பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

நடுவரே நம்ம ஊர்ல கூட்டம் அதிகமா இருக்கிற 2 இடங்கள் மருத்துவமனை, கோவில்.
கோவிலுக்கு எதுக்கு போறோம்?
நம்ம கஷ்டத்த சொல்லுறதுக்கு
நம்ம வீட்டிலையே தெய்வமா இருக்கிற பெற்றோரை மறந்து விட்டு சாமியிடம் போய் நம் கஷ்டத்த முறையிடுகிறோம்

ஓரு நிஜ சம்பவத்தை சொல்கிறேன்
சீதாம்மா உங்க பழமொழியை போட்டுக்கிறேன்
‘ஊரைச் சொன்னாலும் பேரை சொல்லக் கூடாது, பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது’
ஒரு கணவன், மனைவி
பையனின் அம்மா, அப்பா சரியான முசுடு, பையனையே ரொம்ப கேவலமாதான் திட்டும்.
பொண்ணோட அம்மா, அப்பா ரொம்ப நல்ல குணம்.
கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் கூட ஆகவில்லை, பொண்ணை போட்டு படுத்தி எடுத்திட்டாங்க. ஒரு நிமிடம் உட்கார விடுவதில்லை, பையனோடு பேச விடுவதில்லை, பிறந்த வீட்டிற்க்கும் போன் பண்ண கூடாது. இரவிலும் பெட் ரூம் கதவை திறந்து வைத்து தான் தூங்க வேன்டும்.
பையன் அம்மா பிள்ளை. பெண்ணுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. பிறகு அம்மா வீட்டிற்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவர்கள் குடும்பத்தோடு சண்டைக்கு வரவில்லை. மாறாக பையனுடனும், மாமியாருடனும் எப்படி அனுசரித்து போவது என்று கற்று கொடுத்தனர்.
பையன் அவர் அம்மாவிடம் ஏதவது சொன்னால் அவ்வளவு தான் தாம்.... தூம்.... என்று வானத்திற்க்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.
பொண்ணு தன் அம்மா சொன்னதால் பொறுத்து போனார். சில மாதங்கள் கழித்து பையன் பெண்ணை புரிந்து கோண்டார்.
தனிக்குடித்தனம் வந்து விட்டார்கள். இப்பொது சந்தோசமாக இருக்கிறார்கள்.

ஒருவேளை பொண்ணு தன் அம்மாவிடம் சொல்லாமல் கணவரிடம் சொல்லியிருந்தாலோ, இல்லை பெண் வீட்டிலிருந்து என் பெண்ணை எப்படி இப்படி செய்வீர்கள் என்று சண்டைக்கு போயிருந்தாலோ இருவரும் பிரிந்து தான் இருக்க வேன்டும

இதில் 2விதமான பெற்றோர் இருக்கிறார்கள். நாம் பேசுவது நல்ல பெற்றோரிடம் பேசினால் நமக்கு நல்ல தீர்வு உண்டு. வாழ்க்கை கடலில் கப்பலை சரியாக ஓட்ட தெரிந்த மாலுமிகள் அவர்கள். அவர்களின் வழிகாட்டுதல் இருந்தால் வாழ்க்கை கடலை சிரமமின்றி கடந்து விடலாம். இல்லையென்ரால் சூறாவளியிலும் புயல் காற்றிலும் சிக்கி தவிக்க வேன்டியதுதான்.

நாங்கள் ஒன்றும் பெற்றொரை வாழ்க்கை முழுவதும் கப்பலை ஓட்ட சொல்லவில்லை. ஆபத்து நேரங்களில் அவர்களின் அறிவுரையை நாடுங்கள். சந்தோஷமாய் வாழுங்கள்.

நடுவரே ஒரு வார்த்தையை underline பண்ணிக்கோங்க. நல்ல பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்க விரும்பவே மாட்டார்கள்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வாங்க ஃபரீதா! ரெண்டு அணிபக்கமும் பேசியிருக்கீங்களே :)

//பெற்றோர் வழிகாட்டுதல் வேண்டும் தான்... ஆனால் கணவர் மனைவிக்கிடையே நாடக்கும் பிரச்னை அவர்களை சார்ந்தது அதை பெற்றோரிடம் சொல்லி தீர்த்துக் கொண்டால் அதன் பின் நம் துணை மேல் அவர்கள் வைத்து இருக்கும் மரியாதை குறையுமல்லவா??? அதற்கு நாமே இடம் குடுக்கலாமா சொல்ளுங்கள்???//

