பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

//உன் வாழ்க்கை உன் கையில். ஒரு வயசுக்கு அப்பறமும் அப்பா அம்மா பின்னாடியே பேச்சை கேட்டுகிட்டு சுத்தினா எதுவும் செய்ய இயலாது//

அட உங்க வாழ்க்கையை நீங்கதான் வாழணும். சும்மா எல்லாத்துக்கும் அம்மா அப்பான்னு நிற்காதீங்கன்னு சொல்றாங்க. சரியாத்தானே சொல்றாங்க. சொந்தக் கால்ல நில்லுங்கப்பா :)

//அந்த காலத்து வைத்தியம் தான் செய்யனும்னு மாமியார் சொன்னா மறுமகள் பயப்பிட தான் செய்வாங்க. இன்னைக்கு நாம இருக்க வாழ்க்கை முறை அவங்களுக்கு தெரியாது, தன் பிள்ளைக்கு ஏதும் ஆயிடுமோன்னு பயம் வர தான் செய்யும்.//
பெற்றோரின் எண்ண ஓட்டங்கள் முந்தைய தலைமுறைக்கானது. அது இன்றைய கால கட்டத்துக்கு சரிவராது அப்படீங்கறாங்க. ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நாம் பெற்றோரிடம் அறிவுரை கேட்பது, நமக்கு அறிவு இல்லை என்பதாகவோ,அவர்களை சார்ந்தே இருப்பதாகவோ அர்த்தம் இல்லை.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் அந்த நல்ல உள்ளங்களின் அறிவுரை நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையினால் தான் //

அறிவுரையும் ஆலோசனையும் கேட்பதில் என்ன தவறு. இது எப்படி சார்ந்து இருப்பதாகும்னு கேட்கறாங்க. ஒரு விஷ்யத்தை கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. நியாயமாத்தான் கேட்டிருக்காங்க. பதில் ப்ளீஸ் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//தன்னம்பிக்கை வளர ஒரு முறை படித்தால் போதாதா நடுவரே மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா??

திருமணத்திற்கு முன் பெற்றோர் சொல்லும் அறிவுரையை கேட்டலே போதுமே...//

திருமணத்துக்கு முன்னாடி பெற்றோர் சொல்லும் அறிவுரையை செயல்படுத்தினேலே போதுமே. கல்யாணத்துக்கு அப்புறமும் ஏன் தொல்லை கொடுக்கறீங்க அப்படீங்கறாங்க. ஒரு வேளை அப்போ சொன்ன அறிவுரை ஏதும் காதில் விழுந்திருக்காதோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நாமே படகை கத்துகிட்டு ஒட்டி தனியா போவறதை விட எக்ஸ்பீரியன்ஸ் ஆளு நம்ம கூட இருக்கறச்சே , புயல் மழை வந்தா கூட ஹெல்ப் பன்னுவாயங்கள்ள , அதுக்கு தான் அவங்களையும் ஓட்டத்துல சேர்த்துக்க சொல்லுறது .//

வாழ்க்கை கடலில் பயணிக்க அனுபவ சாலிகளையும் பக்கத்துல வச்சுக்கோங்கப்பா அப்படீங்கறாங்க.

//பெற்றோரிடம் பிரச்சினைகளை சொல்வது என்பது பிரச்சினைகள் சரியாக மட்டும் இல்லைங்க நம் மனதிற்கு ஒரு வடிகால் தான்.//

மனக்கவலைகளை பகிர்ந்து கொண்டால் அது குறையுமே. வெளியாட்கள்கிட்ட சொல்வதை பெற்றோரிடம் சொல்வது நல்லதுதானே அப்படீங்கறாங்க.

//எத்த தின்னா பித்தம் தெளியும் (ஹாய் நானும் பழமொழி சொல்லிட்டேன் ) அப்படி ஒரு சூழ்நிலை இருக்கறப்போ சொல்லுங்கப்பா பெற்றொஇடமும் சொல்லுங்க .

