மணத்தக்காளி கீரை மசியல்

தேதி: May 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

மணத்தக்காளி கீரை - 2 கப்
வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 4
எண்ணெய், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு


 

கீரையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும்
எண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, கீரையில் சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு மசிக்கவும்.
சுவையான மணத்தக்காளி கீரை மசியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இங்க கிடைக்காதே..ஊருக்கு போகும்போது செய்து பார்கிறேன் :)

Kalai

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

கலா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா