வெங்காய பக்கோடா

தேதி: May 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (14 votes)

 

பெரிய வெங்காயம் - 4
சோம்பு - அரை மேசைக்கரண்டி
பூண்டு - 7 பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு கப்
மிளகாய் தூள் - முக்கால் மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, சோம்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீரை தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் வெங்காயக் கலவையை எடுத்து உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மொறுமொறு வெங்காய பக்கோடா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெங்காய பக்கோடா சுவையும் மணமும் பார்த்தாலே தெரியுது:) அறுசுவை குழுவினருக்கு வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆசைய காட்டபுடாது... இன்னைக்கு ஈவினிங் டீயோட போட்டுடுவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெங்காய பக்கோடா சூப்ப்பர்ர்ர்! க்ரிஸ்ப்பினெஸும், வாசனையும் சேர்ந்து சும்மா அமர்க்களமா இருக்கு டீம்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அட இத தான் எதிர்பார்த்தேன் கரைக்க்ட்டா கொடுத்துட்டீங்க நன்றி, இன்னக்கி ஈவினிங் ஸ்நாக் ரெடி.

வறுத்த அரிசி மா சேர்க்க வேண்டுமா அல்லது வறுக்காத அரிசிமா சேர்க்க வேண்டுமா?