பித்தத்துக்கு அல்லோபத்தி மாதிரி சைட் இபக்த்ஸ் இருக்கற மேடிசினை கொடுக்காம ஆயுர்வேதிக் கொடுப்பாங்க. கொஞ்சம் கசந்தாலும் உடம்புக்கு , வாழ்க்கைக்கும் நல்லல்துப்பா நல்லது .//

பிரச்சினைகளை தனியே சமாளிக்க முடியாமல் திணறும் போது பெற்றோரிடம் சொல்லுங்க. அவங்க சொல்லும் அறிவுரை பக்க விளைவுகள் இல்லாததுன்னு சொல்றாங்க

எப்படீல்லாம் யோசிக்கறாய்ங்கய்யா!!! :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வளர்ந்த தம்பதிகள் அவரவர் பெற்றோர்க்கு இன்னும் குழந்தைகளாக தெரியலாம் ஆனால் அது அந்த பெற்றோருக்கு மட்டுமே,.

ஆனால் அந்த வளர்ந்த குழந்தைகள் அவர்கள் குழந்தைகளுக்கும் பொறுப்பான பெற்றோர்கள்...என்பதினால் தன் ப்ரச்சனையை தானேதான் தீர்க்க தெரியணும்..

இரு பெற்றோர்களுமே தம்பதிகளில் ஒருவருக்கு மட்டுமே பெற்றோர் என்பதனால் அந்த ஒருவர் மீதுதான் பாசமும் ,உரிமையும்,முழுமையான புரிந்துகொள்ளலும் இருக்கும்..மருமகளை மகளாய் பார்ப்பதும் மாமியாரை அம்மாவாய் பார்ப்பதும் கேட்க அருமையாய் இருந்தாலும் இந்த அருமை எங்கோ சிலருக்கு மட்டுமே சாத்தியம் என்று இல்லாமல் எல்லாருக்கும் சாத்தியம் என்றோரு நாள் வந்தால் மட்டுமே பெற்றோர்கள் நியாயமான அணுகுமுறையையை ஓரளவு(அதுவும்) தான் சொல்லலாம்

அதனால் இருவர் சம்பந்தமான ப்ரச்சனையில் சரி,தவறு பக்கங்கள் ஆராய்வது ஒருதலைபட்சமாகவே இருக்கும்(ஒரு சிலர் நியாயமாக இருக்கலாம்..ஆனால் ஒரு சிலர் மட்டுமே) அதனால் சொல்ல வேண்டாம்

அப்புறம் பக்கத்துவீட்டுலயோ,புத்தகத்திலோ ,வேறு யாரிடமோ அறிவுரை கேட்டால்கூட சொல்வதோடு அவர்கள் வேலை முடிந்துவிடும்..அதுக்குபிறகு அதுபற்றி முடிவெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் நமக்கு இருக்கும் ..அது பெற்றோரிடம் கேட்கும்போது இருப்பதில்லை அவர்கள் பாசப்பிடிக்குள்ளும் அதிகாரத்துக்குள்ளும் சுருண்டுகொள்வதால்....

தம்பதிக்குள் எத்தனையோ சந்தோசமான தருணங்கள் இருக்கலாம் அதையெல்லாம் ஒரு சொட்டுவிடாமல் பெற்றோரிடம் யாரும் நாகரீகம் கருதி அப்படியே பகிர்ந்து கொள்வதில்லை..அதுபோலத்தான் முட்டிமோதல் வரும்போதும்..பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

சந்தோசத்தை பெரிய மனிதர்களைப்போல் பக்குவமாய் சத்தமின்றி
சைலண்டாகவும் இயல்பாக ஏற்று கொண்டு அனுபவிக்கும் மனசு ப்ரச்சனை வந்தால் மட்டும் சத்தம்போட்டு ஏன் பரிதாபம் தேடவேண்டும்..
நிறைய குடும்பங்களில் தம்பதிகளுக்குள் புதுசுபுதுசாய் ப்ரச்சனை முளைப்பதற்குகாரணமே ஏதோ ஒரு பக்க பெற்றோர்ன்ற மாலுமிகள்தான் இதுவரை அப்படி அவர்களால தங்களுக்குள் ப்ரச்சனைய வரலன்னு 100% வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு 50 சதவீதமாவது யாரும் சொல்லமுடியுமா?

ஒரு வீட்டுபிள்ளைகளுக்கே ஒவ்வோரு அணுகுமுறை தேவைப்படும்போது நம் அம்மாக்கள்/அப்பாக்கள் அவர்கள் துணைக்கு ஒரு ப்ரச்சனையை தீர்க்க பண்ணிய அதே அணுகுமுறை நமக்கும் சரியாய் தான் வரும் என எண்ணுவது சரியில்லங்க..

