பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

நடுவருக்கு வேலையே இல்லாத தலைப்பை நானே தேர்ந்தெடுப்பேனா என்ன... அப்புறம் எப்படி நான் நாரதர் வேலையை செய்வது :)

பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு சென்றால் பிரச்சினை தொடர் கதையாகி விடும் என்கிறீர்கள். பார்ப்போ எதிரணியினர் வந்து என்ன சொல்றாங்கன்னு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எதிரணி வருமா ? என்பது எனக்கு சந்தேகம் தான்.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மாண்புமிகு நடுவருக்கும், அனைவருக்கும் வணக்கம்,
கணவன்,மனைவிக்குள் வரும் பிரச்சினை பெற்றோரிடம் கொண்டுசெல்வது நல்லதல்ல, வாழ்க்கைங்கிற டிராக்கில இருவரும் ஓடுவதில் இன்பதுன்பங்கள் கலந்து இருக்கும், எதிர்வரும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் இருவருமே போராடி வெற்றிபெறுவதே நல்லது. பிரச்சினைகளை பெரியோர்களிடம் கொண்டுசெல்லக்கூடாது என்பதே என் கருத்துங்க :-)

நட்புடன்
குணா

நடுவரே எதிரணி யாரையுமே காணோமே ,எப்படி விருவிருப்பா பேசுரது யாராவது வருவீங்களா

வணக்கம் நடுவரே....
கணவன் மனைவி பிரச்சனைகளை பெரியவர்களிடம் தெரியப்படுத்தனும்னு வாதாடப்போகிறேன்.......வாதங்கள் பின்னால் வரும் இப்போ சமையல் முடிச்சு வந்திடுறேன்......

ஒரு ரெண்டு நாள் தப்பி வந்தா இப்படியா எல்லாரும் ஒரே அணியா சேந்து பட்டியை காலி பண்ணுறது. அதெல்லாம் நாங்க விட மாட்டோம்ல. மத்தி யோசி ன்னு சொன்னங்க அது போல தலைப்பை பார்த்தவுடன் எல்லாரும் எடுத்தது போல பிரச்சினையை நாமே தீர்க்கனும்னு சொல்ல விரும்பினாலும் , இப்போ ஏன் நாம் எதிரணியை சூஸ் பண்ணி அந்த பக்கம் இருக்கற நியாங்களை யோசிக்க்கலாமா என்று தோன்றியது.

சோ , திருமண பந்தத்தில் முக்கிய விஷ்யம்பாக இருக்கும் இந்த தலைப்பை எடுத்து நடத்தும் உங்களுக்கும் தலைப்பை கொடுத்த தோழிக்கும் வாழ்த்துக்கள் அண்ட் வணக்கங்கள் .

அதனால் எதிரணி கூட்டமே !!! நாங்க பாயிண்ட்ஸ் கொடுக்கறோம் கேட்ச் பண்ணுங்க.
பிரச்சினையை இவங்களே தீர்த்துகிட்டு பிரிஞ்சி போவரதுக்கு பதிலா பெற்றோர்கிட்ட கொண்டு போனா தான் என்னப்பா !! என்ன தப்புன்றேன் .

வெயிட் பண்ணுங்க அடுத்த பதிவுல விளக்கறேன் !!

அன்பு நடுவரே

தம்பதிகுள்ளே பிரச்சினை எப்போதெல்லாம் வருது ?? எனை கேட்டீங்கன்னா வராத நாளை விரல் விட்டு எண்ணிறலாம் நு சொல்லுவேன் இரு வேறு துருவங்கள், இரு வேறு மனங்கள் இரு வேறு வாழ்க்கை முறைகள், அதை விட இரு வேறு பாலினங்கள் இவங்களுக்குள்ளே பிரச்சினைங்க வராம இருந்தா தாங்க ஆச்சரியம்.

இந்த தம்பதிகள் என்பவ்ங்க இக்கால அக்கால ன்னு பிரிக்க தாங்க வேண்டியிருக்கு. கணவன் மனைவிக்குள்ள பிரச்சினைங்க வருவது இயற்கை என்பது பல பெரியவங்களுக்கு தெரியும் ஆனா இப்போ இருக்கற ஜோடிங்க-- எப்பவுமே கணவன் கிப்த்ஸ் கொடுக்கணும் மை ஸ்வீட்டி டார்லிங் நு பேசணும் , நிறைய சம்பாதிக்கணும், தன்னிடம் கணவன் கோபமே படகூடாது என்று நினைக்கிறாங்க. அதே போலே கணவர்களும் பெண்களை ஒரேடியாக கொண்டடுவது இல்லைன்னா ஓவர் போசசிவ்நேச்ஸ் இப்படி போயிட்டிருக்கு. நீங்களே சொல்லுங்க விவாகரத்து இப்போ அதிகமா குறைவா ?? கண்டிப்பா ஏதோ பிரச்சிணங்க இருக்கறதுனால தான் அவங்க கோர்ட் வரை போறாங்க அது இவங்க பெற்றோர்களால் இல்லை. இவங்களுக்கு ஏதோ கருத்து வேறுபாடுகள். அதை தங்கள் பெற்றோர்களிடம் சொன்னால் --அவமானம் ,வெட்கம் அல்லது தயக்கம் இதனால் தாங்களே அல்பத்தனமாக முடிடிவேடுத்து பிரச்சினையை பேசி தீர்க்காமல் ஒரே அடியாக தீர்த்து கொண்டு விடுகிறார்கள் .

