கிஸ்மிஸ், பச்சை அரிசி


கிஸ்மிஸ் என்று குறிப்பிடுவது எதனை?
பச்சை அரிசிஎன்று குறிப்பிடுவது எந்த அரிசியை?

 


உலர்ந்த திராட்சையை (Raisin) கிஸ்மிஸ் என்று சொல்லுவார்கள்.

நெல்லில் இருந்து அரிசியை பிரித்து எடுக்கும் போது இரண்டு முறைகளில் பிரித்து எடுப்பர். நெல்லை அவித்து (அவித்தலை புழுங்கல் என்றும் சொல்லுவர்), பிறகு உலர்த்தி, அரிசியை பிரித்து எடுப்பார்கள். இந்த முறையில் பிரித்து எடுக்கப்படும் அரிசியை புழுங்கல் அரிசி என்பர். அரிசியை அவிக்காமல் அப்படியே உலர்த்தி, அரைத்து, தவிடு நீக்கப்படும் அரிசியை பச்சரிசி என்பார்கள். பிரித்து எடுக்கும் முறையை வைத்துதான் அரிசியை பச்சை அரிசி, புழுங்கல் அரிசி என்று கூறுகின்றோம். அரிசி ரகத்தை, வகையை வைத்துக் கிடையாது. சில ரக அரிசியில் புழுங்கலும் கிடைக்கும். பச்சரிசியும் கிடைக்கும். சிலவற்றை அவித்து அரைத்தால்தான் அரிசி நன்றாக இருக்கும். சில ரகங்களை அப்படியே அரைக்க வேண்டும்.

விளக்கங்கள் நன்றாக உள்ளது admin அவர்களே
ஆனால் , பச்சை அரிசியில் இரண்டு வகை உண்டு என நினைக்கிறேன்.
1). சிவப்பு பச்சை அரிசி 2).வெள்ளை பச்சை அரிசி
அதே போல் புழுங்கல் அரிசி என்று நீங்கள் கூறுவது குத்துஅரிசியையா? இதிலும் இரண்டு வகை உண்டு என நினைக்கிறேன்.
1).சிவப்பு பு.அரிசி 2). வெள்ளை பு.அரிசி
எமது நாட்டில் இதில் தான் அதிகமாக சாதம் செய்வோம். எனக்கு கூட இது பல நாட்கள் சந்தேகம் எந்த அரிசியை சேர்க்க சொல்கிறார்கள் என்று. விளக்கம் தரமுடிமா?

கருத்திற்கு நன்றி

பச்சை அரிசி என்று எதைக் குறிப்பிடுவார்கள் என்பது கேள்வியாக இருந்தபடியால், பச்சை அரிசி என்றால் என்ன.. புழுங்கல் அரிசி என்றால் என்ன.. என்பதை பற்றி மட்டும் நான் விளக்கம் அளித்து இருந்தேன். நீங்கள் பச்சை அரிசியில் உள்ள வகைகளை(நிறத்தை வைத்து) சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நீங்கள் குத்துஅரிசி என்று குறிப்பிடுவது கைக்குத்தல் அரிசியா?

தமிழகத்தில் சிவப்பு அரிசி என்பது அதிகம் உபயோகத்தில் இல்லை. சில கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். எங்கள் கிராமத்தில் கறுப்பரிசி என்று சொல்லுவார்கள். அரிசி சிவப்பும், கறுப்பும் கலந்த வண்ணமாய் இருக்கும். கேரளாவிலும், கேரளா எல்லையை ஒட்டிய தமிழகப் பகுதிகளிலும் சற்றே சிவப்பு வண்ணம் கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். மற்றபடி குறிப்புகளில் சொல்லப்படும் அரிசிகள் யாவும் வெள்ளை நிற அரிசிதான். (கவுனி அரிசி பற்றி மன்றத்தில் ஒரு பதிவு உள்ளது. தேடிப்பார்க்கவும்.)

அரிசி மாவு தயாரிக்க, பிரியாணி, எலுமிச்சை சாத வகைகள் தயாரிக்க, இப்படி பலவற்றிற்கும் பச்சை அரிசிதான் உகந்தது. உணவுவிடுதிகளில் பெரும்பாலும் பச்சை அரிசியில்தான் சாதம் வடிப்பார்கள். (சென்னை சரவணபவன் போன்ற உணவுவிடுதிகளில் நமது விருப்பத்திற்கு ஏற்றார்போல், பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதம் வாங்கிக் கொள்ளலாம்.)

நமது தளத்தில் பெரும்பாலும் அரிசி என்று குறிப்பிடுவது வெள்ளை நிற பச்சை அரிசியைத்தான். அது புழுங்கல் அரிசி என்றால் புழுங்கல் அரிசி என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

(தம்பி சிவா இதைப் படிக்க நேர்ந்தால் இன்னும் பிரமாதமாக விளக்கம் அளிப்பார் என்று நம்புகின்றேன்.)

குத்து அரிசி என்பது கைகுத்து அரிசி தான், கேரளவில் இந்த அரிசி தான் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள், என நான் அறிந்தேன்.
பச்சை அரிசியும் பொன்னி அரிசியும் ஒன்றா?
பச்சை அரிசிக்கு பதிலா பொன்னி அரிசி பாவிக்கலாமா?
நன்றி admin அவர்களே

எங்கள் நாட்டில் நடைமுறை(இலங்கை-யாழ்ப்பாணம்

நான் எனக்கு தெரிந்ததை உங்கள் முன் வைக்கிறேன்.

அதாவது நெல்லை அவித்து உமியை நீக்கி வரும் அரிசியைக்குத்தரிசி என்பார்.(உமி என்பது நெல்லின் வெளிப்பகுதி)
அது நிச்சயமாக கையினால் தான் குத்தினதாக இருக்கவேண்டியதில்லை.
இந்த நாட்களில் இயந்திரத்தில் உமி நீக்கப்படுகிறது.
நெல்லை அவிக்காமல் உமியை நீக்கி அந்த அரிசியை பயன்படுத்துவது இந்த அரிசியை பச்சையரிசி எனப்படும்.
இது நெல்லினத்தைப்பொறுத்தது.வெள்ளையாயும் இருக்கலாம், சிவப்பாகவும் இருக்கலாம்.

fnly
giridaran

fnly
giridaran

பச்சரிசியும் பொன்னியரிசியும் ஒன்று அல்ல.பொன்னி அரிசி என்பது புழுங்கலரிசியில் ஒரு ரகத்தைச் சார்ந்தது.ஆமாம் பச்சையரிசிக்கு பதிலாக பொன்னியரிசியை பயன் படுத்தலாம்.ஆனால் பச்சையரிசியை கொண்டு தயாரிக்கும் பலகாரங்களை தவிர்த்து பிரியாணி,புலாவ் போன்ற சோறு வகைகளுக்கு பொன்னியரிசியை பயன்படுத்தலாம்.காரணம் பொன்னியரிசியின் வேக்காடும், பச்சையரிசியின் வேக்காடும் கிட்ட தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.

நன்றி manohari
மற்றும் உங்கள் குறிப்புக்கள் மிகவும் நன்றாக உள்ளது. ஒரு சந்தேகம் மகரோனி என்று எதனை குறிப்பிட்டு இருந்தீர்கள் உங்கள் குறிப்பில்.

நன்றி திருமதி தயாபரன் வஜிதா அவர்களுக்கு, மேக்ரோனி(macaroni) என்பது பாஸ்டா(pasta) அல்லது ஸ்பெகதி (spagethi)நூடுல்ஸ் வகைகளில் இதுவும் அதன் வகையைச் சேர்ந்ததே. ஆனால் வடிவம் தான் வேறு.கையின் முட்டியைப் போன்று வளைந்த வடிவத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் ஆங்கிலேயர்கள் இதனை எல்போ பாஸ்டா( elbow pasta) என்றும் கூறுவார்கள்.மஞ்சள் நிறத்தில் இருக்கும்.வெந்தபிறகு வெளிர் மஞ்சள் நிறமாகிவிடும்.இதனைத் தான் எனது குறிப்பில் குறிப்பிட்டிருந்தேன்.ஒகே வா.

நன்றி மனோகரி. நான் மேக்ரோனி சாப்பிட்டு உள்ளேன், ஆனால் இதனை இவ்வாறு கூறுவார்கள் என்று தெரியாது.