மொச்சை வடை

தேதி: May 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

பெரிய மொச்சை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிட்டிகை
எண்ணெய - பொரிக்க

மொச்சையை 10 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
ஊறியதும் அதை மிக்சியில் அரைக்கவும்.
அரைத்த கலவையுடன், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், சோள மாவு மற்றும் உப்பு போட்டு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்த மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான மொச்சை வடை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

புதுசா இருக்கு. நல்லா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி,வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி,
புதுமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என்கிட்ட இதைவிட ரொம்பவும் சின்னதா மொச்சை இருக்கு..அதில செய்யலாமா ?

Kalai

நன்றி,கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஒவ்வொரு மொச்சைக்கும் தனிதனி சுவையுண்டு,நான் செய்தது இல்லை,நீங்க செய்து பாருங்க.வித்தியாசமான சுவை கிடைக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி புதுமையான ரெசிபி கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி,அருள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.