ஜெர்மனி தோழிகளே

நான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஜெர்மனிக்கு வந்துள்ளேன். இங்கு எனக்கு ஒன்றும் தெரியவில்லை. யாரும் நம் தோழிகள் இருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்.

இங்கு கிடைக்கும் பாலை காய்ச்சாமல் அப்படியே பயன்படுத்தலாம் என சிலர் கூறுகின்றனர். அது சரியா? குழந்தைக்கும் அப்படியே தரலாமா?

இல்ல பா.பாலை நல்லா காய்ச்சியே கொடுங்க.குழந்தைக்கு அது தான் நல்லது.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

தோழிகளே, எனக்கு இதுவரை பொடுகு தொல்லை இருந்ததில்லை. தற்பொழுது பொடுகும் , முடி உதிர்வும் அதிகமாக உள்ளது. எனது கணவருக்கும் இதே நிலைதான். இதற்கு என்ன செய்வது? இங்கு கிடைக்கும் shampoo எந்த shampoo உபயோகிப்பது? சற்று கூறுங்கள் தோழிகளே.

முடி அதிகமாக கொட்ட தான் பா செய்யும் ஒரு 3 மாதத்திற்கு ..அப்புறம் சரி ஆகி விடும்..ஷாம்பு l'oreal paris யூஸ் பண்னுறேன்.ஆனால் எனக்கு முடி நல்லா கொட்ட தான் செய்யுது.தோழீஸ் சொல்வங்க பா.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

வணக்கம் தோழிகளே, எனது 2 வயது மகனுக்கு உதடு காய்ந்து தோல் உரிகிறது. அதை அவன் மேலும் பிய்த்து,இரத்தம் வந்துவிடுகிறது.இதற்கு என்ன செய்வது? என்ன cream or oil போடுவது?

ஏதாவது ஒரு நல்ல லிப் பாம் பூசிவிடுங்க. தேங்காய் எண்ணெய், பட்டர் பூசலாம்.

குளிருக்கும் உதடு வெடிக்கும். உடலில் நீரின் அளவு குறைந்தாலும் வெடிக்கும். தண்ணீர் போதுமான அளவு குடிக்கக் கொடுங்க. பழங்கள் சாப்பிடக் கொடுங்க.

ஸ்ட்ரெஸ் இன்னொரு காரணி. பையன் சந்தோஷமாக ஆக்டிவாக இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். //அதை அவன் மேலும் பிய்த்து,// கவனத்தைத் திருப்ப அவருக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி இம்மா, நீங்கள் கூறியபடியே செய்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வணக்கம் தோழிகளே,

சுடிதார்,புடவை போன்ற ஆடைகள் இங்கு கிடைக்குமா? தெரிந்தால் கூறுங்கள்

மேலும் சில பதிவுகள்