பாலக்கீரை மசியல்

தேதி: May 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (13 votes)

 

பாசிப்பருப்பு - ஒரு கப்
பாலக்கீரை - ஒரு கட்டு
சீரகம் - 2 தேக்கரண்டி
தனியா - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - ஒன்று (விரும்பினால்)
கடுகு, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க


 

கீரையை சுத்தம் செய்து உப்பு நீரில் போட்டு நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
பருப்பைக் களைந்து, மஞ்சள் தூள், பூண்டு, பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு, மீதமுள்ள சீரகம் போட்டு தாளிக்கவும். (இரும்பு வாணலி (அ) இண்டாலியம் வாணலியில் செய்தால் சுவை நன்றாக இருக்கும்). பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு தனியாவை கையில் வைத்து நசுக்கி சேர்த்து கிளறவும்.
தக்காளி நன்கு குழைந்தவுடன் கீரையைப் போட்டு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும்.
கீரை நன்கு மசிந்தவுடன், வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பாசிப்பருப்பிற்கு அடிப்பிடிக்கும் தன்மை அதிகம். எனவே அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும். கீரையை மூடிவைக்காமல் திறந்து வைத்து சமைப்பதே சாலச்சிறந்தது. விருப்பத்திற்கேற்ற பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். இதை கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ வைத்துக்கொள்ளலாம்.
சுவையான பாசிப்பருப்பு பாலக்கீரை மசியல் தயார். சாதம், சப்பாத்திக்கு ஏற்ற இணை இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முகப்பிலிருக்கும் பசுமையான படத்தின் அழகில் மயங்கி உள்ளே வந்தேன் :-) பாத்தா உங்கள்து :-) படங்கள் அருமை ...சுவையும் அருமையாகத்தான் இருக்கும்...வாழ்த்துக்கள் :-)

Don't Worry Be Happy.

palakeerai is very nice

படமும் அருமை, குறிப்பும் அருமை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருள் இந்தாங்க பிடியுங்க 5 ஸ்டாரயும்... பாலக்கீரை மசியல் அவ்வளவு அருமை... அருமை.. செய்து சாப்பிட்டாச்சு. அப்சரவோட சீரக ரொட்டியுடன் உங்க பாலக்கீரை மசியல் மற்றும் வனியின் ஸ்பைசி சிக்கன் வெகு ஜோர்.. நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருள்,
தனியா சேர்த்து சூப்பர் வாசமா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹெல்தி குறிப்பு :) வாழ்த்துக்கள் அருள் :)

Kalai

உங்க பதிவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது:)
மிக்கநன்றி ஜெய் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாராட்டிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி சமைத்து பார்த்து பதிவிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு:)
வாழ்த்திற்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி தனியா சேர்த்தாலே சுவைகூடும்:)
வாழ்த்திற்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கலை:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாலக்கீரை மசியல் நல்லா இருந்துச்சு பசங்களுக்கு ரொம்ப பிடிச்சது நெய் போட்டு சாப்பிட்டோம் அப்படி ஒரு டேஸ்ட்.

சமைச்சு சாப்பிட்டு பதிலளித்ததுக்கு மிக்க நன்றி தேவி:)
குழந்தைகளுக்கும் பிடிச்சதா, ரொம்ப சந்தோஷம்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Hello madam, unga recipe super a iruku. palakeerai thavira vera entha keeraiyil seiyalam madam.

Reply mam please.

நல்ல குறிப்பு.கடைசி படம் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

hello mam, enaku reply a kodukalaiye mam.

அருள்,

பாலக்கீரை மசியல் நல்ல குறிப்பு! தனியா நசுக்கி சேர்ப்பது புதுசா இருக்கு, அடுத்தமுறை சேர்த்து செய்திடறேன். முகப்பு படம் ரொம்ப அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஐஸ்கிரீம் உங்கபதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்கநன்றி:)
அனைத்து கீரைவகைகளிலும் சமைக்கலாம். சுவை மட்டும் கீரைக்கு கீரைமாறுபடும்.
நான் இப்பதான் உங்க பதிவை பார்த்தேன், அதனால்தான் உடனே பதில் அளிக்கமுடியவைல்லை. தவறாக நினைக்கவேண்டாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி முசி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுஸ்ரீ மிக்க நன்றி:)
கண்டிப்பா சேர்த்து பாருங்க சுவை நல்லா இருக்கும்:)

சுஸ்ரீ உங்க பேரு ஒவ்வொரு முறையும் டைப்படிக்கும் போதும் சரியா அடிக்கணும் ஒரே முறையிலனு நினைப்பேன் ஆனா முடியறதேயில்ல, நிஜமாவே 2,3 முறையாவது முயற்சிபண்ணித்தான் சரியா அடிக்கமுடியுது. மற்ற தோழிகளுக்கு எப்படினு தெரியல.
இதுகூட ஒரு சந்தோஷம்தான்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இன்று உங்க பாலக்கீரை மசியல் செய்தேன் சாததுடன் சாப்பிட ரொம்ப ரொம்ப அருமை அருமையா இருந்தது மிக்க நன்றி