தம்பதிகளுக்குள் பிரச்சினையை அவங்களுக்குள்ளதான் தீர்த்துக்கணும். இதை எல்லாம் பெற்றோரிடம் சொல்லக்கூடாதுங்கறாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எதிரணி சொல்வது போல் வாழ்க்கை கடலில் கப்பலை சரியாக ஓட்ட தெரிந்த மாலுமிகள் அவர்கள் தான் என்றால் வாழ்க்கை கடலில் கப்பலை சரியாக ஓட்ட நாம் எப்போது கற்றுக்கொள்வது.... மாமியார் வீட்டில் அனுசரித்து போக வேண்டும் என்பது திருமணத்திற்கு முன்பு பெற்றோர் தங்கள் மகளிடம் கணக்கிட முடியாத அளவிற்கு சொல்லி இருப்பார்கள்... அதை ஒரு பெண் மனதில் வைத்துக் கொண்டு பெண் தன வாழ்கையை திறனாக நடத்த வேண்டும்... (அது சரி திருமணத்திற்கு முன் நாம் நம் பெற்றோர் பேச்சை கேட்டால் தானே அதை மனதில் வைத்து கொள்ள முடியும்):)

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

//கோவிலுக்கு எதுக்கு போறோம்?
நம்ம கஷ்டத்த சொல்லுறதுக்கு
நம்ம வீட்டிலையே தெய்வமா இருக்கிற பெற்றோரை மறந்து விட்டு சாமியிடம் போய் நம் கஷ்டத்த முறையிடுகிறோம்//

மனசை தொட்டுட்டீங்க தாமரைசெல்வி :). பெற்றோர்கிட்ட சொல்லுங்க தெய்வமா இருந்து தீர்த்து வைப்பாங்கன்னு சொல்றாங்க.

//வாழ்க்கை கடலில் கப்பலை சரியாக ஓட்ட தெரிந்த மாலுமிகள் அவர்கள். அவர்களின் வழிகாட்டுதல் இருந்தால் வாழ்க்கை கடலை சிரமமின்றி கடந்து விடலாம். இல்லையென்ரால் சூறாவளியிலும் புயல் காற்றிலும் சிக்கி தவிக்க வேன்டியதுதான்.//

அட அட அட! என்ன ஒரு உவமை தாமரை! சூப்பர் :) போகும் வழி தெரியலைன்னா கேட்டு தெரிஞ்சுகிட்டு போறதில்லையா அது ப்ல பெற்றோரிடம் கேட்டு தெளிவு பெறுவதில் என்ன தப்புங்கறாங்க !

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//வாழ்க்கை கடலில் கப்பலை சரியாக ஓட்ட தெரிந்த மாலுமிகள் அவர்கள் தான் என்றால் வாழ்க்கை கடலில் கப்பலை சரியாக ஓட்ட நாம் எப்போது கற்றுக்கொள்வது..//

எப்பதாங்க பிள்ளைங்களும் கப்பலை ஓட்டுவது அப்படீங்கறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே பெற்றோர் பேச்சை கேட்க மாட்டாங்க கல்யாணத்துகு அப்புறமா கேட்கப்போறாங்க அப்படீங்கறாங்க!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெற்றோரிடம் கேட்டு தெளிவு பெற்றால் பராவாயில்லை நடுவரே அதுவே அவர்களுக்குள் பெரும் பிரச்சனையை உண்டாக்கி விட்டால்????

