கொழுமிச்சை சேமியா

தேதி: May 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

சேமியா - ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொழுமிச்சை - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிது
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
கடுகு, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். சேமியாவை வேக வைத்து நீரை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
கொழுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதில் கொழுமிச்சை சாற்றை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
அதனுடன் வேக வைத்துள்ள சேமியாவை உதிர்த்து போட்டு கிளறி இறக்கவும்.
புளிப்பு சுவையுடன் கூடிய கொழுமிச்சை சேமியா தயார். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கொளுமிச்சை??? புதுசா இருக்கே !!!
இது நார்த்தங்காயா?
புதிய குறிப்பிற்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கொலுமிச்சை சேமியா வித்தியாசமா இருக்கே.புதிய குறிப்பிற்கு வாழ்த்துக்கள் :)

Kalai

கவி இது நார்த்ங்காய் இல்லை, மேலே படத்தில் இருப்பது போலவேதான் இருக்கும். பழமாக இருந்தால் புளிப்பு சுவை இல்லாமல் சாத்துக்குடி போலவும் இருக்கும்.
பார்க்காமயே விட்டுட்டேன் தாமதமாக பதில் அளித்தமைக்கு தவறாநினைக்காதீங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்திற்கும் பதிவிற்கும் மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.