பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்! இரு அணியிலும் பல நல்ல கருத்துகளை எடுத்து வைத்த அனைவருக்கும் நன்றிகள்!!

தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்ல வேண்டுமா? வேண்டாமா?

"சொல்ல வேண்டாம்" அணியினர் எல்லோருமே வலியுறுத்தி சொன்ன ஒரு கருத்து "பெற்றோரே ஆனாலும் தம்பதியினருக்கு இடையே அவர்கள் மூன்றாம் மனிதர்கள்தான். மூன்றாம் மனிதர் தலையீடு நல்லதில்லை" என்பதுதான்

அதுபோல "சொல்ல வேண்டும்" வலியுறுத்தி சொன்னது "வாழ்க்கைப் பயணத்தில் அனுபவம் உள்ள, நம் மீது அக்கறை உள்ள பெற்றோரின் அறிவுரையை நாடுவது நன்மையே விளைவிக்கும்" என்பதுதான்.

இரண்டு கருத்துக்களிலுமே உண்மை உள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் இளம் தம்பதியினர் பெற்றோர் அறிவுரையை கேட்பது நல்லதுதான். ஆனால் இருவருக்குமே இடையேயான பிரச்சினையில் பெற்றோரின் தலையீடு அவசியமா என்பதுதான் பட்டிமன்றத்தின் கேள்வி.

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் அதாவது திருமணமான புதிதில் தம்பதியினருக்கு இடையே வரும் பிரச்சினைகள். பெரும்பாலும் இவை இருவருக்கும் இடையேயான புரிதல் இன்மையினால் வருவது. வெவ்வேறு சூழலில் வளர்ந்த இருவர் ஒரே கூரையின் கீழ் வாழ ஆரம்பிக்கும் போது ஏற்படும் சிறிய சிறிய பிரச்சினைகள். இவை பெரும்பாலும் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுப்பதால் தீர்ந்து விடும். அந்த விட்டுக் கொடுத்தலைக் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் ஈர்ப்பே வர வைத்து விடும். ஊடலும் கூடலும் தேவையான காலகட்டம் இது. ஊடலும் கூடலுமே தம்பதியினருக்கு இடையேயான புரிதலையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும். இதில் பெற்றோரின் தலையீடு அவசியமற்றது.

அப்படியே தம்பதியினரின் முதிர்ச்சி இன்மையினால் பெற்றோரிடம் புகார்ப்பட்டியல் வாசித்தாலும், அனுபவ முதிர்ச்சியுள்ள பெற்றோர் நாசூக்காக பேசி அப்பிரச்சினையினுள் மூக்கை நுழைக்காமல் விலகி விடுவர். ஆனால் இம்முதிர்ச்சி எல்லா பெற்றோருக்கும் இருக்குமா என்றால்... நிச்சயம் இருக்காது. காரணம் தங்கள் பிள்ளைகள் மீதுள்ள அளவற்ற பாசம், அவர்களை பிள்ளைகளுக்காக பேச வைக்கும். இத்தலையீடு அப்போதைக்கு பிரச்சினையை தீர்ப்பதாக தோன்றின்னாலும் நீறுபூத்த நெருப்பாக எல்லோர் மனதினுள்ளும் கனன்று கொண்டுதான் இருக்கும்.

அடுத்து திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் அன்றாட வாழ்க்கையில் தம்பதியினருக்கு இடையே வரும் கருத்து வேறுபாடுகளினால் வருவது. அது பிள்ளை வளர்ப்பாக இருக்கலாம், வீட்டுக்கு வேண்டியவற்றை செய்வதாக இருக்கலாம், உறவினர்களால் வருவதாக இருக்கலாம்... இங்கேயும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு சென்றால் என்னவாகும்?

சில பெற்றோர் நடுநிலையாக யோசித்து, தவறு செய்தவர்களை சுட்டிக்காட்டி திருத்தி நல்வழி காட்டுவர். ஆனால் துணையின் பெற்றோர் நம்மை கண்டிக்கும் போது அல்லது நம் பெற்றோர் நம் துணை சொன்னதால் நம்மை கண்டிக்கும் போது அது மனதினுள் சிறிய வடுவை ஏற்படுத்தும். நிச்சயம் அது தம்பதியினருக்கு இடையே சிறிய விரிசலை, விலகலை ஏற்படுத்தும்.

