பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாப் பிரச்சனையயும் பெற்றோரை நம்பியே தீரும் என்று நினைத்தால் பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ போகும் தம்பதிகள் தங்களை எப்போது புரிந்து கொள்வார்கள்... இப்படியே எல்லா பிரச்சனைகளுக்கும் பெற்றவர்களையே நாடி இருந்தால் தம்பதிகளுக்கிடையில இருக்கம் இருக்காது..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஒரு பொண்ணு சின்ன சின்ன பிரச்சனைகளை தன் அம்மாவிடம் சொன்னால், அம்மா என்ன சொல்வார்கள்: இது எல்லார் வீட்டிலேயும் நடக்குறது தான். கொஞ்சம் பொறுத்து போம்மா எல்லாம் சரியாகி விடும் என்று.

இதையே மாமியார் சொன்னால் என் மாமியார் என்ன திட்டிடாங்க டோய்........ என்று கூப்பாடு போடுவார்கள். இதே கதை தான் பையனிடத்திலும்!...

தப்பை நாம் வைத்துக் கொண்டு பெற்றோரைக் குறை சொல்ல கூடாது

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

//ஒரு ப்ரச்சனையில் சரியான முடிவெடுப்பது எப்படின்னு வளர்க்கும்போது கற்று கொடுக்கணுங்க..வளர்ந்தபின்னும் என்ன முடிவு எடுக்கணுமின்னு டிக்டேட் செய்யகூடாது…//

//திருமணமாகியும் தனக்கான ப்ரச்சனைக்கு முடிவெடுக்க பெற்றோரை அணுகினால் தன் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் நல்ல முடிவெடுக்க
எப்படி கற்றுகொடுக்கமுடியும்..//

நியாயமான கேள்விகள். ஏம்ப்பா தம்பதியினர் அவங்க பிரச்சினைகலையே தீர்த்துக்க முடியாமல் பெற்றோரிடம் போனால் வரும் தலைமுறையை எப்படி வளர்ப்பாங்கன்னு மிக் நியாயமான கேள்வியை எடுத்து வச்சிருக்காங்க. பதில் சொல்லுங்கப்பா.

//இதுக்குபிறகு தன் திருமண பந்தத்தில் ஓட்டபந்தயத்தை அந்த தம்பதிகள்
தாங்க ஓடணும்..

அதுல அடிக்கடி விழலாம் நிறைய காயங்கள் வரலாம்..அப்படி வரும்போதெல்லாம் இது சகஜம்தான்னு சரிபண்ணிகிட்டு
திருப்பி எழுந்து அவங்கதான் ஓடணும்…//

ஓட்டப்பந்தயத்தில் அவங்கவங்கதாம்ப்பா ஓடணும் விழுந்தாலும் தானே எழும்பிக்கணும். அப்பா அம்மா வந்து தூக்கி விடுவாங்கன்னு விழுந்தே கிடந்தால் வாழ்க்கைங்கற ஓட்டப்பந்தயம் முடிஞ்சுடும் அப்படீங்கறாங்க. பந்தயத்தை பற்றி என்ன சொல்லப்போறீங்கப்பா.

//மூளையோடு தம்பதிகள் யோசிக்க கற்றுகொண்டால் பெற்றோர் மூளையை
இரவல் வாங்க அவசியமிருக்காது….//

எதை எதை இரவல் வாங்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லியா... நான் கேட்கலீங்கோ... அவங்க கேட்கறாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ஃபரீதா!

//எல்லாப் பிரச்சனையயும் பெற்றோரை நம்பியே தீரும் என்று நினைத்தால் பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ போகும் தம்பதிகள் தங்களை எப்போது புரிந்து கொள்வார்கள்//

எல்லாவற்றையும் பெற்றோரிடமே பேசி தீர்த்தல் தம்பதிகள் எப்போதான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்கன்னு கேட்கறாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெற்றோரை யாரும் குறை சொல்லவில்லை.... பிரச்சனைகளை பெற்றோரிடம் கொண்டு போகும் போது அவர்கள் கோபத்தில் எதாவது பேசி விட்டால் அது தம்பதிகள் இடையே மன கசப்பை உண்டாக்கி விடும்... அதன் பின் திருமண வாழ்வு எப்படி இனிமையாக இருக்கும்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஃபரீதா பட்டியில் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடாது என்பது அறுசுவை பட்டிமன்ற விதி. நடுவருக்கு மட்டுமே அந்த உரிமை :) உங்கள் பதிவில் மாற்று ஆப்ஷனை உபயோகித்து மாற்றி விடுங்கள். பொதுவாக எதிரணியினரே என்று குறிப்பிட்டால் போதுமானது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஒரு பொண்ணு சின்ன சின்ன பிரச்சனைகளை தன் அம்மாவிடம் சொன்னால், அம்மா என்ன சொல்வார்கள்: இது எல்லார் வீட்டிலேயும் நடக்குறது தான். கொஞ்சம் பொறுத்து போம்மா எல்லாம் சரியாகி விடும் என்று.//

எல்லா வீட்டுலயும் நடக்கும் சாதாரன பிரச்சினைதான் இதுன்னு மகளுக்கு புரிய வைக்கிறாங்க. இதுக்கு ஏன் குறை சொல்லணும்னு கேட்கராங்க தாமரை செல்வி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மன்னித்து விடுங்கள் நடுவரே... நான் இந்த பகுதிக்கு புதிது அதனால் தெரியாமல் பெயரை சொல்லி விட்டேன் இனிமேல் பெயரை குறிப்பிட மாட்டேன்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஃபரீதா மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. நீங்கள் தெரியாமல்தானே செய்தீர்கள். நடுவராக அதை சொல்ல வேண்டியது எனது கடமை அவ்ளவுதான். தொடர்ந்து வாதங்களுடன் வாங்க ஃபரீதா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்டிப்பாக நடுவரே....:)

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்