மனிதரும் ,குணங்களும்,வளர்ப்புமுறையும்,தலைமுறையும் எல்லாமே வேறுபடும்போது அரைச்சமாவையே அரைக்காம(அவங்க அணுகுமுறையையும் அறிவுரையையும் ) சார்ந்திருக்காம புதுசா அரைக்க முயற்சி பண்ணுங்க...

அந்த காலத்துல ஆட்டின ஆட்டு உரலும் ,அம்மியும் ஆரோக்கியம் அம்மா பயன்படுத்துனாங்கன்னு நாமளும் செய்யறோமா..

போம்மா அதுஎல்லாம் உனக்கு சரி எனக்கு சரிப்படாதுன்னு நம்ம வசதிக்கு மாத்திக்கலயா மாறலயா..குமுட்டி அடுப்பில இருந்து மின் அடுப்புக்கு மாறறோம் அதுவும் லேட்டஸ்ட் ப்ராண்ட் இதுக்கெல்லாம் ஆலோசனை கேட்கிறோமா..அவங்ககிட்ட..இல்லதானே

...இருவரும் வேலைக்குபோறோம் ஏதுநேரம்...இன்னும் பல காரணங்கள்
சொல்லி நம்மள நியாயபடுத்தலயா?

அப்புறம் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுமட்டுமே அந்தரங்கமான அன்னியோன்ய உறவு...அதில் அவர்கள் இருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாய் புரிந்துகொள்ள முடியும்...இந்த இருவருக்குமான வாழ்க்கை ப்ரோக்ராமுக்கு பிள்ளையார்சுழி (கல்யாணம்) போடுவது மட்டும்தான் பெற்றோர்கள் ஆனால் ஒவ்வொரு இல்லற பக்கங்களையும்,அனுபவங்களையும் பார்த்து பார்த்து கவனமாய் எழுதுவது இந்த தம்பதிகள் மட்டுமே...இந்த ப்ரோக்ராம் கம்பைல் பண்ணும்போது எர்ரெர் வந்தால் எர்ரெர் டிடெக்க்ஷன் அண்ட் கரெக்க்ஷனை எழுதினவங்கதான் சரிபண்ணனும்....:)

ஒரு பேச்சுக்கு இப்படி பெற்றோர்களை தங்களுக்குள்ளான ப்ரச்சனைகாய் சார்ந்திருந்தால் எவ்வளவு நாள்..?சரி ஒரு கட்டத்தில் ஒரு வேளை அவர்கள் இல்லாதுபோனால் :() அச்சோ அவங்க இருந்திருந்தா சரியா தீர்வு சொல்வாங்க இப்ப என்ன பண்ணுவேன் ஒண்ணும் புரியலேயேன்னு சுய பச்சாதபம் சாப்பிட்டுவிடும் (:()

நமக்கான ப்ரச்சனையை நாம்தான் தீர்க்கவேண்டும்...இன்னோருகையை பிடித்திருந்தா ஏதோ ஒரு கட்டத்தில் அந்த கை நம்மை விட்டுபிரிந்தால் தடுமாறுவோம்..

ஒரு பக்குவமான வயதில் நமக்கு நம்பிக்கை வைத்து கல்யாணம் செய்வதே..நம்மால் வாழ்க்கையை சமாளிக்கமுடியும்ன்ற நம்பிக்கையில்தான் அந்த நம்பிக்கையை நம்மமேலும் நம்துணைமேலும் வைத்து ஓடினால் எல்லா தம்பதிகளுமே சரியான மாலுமிகள்தான்..பெற்றோர்கள்தான் சரியான மாலுமிகள் என்றால் அந்த மாலுமிகளின் வாரிசுகள் அதைவிட சிறந்த மாலுமிகளாக இல்லாமல் போக வாய்ப்பில்லைதானே

அதனால ப்ரச்சனையை சொல்லுங்கன்றதில முத எழுத்தைமட்டும் மாத்தி வெல்லுங்க...நீங்களாவே...அப்பதான் நம்மை ரோபாவாக பார்க்காமல் ரோல்மாடலாக நாளைய சமுதாயம் மதிக்கும்...