எல்லா பெற்றோரும் நடுநிலையாக இருந்து செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. தன் பிள்ளை செய்யும் தவறு அவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் போகும். அப்போது அவர்களின் அறிவுரையோ, வழிகாட்டுதலோ நிச்சயம் நன்மை பயக்காது.

இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு பிரச்சினையை பற்றி நாம் இன்னொருவரிடத்தில் சொல்லும் போது அது நம் பெற்றோராகவே இருந்தாலும் நம் பக்கத்தை நியாயப்படுத்தியே சொல்வோம். நாம் செய்த தவறுகளை வசதியாக மறந்து விடுவோம் அல்லது மறைத்து விடுவோம் :). ஒரு பிரச்சினையை பற்றி நாம் நம் பெற்றோரிடம் சொல்லும் போது எத்தனை பெற்றோர் "நீ என்ன செய்தாய் உன் பக்க தவறு என்னன்னு யோசித்தாயா" என்று கேட்பார்கள். இப்படி ஒருபக்கத்தை மட்டுமே கேட்டு சொல்லப்படும் அறிவுரைகள் எப்படி நன்மையை விளைவிக்கும்?

பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு சென்று அவர்கள் இருவரையும் அழைத்து வைத்து பேசும் போது நிச்சயம் அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் தம்பதியினருக்கு இடையே ஒரு விரிசலையும் , மாமனார் மாமியார் மருமகன்(ள்) மூவருக்கு இடையேயும் ஒரு விரிசலையும் உருவாக்கும். அதன் பின் இயல்பாக பழக முடியாது. ஒரு இடைவெளி இருக்கும்.

அப்படி என்றால் திருமணம் ஆன பின்பு நாம் பெற்றோரிடம் எதுவுமே சொல்லக்கூடாதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். நிச்சயம் சொல்ல வேண்டும். நாம் சந்தோஷங்களை சொல்ல வேண்டும். குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், விஷேஷங்கள், எடுக்கப்படும் முடிவுகள் எல்லாவற்றையும் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அதில் அவர்கள் ஆலோசனையையும் நாட வேண்டும்.

கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினை என்றாலும் சில பிரச்சினைகளை பெற்றோர் தலையீடு இருந்தால்தான் சமாளிக்க முடியும். நல்ல முடிவினை எடுக்க முடியும். துணையின் நடத்தையினால் வரும் பிரச்சினைகள், குடும்ப வன்முறைகள் போன்ற தனியே சமாளிக்க முடியாத பிரச்சினைகளை இரு வீட்டு பெற்றோரிடமும் சொல்லித்தான் ஆக வேண்டும். தம்பதியினர் சொல்லாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகள் தானாகவே அவர்களுக்கு தெரிந்து விடும்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடற மாட்டை பாடிக் கறக்கணும். நானும் பழமொழி சொல்லிட்டேன் :). அது போல தன் துணையிடம் எப்படிப் பேசினால், எப்படி நடந்து கொண்டால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதை வாழ்க்கை ஓட்டத்தில் தானே புரிந்து கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலேயும் என்ன பிரச்சினை வந்தாலும் தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பும் காதலுமே எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும். இந்த அடிப்படை அன்பும் காதலும் இல்லை என்றால் பெற்றோர் தலையிட்டாலும் கூட பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அபடியே தீர்க்க முடிந்தாலும் அது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும்.

தம்பதியினருக்கு இடையே வரும் சிறு சிறு பிரச்சினைகளையும் மனஸ்தாபங்களையும் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் நான்கு சுவற்றுக்குள் மனம் விட்டுப் பேசியே தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதுதான் தம்பதியினரிடையே நெருக்கத்தையும் புரிதலையும் அதிகரிக்கும்.

அனைவருக்கும் மீண்டும் நன்றிகளும் வணக்கங்களும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தீர்ப்பு ரொம்ப அருமைங்க, எங்கள் அணிக்கு "வெற்றி வெற்றி"
ஒவ்வொரு பாயிண்ட்டும் சூப்பர், அன்பு பற்றி அருமையான விளக்ககத்துடன் தீர்ப்பளித்தமைக்கு நன்றிங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

கவி தீர்ப்பு ரொம்ப அருமைங்க. நல்ல விரிவாக விளக்கியிருக்கிறீர்கள்.