திருமணம் என்பது என்றைக்கு மீ டூயட் சான்காவே இருக்கும் என்ற ஒரு தவறான மனோபாவம் இருக்குங்க. தங்களுக்குள்ளே பிரச்சினைன்னு சொன்னால் எல்லாரும் தங்கள் மேல் பரிதாபம் பார்வையை வீசி விடுவார்களோ என்று ஒரு டிப்ளோமேடிக் நடத்தியிலேயே மற்றவர் முன் வாழ்கிறார்கள், அது ஒரு போதை போன்று வளர்கிறது . கடைசியிலே நல்லா தானே இருந்தாங்க ?? ஏன் இப்படி திடீர்னு தற்கொலை கொலை அல்லலது பிரிவுன்னு தோணும் அளவுக்கு செய்திகள் போகுது .

முதலில் பெற்றோர்கள் பிரச்சினையை பெரிது பண்ணிடுவாங்க என்ற தவறான கண்ணோட்டத்தை முதலில் எதிரணியினர் எக்ஸ்ப்ளைன் பண்ணனும் . எந்த பெற்றோராவது பிள்ளைங்க வாழ்கை கெட்டு போவணும்னு நினைப்பாங்களா சொல்லுங்க.

சரி ஒரு பேச்சுக்கு , கணவன் மனைவிக்குள்ளே தகறாரு வருதுன்னு வைங்க. மனைவி பொறுமையா போயிட்டா சரி, இல்லன்னா என்ன ஆகும் ?? அதே போலே எப்பவுமே எல்லா பிரச்சினைக்கும் மனைவி பொறுமையா போகவும் முடியாது. அது ஒரு சாதாரண பிரச்சினையா இருக்கலாம் .

ஆனா இப்போ இருக்கும் சூழ்நிலையில் அனுபவ அறிவு இல்லாதவங்கலாகவே பிள்ளைகள் இருக்கிறார்கள்.. வீட்டில் கூட்டு குடும்ப அமைப்பு இல்லாததால
பிரச்சினைகள் , வெளிப்படையான சண்டைகள் சமாதானங்கள் , உடனுக்குடன் பிரச்சினைகள் சரியாகி இயல்பாக அடுத்த வேலைக்கு போவது போன்ற விஷயங்கள் இவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. சும்மா சீரியல் லில் வரும் சம்பவங்கள் அடிப்படையில் யோசிக்கிறாங்க . ஒரு வேளை அந்த பெண் தன அம்மாவிடம் பகிர்ந்து கொண்டால், இதெல்லாம் இயல்பு தான் இதை மனசுக்குள்ளே கொண்டு செல்லாதே என்று சொல்ல்லியிருக்கலம் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் , சிக்கல் ச மேல சிக்கல் பண்ணிக்கிட்டு , திருமண உறவின் ஆரம்ப காலங்களிலேயே , தவறான முடிவுகள் எடுக்கும் இவர்கள் , முட்டாளுங்க தாங்க.

இப்போதைக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் நடுவர் பொறுத்துக்கோங்க. மீண்டும் வரேன்.

வாங்க குணா!

//வாழ்க்கைங்கிற டிராக்கில இருவரும் ஓடுவதில் இன்பதுன்பங்கள் கலந்து இருக்கும், எதிர்வரும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் இருவருமே போராடி வெற்றிபெறுவதே நல்லது. //

ரெண்டு பேர் போகக்கூடிய ட்ராக்ல மூணாவது ஆள் வந்தால் நெருக்கடிதான் அதனால் பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு போகக் கூடாதுங்கறீங்க... ம்ம்ம் எதிரணி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.
தொடர்ந்து வாங்க குணா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பூர்ணிமா, சங்கீதனா நீங்க (நானும்தான்) ஆவலுடன் எதிர் பார்த்த எதிரணி களம் இறங்கிட்டாங்க. அதுவும் சூடான வாதங்களுடன். விறுவிறுப்பான வாதங்களுடன் நீங்களும் வாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ரேணுகா! என் வயிற்றில் பாலை வார்த்தீங்க :).

சமையல் முடிச்சு சாப்பிட்டு தெம்பா, வாதங்களுடன் வாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்