பேக்டு பிஷ்

தேதி: May 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

முழு மீன் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
குடைமிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
தந்தூரி மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - ஒன்று
உப்பு


 

மீனை சுத்தம் செய்து அதில் ஆங்காங்கே கீறி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடை மிளகாயை நறுக்கிக் வைக்கவும்.
தூள் வகைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்துள்ள மசாலாவை மீனின் மீது நன்றாக பூசி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் பேக்கிங் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி மீனை வைத்து பேக் செய்யவும்.
இடையிடையே மீனை திருப்பிவிட்டு, ஆலிவ் ஆயில் தெளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாயை மேலே தூவி, 10 நிமிடம் வேக விடவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முசி குறிப்பு மிக அருமை:)
வீட்ல அனைவருக்கும் மீன் உணவு ரொம்ப பிடிக்கும். விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு:) ஆனா இது போல முழுமீன் இங்க கிடைக்குமானுதான் தெரியல. கிடைச்சா சமைச்சு பார்த்துட்டுத்தான் மறுவேலை.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இதை செய்து பார்க்கபோறேன். நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்

Kalai

ஹெல்தி குறிப்பு! கலர்ஃபுல்லா நல்லாருக்கு, வாழ்த்துக்கள் முசி!

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.கிடைக்கும் போது,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி.சுஸ்ரீ.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹெல்தி குறிப்பு. மீன் வடிவ தட்டில் வைத்தது அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

meen paakavay supperra erukku ,yavalavu nayram bak pannanum ,yavalavu digere la bak pannanum nu solunga pa