி. உங்களுக்கு பிடித்ததில் அளவில்லா மகிழ்ச்சி. நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா