கார்ன் ப்ரிட்டர்ஸ்

தேதி: April 29, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

கார்ன் - ஒன்று
முட்டை - 2
ஆல் பர்பஸ் மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் (விரும்பினால்) - கால் தேக்கரண்டி
பொடித்த மிளகு - அரை மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - ஒரு பல்
பச்சை மிளகாய் - ஒன்று
பொடியாக நறுக்கிய சிவப்பு குடை மிளகாய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை
உப்பு


 

கார்னை உதிர்த்து வெறும் கடாயில் வறுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். (காரம் குறைவாக வேண்டுமெனில் பச்சை மிளகாயில் விதைகளை நீக்கிவிட்டுச் சேர்க்கவும்).
ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பொடித்த மிளகு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
முட்டைக் கலவையில் குடை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கார்ன், கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
அதனுடன் ஆல் பர்பஸ் மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
தவாவில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் ஒவ்வொரு கரண்டியாக கார்ன் கலவையை விட்டு வேக வைக்கவும். (கலவையை பரப்பி விட தேவையில்லை).
இரண்டு பக்கமும் வேகவிட்டு, வெந்ததும் எடுக்கவும். சுவையான கார்ன் ப்ரிட்டர்ஸ் தயார். விரும்பிய டிப்புடன், சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். :) சீக்கிரம் செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Super

super neeyama! all purpose flour illana veyra enna podalam?

குறிப்பை வெளியிட்ட டீமிற்கு நன்றி

Kalai

நன்றி ..செய்து பாருங்க :)

Kalai

நன்றி வாணி :)

Kalai

நன்றி சசிரேகா.மைதா போடலாம் :)

Kalai