எங்களுக்கு தீர்ப்பு முன்னாலேயே தெரியும். எதிர் அணி வேணுமின்னு வாதாடினோம். எங்களை ஓட்டு போட சொல்லியிருந்தால் "வேண்டாம்" அணிக்குத்தான் போட்டிருப்போம்.

உஷா நீங்க அருமையா வாதம் பண்ணுரிங்க. வாழ்த்துக்கள்.

இளவரசி, ரம்யா நீங்க சொன்ன பாயிண்ட்ஸ் 100 க்கு 100 உண்மை. அழகா சொல்லியிருக்குரிங்க. வாழ்த்துக்கள்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

அழகான தெளிந்த நீரோடை மாதிரி பளிச்சுன்னு இருக்கு தீர்ப்பு...எல்லா பாயிண்ட்ஸ்ம் அருமை கவி :)

//எல்லாவற்றுக்கும் மேலேயும் என்ன பிரச்சினை வந்தாலும் தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் எல்லையற்ற அன்பும் காதலுமே எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும். இந்த அடிப்படை அன்பும் காதலும் இல்லை என்றால் பெற்றோர் தலையிட்டாலும் கூட பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அபடியே தீர்க்க முடிந்தாலும் அது தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்கும்.//

சூப்பரப்பூ

//தம்பதியினருக்கு இடையே வரும் சிறு சிறு பிரச்சினைகளையும் மனஸ்தாபங்களையும் மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் நான்கு சுவற்றுக்குள் மனம் விட்டுப் பேசியே தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதுதான் தம்பதியினரிடையே நெருக்கத்தையும் புரிதலையும் அதிகரிக்கும்
//

வெகு அருமை....வாழ்த்துக்கள் கவி..

பட்டியில் வாதாடிய எல்லார் வாதங்களும் சூப்பர்

தாமரை மிக்க நன்றி.....உங்கள் வாதங்கள் தீர்க்கமா இருந்துச்சு....வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி குணா! ஆமா உங்க அணிக்கேதான் வெற்றி :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே, தீர்ப்பு அருமையாக உள்ளது.தெளிவாக கூறி இருக்கிறீர்கள். நன்றிகள் பல

நன்றி தாமரை செல்வி! சொல்ல வேண்டும் அணியில் மிக அழகாக உங்கள் கருத்துக்களை வித்யாசமான கோணங்களில் எடுத்து வச்சீங்க. அதற்கு பிடியுங்கள் பாராட்டுக்களை :). அந்த அணிக்காக வாதாடுவது சுலபமான விஷயம் இல்லை. தொடர்ந்து வரும் பட்டிமன்றங்களிலும் கலந்துக்கோங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இளா!

//அழகான தெளிந்த நீரோடை மாதிரி பளிச்சுன்னு இருக்கு தீர்ப்பு...//

நன்றி இளா! ஆனால் எனக்குத்தான் நான் தீர்ப்பை சொன்ன விதத்தில் அத்தனை திருப்தி இல்லை. இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லியிருக்கலாமோ அப்படீன்னு தோணுது.

எனக்கு ஒன்னையும் மிச்சம் வைக்காமல் உங்கள் இறுதி வாதத்தில் எல்லாத்தையும் சொல்லிப்புட்டீங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சங்கீசெல்வா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயிச்சுட்டோமா !!! :) சூப்பரு. கவிசிவா... நடுவர் சீட்டுல உட்கார்ந்துட்டீங்க... நான் என்னன்னு கூவ? சொன்னீங்க பாருங்க... ஒவ்வொரு வரியும் உண்மை. என்ன தான் பெற்றோர் தீர்த்தாலும் அது தற்காலிகம் தான்... உண்மையான அன்பும் புரிதலும் தான் பிரெச்சனையை தீர்க்கும். ட்ரூ. (இங்குட்டு தம்ஸப் காட்ட முடியலயே) அசத்திட்டீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்