சொன்னதைமட்டும் செய்யும் அழகான கிளியாக இருப்பதைவிட எத்தனைமுறை நெருப்பில் போட்டாலும் தானே சமாளித்து மீண்டும் பறக்க துடித்து அதில் வெற்றிகாணும் ஃபீனிக்ஸ் பறவையாய் இருப்பதில்தான் எங்கள் அணிக்கு விருப்பம்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவருக்காக இதோ ஒரே ஒரு பதிவு.. :)

நடுவரே..
கணவன் மனைவி பிரச்சனையை கண்டிப்பாக பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இது தான் என் வாதம்..பெரியவர் வீட்டில் இருந்து புத்திமதி சோல்வதும், அதன் படி கேட்டு நடந்து நன்மை கிடைப்பதும் உண்மை தான். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாது..

* ஒவ்வொரு விஷயத்திற்கும் பெற்றோர்களை நாடுவதால் , நமக்கே ஒரு மெச்சுரிட்டி இல்லாமல் போவதாய் தோன்றும். நம்மகென்ரு முடிவெடுக்க தெரியாமல் இருக்கிறோம் என்று பெரியவர்கள் நினைக்க மாட்டார்கள் தான் .. அப்படி நினைப்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருவேளை இன்னும் உலகம் புரியாமல் இருக்கிறோம் என நினைத்துவிட்டால், அது நன்றாக இருக்காது.

* இதுவே காதல் திருமணம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். எதுவுமே கேட்க முடியாது.. கேட்டு அவர்கள் தீர்வு சொன்னாலும், மனதுக்குள் கண்டிப்பாக ஒரு நெருடல் பெற்றவர்களுக்கு இருக்கத் தான் செய்யும்..

* சில விஷயங்கள் சரி என நமக்கு 100 % தெரியும். பெரியவர்களிடம் சொல்கிறேன் என சல்லி, அவர்களை வேறுவிதமாக அதை செய்ய சொல்லி, நாம் அதன்படி நடக்க முடியா விட்டால், ஒதுக்கி வைப்பது போலவும், பின்ன எதுக்கு என்னிடம் கேட்டாங்க என்ற எண்ணமும் வரும் நடுவரே. இது தேவை தானா?

* தேவையில்லாமல் நமது பிரச்சனையை பெரியவர்களிடம் கொண்டு பொய் அவர்களுக்கு எதற்காக மன அழுத்தத்தை கொடுக்க வேண்டும். நாம பல வேளைகளின் காரணமாக பிரச்சனை மறக்க முடியும். ஆனால் ஒரு வயதுக்கு மேல் வீட்டில் ஆய்ந்து ஓயிந்து அமரும் பெரியவர்களுக்கு பிரச்சனையை எதற்காக கொண்டு செல்ல வேண்டும் சொல்லுங்கள்?

* பிரச்சனை கொண்டு சென்று அதனால், தன கணவன் மீதோ, அல்லது தன மனைவி மீதோ ஒரு வெறுப்பு அல்லது கேட்ட பெயர் பெற்றவர்களிடம் ஏற்பட்டு விட்டால், அது சீக்கிரம் மறையாது.. நாளை கணவன் மனைவி பிரச்சனை மறந்து, அடித்துக் கொண்டாலும் சேர்ந்து, எதுவும் நடக்காததை போல மாறிவிடுவர். ஆனால் பெற்றவரின் மத்தியில் என்ன இருந்தாலும், இப்படி செய்தவன் தானே என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருக்கும்.பின் சம்மந்தப்பட்ட அந்த கணவனோ அல்லது மனைவியோ கூட , அடடா அவசரப்பட்டு சொல்லிவிட்டோமே, நமக்குள் முடித்து இருக்கலாமே என்று நினைக்க வாய்ப்பும் உள்ளது.

* தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை பேசி தீர்க்க தெரியாதவர்கள்,தங்கள் குழந்தைகளுக்கு எப்படி புத்திமதி சொல்ல போகிறார்களோ என்ற கவலை தோன்றும்.

* அதுவும் பல வீட்டில் பெரியவர்களுக்கே தெரியாமல்,, பிரச்சனையை பெரிது செய்து, பிள்ளைகளின் வாழ்க்கை கெடுத்தும் இருக்கிறார்கள்..