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எதிர் அணி அவங்களே சொல்லிபுட்டாங்க... எல்லாரும் நல்ல அட்வைஸ் தருவதில்லைன்னு ;) இதை தான் நாங்களும் சொல்றோம். உன் வாழ்க்கை உன் கையில். ஒரு வயசுக்கு அப்பறமும் அப்பா அம்மா பின்னாடியே பேச்சை கேட்டுகிட்டு சுத்தினா எதுவும் செய்ய இயலாது. ஒன்னும் இல்லை நடுவரே... இன்னைக்கு மருத்துவம் எவ்வளவோ முன்னேரி இருக்கு. இன்னைக்கு பொண்ணோ பையனோ ஒரு வைத்தியம் தங்களுக்கோ தங்கள் பிள்லைக்கோ பார்க்க கூட அப்பா அம்மா அட்வைஸ் கேட்கறாங்கன்னு வைங்க... முதல்ல பயமும், வேண்டாம் என்ற பதிலும் தான் வரும். நம்மை அவங்க சுலபமா கன்வின்ஸ் பண்ணிடுவாங்க. அவங்களை சொல்லி தப்பில்லை, அவங்க இதை எல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாளை கஷ்டம்னு வந்தா யாருடைய பெற்றோர் இதை வேணாம்னு சொன்னாங்களோ அவங்க மேல நம்ம துணைக்கு கோவம் வரும். செய்திருந்தா இன்னைக்கு இந்த கஷ்டம் இல்லைன்னு தோணலாம். இது உறவுகளுக்கு நடுவே விரிசல் உண்டு பண்ணும். அந்த காலத்து வைத்தியம் தான் செய்யனும்னு மாமியார் சொன்னா மறுமகள் பயப்பிட தான் செய்வாங்க. இன்னைக்கு நாம இருக்க வாழ்க்கை முறை அவங்களுக்கு தெரியாது, தன் பிள்ளைக்கு ஏதும் ஆயிடுமோன்னு பயம் வர தான் செய்யும். இது பிரெச்சனையை தான் விதைக்கும்.

இதெல்லாம் சின்ன உதாரணம் தான் நடுவரே... இதெல்லாம் பிரெச்சனை இல்லை பெற்றோரிடம் அறிவுரை கேட்பது சரியா தப்பான்னு வாதம் பண்ண. ஆனாலும் சொன்ன காரணம் ஒன்னு தான்... எதிலும் முடிவெடுக்கும் உறிமை நமக்கு உண்டு. தொட்டதுக்குலாம் பெற்றோரை நாடினால் பின் சார்ந்தே வாழ வேண்டி இருக்கும், தனித்து செயல்பட இயலாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

///எதிலும் முடிவெடுக்கும் உறிமை நமக்கு உண்டு. தொட்டதுக்குலாம் பெற்றோரை நாடினால் பின் சார்ந்தே வாழ வேண்டி இருக்கும், தனித்து செயல்பட இயலாது.///

நாம நிறைய தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிப் படிக்கிறோம். அதற்கு அர்த்தம் நமக்கு தன்னம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை, இன்னும் வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான்.

அது போலத் தான் நாம் பெற்றோரிடம் அறிவுரை கேட்பது, நமக்கு அறிவு இல்லை என்பதாகவோ,அவர்களை சார்ந்தே இருப்பதாகவோ அர்த்தம் இல்லை.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் அந்த நல்ல உள்ளங்களின் அறிவுரை நமக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையினால் தான்

நடுவரே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அறிவுரை கேட்கும் நமக்கு பெற்றோரின் அறிவுரை மட்டும் கசக்கிறதோ

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

///நாம நிறைய தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிப் படிக்கிறோம். அதற்கு அர்த்தம் நமக்கு தன்னம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை, இன்னும் வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான்///

தன்னம்பிக்கை வளர ஒரு முறை படித்தால் போதாதா நடுவரே மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா??

திருமணத்திற்கு முன் பெற்றோர் சொல்லும் அறிவுரையை கேட்டலே போதுமே...

///நடுவரே பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அறிவுரை கேட்கும் நமக்கு பெற்றோரின் அறிவுரை மட்டும் கசக்கிறதோ///

நடுவரே தம்பதிகள் இடையே நாடாகும் பிரச்சனையை தங்கள் பெற்றோரிடம் கொண்டு போவதையே தப்பு என்று நாங்கள் வாதாடுகிறோம்... பிறகு நாங்கள் எப்படி பக்கத்துக்கு வீட்டுகாரரின் அறிவுரையை கேட்போம்??

கவணன் மனைவி பிரச்சனையை யாரிடம் சொன்னாலும் பாதிப்பு அவர்களுக்கு தான்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

என்ன பாயிண்டை பிராய்லாம்னு யோசிக்கறப்போ ஆபத்து பாநதவரா வந்து பதிவிட்ட்ருக்காங்க எங்க அணி தோழி --சூப்பர் போங்க !

பெற்றோருக்கு நம்ம கஷ்டம் என்ன தெரியும் பிரச்சினையை இன்னும் பெரிசாக்கி விட்ருவாங்க , நாம் எப்ப தான் படகை ஓட்ட கத்துகிறது என்று சொல்லும் எதிரணியே !!!!!!