* தீர்வு தேவைதான் எனில், நாசுக்காக பேசி, வேறு யாருக்கோ நடந்தார் போல சொல்லி அறிவுரை கேட்கலாம்.. மறைக்க வேண்டும் என நினைத்தால், அதை கடைசி வரை காப்பாறும் திறமை வேண்டும்.. யாருக்கும் இதனால் காயமில்லை ..
நடுவரே.. யாரும் பிரச்சனையை பெற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.. அதை தேவையில்லாமல் பெரிதாக்க வேண்டாம் என்று தான் நினைக்கிறார்கள்.. ஆனால் ஒன்று.. இப்படி பெற்றவரிடம் பிரச்சனை கொண்டு செல்லாமல் நாமே தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் தம்பதிகளுக்கு என்று ஒரு பக்குவம் இருக்க வேண்டும்.

வீட்டு செலவு,
குழந்தை பெறுவது,
குழந்தையின் எதிர்கால படிப்பு,
உத்தியோகம் சம்மந்தப்பட்ட விஷயம்,
என இன்னும் அடுக்கி கொண்டே போகும் எல்லா விஷயங்களையும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளலாம்..ஆனால் கணவன் மனைவி பிரச்சனையை பகிர்ந்துக் கொண்டால் , அங்கே பெரும்பாலும் மிஞ்சுவது வருத்தம் மட்டுமே..

நடுவரே நல்ல விஷயங்களை பகிர்ந்துக் கொள்வது நல்லது..ஆனால் கேட்ட விஷயங்களை ? யோசித்து தான் செய்ய வேண்டும்.
இங்கே பிரச்சனையை கொண்டு போகலாமே வேண்டாமே என்பது கணவன் மனைவி இருவருக்குமே சேர்ந்த வாதம் தான். இருவருமே இரு கோடுகளில் சரியாக பயணிக்கும் போது தான் அது சரிப்படும்.. குடிக்கார கணவன், கள்ள காதல் உடைய பெண் இன்னும் எக்ஸ்டிரா விஷயங்கள் உள்ளதை எல்லாம் கொண்டு போயி தான் தீர வேண்டும்..

எதிரணி கேட்கலாம், இதை மட்டும் சொல்லலாமா.. அதை தானே நாங்களும் சொல்கிறோம் என்று..

நான் சொல்ல வருவது என்ன வென்றால் நடுவரே.. குடிகார கணவன், தகாத உறவு கொண்ட நபர், சூதாட்டம் கொண்டு குடும்பத்தை ஆட்டி படைக்கும் கணவர் போன்ற பிரச்சனைகளை ஏன் சொல்லலாம் என நாங்கள் சொல்கிறோம் என்றால், அதை சொல்ல தேவையில்லை.. ஊருக்கே தெரியும், நாம் சொல்லாமலே பெற்றவர்களுக்கே தெரிய கூடிய பிரச்சனை தான் இது.. இதில் மறைக்க எதுவும் இல்லை தானே..

ஆனால் நான்கு சுவருக்கும், மானசீகமாக பேசி தீர்க்கும் பிரச்சனையை, காதும் காதும் வைத்தார் போல தீர்த்துக் கொள்ள வேண்டும்.. அதுவா வெளியே தெரிந்த கணவன் மனைவியால் என்ன செய்ய முடியும்.. ? ஆனால் பிரச்சனை பெரியவர்களிடம் சொல்லி வேதனையை உருவாக்க தேவையில்லை..

குழந்தைகள் ஆகி வருபவர்களிடம் இருந்து அறிவுரைகளை, நம் பிரச்சனையை சொல்லி தான் பெற வேண்டும் என்று இல்லையே.

அவர்களை மதித்து, அவர்களுடன் நன்றாக பேசினாலே புத்திமதி கிடைத்துவிடும்.
இன்னும் பேச நிறைய உள்ளது. நேரம் தான் இல்லை ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//வளர்ந்த தம்பதிகள் அவரவர் பெற்றோர்க்கு இன்னும் குழந்தைகளாக தெரியலாம் ஆனால் அது அந்த பெற்றோருக்கு மட்டுமே,.

ஆனால் அந்த வளர்ந்த குழந்தைகள் அவர்கள் குழந்தைகளுக்கும் பொறுப்பான பெற்றோர்கள்...என்பதினால் தன் ப்ரச்சனையை தானேதான் தீர்க்க தெரியணும்..//
அட நீங்களே பெற்றோர் ஆன பிறகு இன்னும் நீங்கள் உங்க பெற்றோரை சார்ந்து இருக்கணுமாங்கறாங்க.

//நிறைய குடும்பங்களில் தம்பதிகளுக்குள் புதுசுபுதுசாய் ப்ரச்சனை முளைப்பதற்குகாரணமே ஏதோ ஒரு பக்க பெற்றோர்ன்ற மாலுமிகள்தான் இதுவரை அப்படி அவர்களால தங்களுக்குள் ப்ரச்சனைய வரலன்னு 100% வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு 50 சதவீதமாவது யாரும் சொல்லமுடியுமா?//

அதானே சொல்ல முடியுமா உங்களால்?

//இந்த இருவருக்குமான வாழ்க்கை ப்ரோக்ராமுக்கு பிள்ளையார்சுழி (கல்யாணம்) போடுவது மட்டும்தான் பெற்றோர்கள் ஆனால் ஒவ்வொரு இல்லற பக்கங்களையும்,அனுபவங்களையும் பார்த்து பார்த்து கவனமாய் எழுதுவது இந்த தம்பதிகள் மட்டுமே...இந்த ப்ரோக்ராம் கம்பைல் பண்ணும்போது எர்ரெர் வந்தால் எர்ரெர் டிடெக்க்ஷன் அண்ட் கரெக்க்ஷனை எழுதினவங்கதான் சரிபண்ணனும்....:)//

அம்மே... எப்படீல்லாம் யோசிக்கறாங்க :).

//சொன்னதைமட்டும் செய்யும் அழகான கிளியாக இருப்பதைவிட எத்தனைமுறை நெருப்பில் போட்டாலும் தானே சமாளித்து மீண்டும் பறக்க துடித்து அதில் வெற்றிகாணும் ஃபீனிக்ஸ் பறவையாய் இருப்பதில்தான் எங்கள் அணிக்கு விருப்பம்//

கூண்டுக்கிளியாக இல்லாமல் ஃபீனிக்ஸ் பறவையாக பிரச்சினைகளை நாமே சமாளிக்கணும்னு சொல்றாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ரம்யா! நடுவருக்காக பிசியான வேலைகளுக்கு இடையேயும் பதிவிட்டதற்கு நன்றி :)

//தேவையில்லாமல் நமது பிரச்சனையை பெரியவர்களிடம் கொண்டு பொய் அவர்களுக்கு எதற்காக மன அழுத்தத்தை கொடுக்க வேண்டும். //

ஏம்பா வயசான காலத்தில் அவங்களை நிம்மதியா இருக்க விடாமல் மன அழுத்தத்தை கொடுக்க சொல்றீங்க... கேட்கறாங்கல்ல சொல்லுங்க :)

//தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை பேசி தீர்க்க தெரியாதவர்கள்,தங்கள் குழந்தைகளுக்கு எப்படி புத்திமதி சொல்ல போகிறார்களோ என்ற கவலை தோன்றும்.//

புத்திமதி சொல்லிடத்தான் ம்ஜுடியுமா? பிள்ளைகள் திரும்ப கேட்பாங்களே... உங்களுக்கே இன்னும் தாத்தா பாட்டி வந்து சொல்ல வேண்டி இருக்கு அப்படீன்னு நம்மை தலை குனிய வச்சுட மாட்டாங்க.... இதெல்லாம் நானா சொல்லலீங்க. ரம்யா சொன்னாங்க நான் உங்களுக்கு வாதாட வசதியா இருக்கட்டுமேன்னு எடுத்து கொடுத்தேன் அம்புட்டுதான் :)

//குழந்தைகள் ஆகி வருபவர்களிடம் இருந்து அறிவுரைகளை, நம் பிரச்சனையை சொல்லி தான் பெற வேண்டும் என்று இல்லையே.//

பெரியவர்களே மீண்டும் குழந்தையாகிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களிடம் பிரச்சினையை கொண்டு போவது அவசியமா இல்லைங்கறாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் வணக்கம். பட்டிமன்ற தீர்ப்பு இன்னும் சில மணிநேரங்களில்.... :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நடுவரே..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்