உங்களுக்கு ஒரு வார்த்தை !!! நாமே படகை கத்துகிட்டு ஒட்டி தனியா போவறதை விட எக்ஸ்பீரியன்ஸ் ஆளு நம்ம கூட இருக்கறச்சே , புயல் மழை வந்தா கூட ஹெல்ப் பன்னுவாயங்கள்ள , அதுக்கு தான் அவங்களையும் ஓட்டத்துல சேர்த்துக்க சொல்லுறது .
நாளைக்கு நடப்பது யாருக்கு ,தெரியாது ஆனா நம்ம ஒரு குழப்பமான சூழ்நிலை வரப்போ அடுத்தவங்க அனுபவத்தை படிக்கறதோ கேக்குறதோ எதுக்கு நமக்கு நாளைக்கு உபயோகப்படும் என்பதால தானே .

பெற்றோரிடம் பிரச்சினைகளை சொல்வது என்பது பிரச்சினைகள் சரியாக மட்டும் இல்லைங்க நம் மனதிற்கு ஒரு வடிகால் தான். இன்னிக்கு எலியும் பூனையுமாக இருக்கு கணவன் மனைவி ஒரு நாள் அல்ல மறுநாள் லவ் பேர்ட்ஸ் ஆகா கூட ஆகலாம் . ஆனால் அதை பெற்றோகள் மட்டுமே அக்செப்ட் பண்ணுவாங்க நெருங்கிய நண்பர்கள் கூட , அன்னிக்கு எப்படி அடிச்சிகிட்டங்க தெரியுமா என்பார்கள் .

பிரச்சினை வரும்பது யாரிடமும் சொல்லாமல் இருப்பது எவ்வளவு பேர்ல முடியும் என்பது தெரியலீங்க . சொல்லாமல் இருந்தால மூளைக்குள் டென்ஷன் தாங்க வரும். அதை தவிர மன அழுத்தம் வீட்டில் வெளியில் யாரை பார்த்தாலும் எரிச்சல் . ஒரு காமெடிக்கு கூட சிரிக்காமல் கடுவன் பூனை போல உட்கார்ந்து விட்டத்தை வெறிப்பது இதெல்லாம் ஆகி மன நோயாளி ஆவாங்க . . கணவன் மனைவி பிரச்சினை , மிகவும் மனது சம்பத்தப்பட்டது .அந்த பாரத்தை தனியே மனசு தாங்காது

இப்ப எதிரணி சொல்லலாம் அது கணவனும் மனைவியும் சேர்ந்து குறைக்கணும் என்று. எல்லா சமயமும் பேச்சு வார்த்தைக்கு இந்த கணவன்மார்கள் வர மாட்டங்க அதே போல மனைவிமார்களும் முருக்கிப்பாங்க.

அதெல்லாம் விடுங்க. கல்யாணம் பண்ணி தந்தப்புரமும் எங்க இந்த பெற்றோர்கள் அடிக்கடி வந்து போறாங்க நம்ம பிள்ளைங்க நல்லா இருக்காங்களா ? ஏதும் சொல்ல முடியாத பிரச்சினை இருக்கா என்று தெரிந்து சரி செய்ய தான்.

திருமணம் செய்து கொடுத்தாலும் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் என்றும் தங்கள் குழந்தைகளே ! சோ அவங்க ஆலோசனை சொல்லும் போது கொஞ்சம் எமோஷனலாக தெரிந்தாலும், பிரச்சினைகளுக்கு விடிவும் பிறக்கும்.

எத்த தின்னா பித்தம் தெளியும் (ஹாய் நானும் பழமொழி சொல்லிட்டேன் ) அப்படி ஒரு சூழ்நிலை இருக்கறப்போ சொல்லுங்கப்பா பெற்றொஇடமும் சொல்லுங்க .

பித்தத்துக்கு அல்லோபத்தி மாதிரி சைட் இபக்த்ஸ் இருக்கற மேடிசினை கொடுக்காம ஆயுர்வேதிக் கொடுப்பாங்க. கொஞ்சம் கசந்தாலும் உடம்புக்கு , வாழ்க்கைக்கும் நல்லல்துப்பா நல்லது .

என்னோட( கொஞ்சம் மொக்க ன்னு எனக்கு தோணுது ) வாதங்களை படிச்ச நடுவருக்கு நன்றிப்பா . தேங்க்யூ

மேலும் சில பதிவுகள்