அரிசி மாவுருண்டை

தேதி: May 17, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

பச்சரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பொடி செய்த கருப்பட்டி - 3/4 கப் - 1 கப் (இனிப்புக்கேற்ப)
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
சுக்குப் பொடி - கால் தேக்கரண்டி

பச்சரியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து சுத்தமான துணியில் பரப்பி உலர விடவும்.
அரிசியை தொட்டால் கையில் ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்ந்ததும் மிக்சியில் இட்டு மாவாக்கி சலித்துக் கொள்ளவும்.
சலித்த மாவுடன் தேங்காய் துருவல், கருப்பட்டி, ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவு கையால் பிடித்தால் உருண்டையாகும் அளவிற்கும், உதிர்த்தால் உதிர்ந்து போகும் அளவிற்கும் ஈரப்பதம் உடையதாக இருக்கும். உருண்டையாக பிடிக்கவரவில்லை என்றால் மேலும் சிறிது தேங்காய் துருவல் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
பிறகு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்தால் சுவையான, சத்தான அரிசி மாவுருண்டை தயார்.

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் இந்த மாவுருண்டை செய்து கொடுப்பார்கள். ஏலக்காய் சுக்கு வாசனை பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம். எல்லாமே பச்சையாக சேர்ப்பதால் சீக்கிரம் கெட்டுப்போகும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதை பதப்படுத்தப்பட்ட அரிசி மாவில் செய்ய முடியாது. இந்த மாவுருண்டையை சாப்பிட்ட பின்பு அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் கால் கப் தண்ணீர் குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். சாப்பிட்ட உடனே அதிகமாக தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

உருண்டை சூப்பர். சுலபமான சுவையான ஆரோக்கியமான குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்டு ஊக்குவிக்கும் டீம் க்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி! இந்த குறிப்பு நீங்க கருப்பட்டி பற்றி கேட்டதும்தான் ஞாபகம் வந்துச்சு. உடனே செய்துட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பார்கவே நல்லா இருக்கு கூடிய சீக்கிரம் செய்து விட்டு பதி விடுகிறேன் கவி அக்கா....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நன்றி ஃபரிதா! செய்து பாருங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

:):):)

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நல்ல சத்தான உருண்டை. காற்றலையில் மிதந்து வந்து ஏலம் சுக்கு வாசனையுடன் என் நாக்கில் கரைந்து உள்ளே போய்விட்டது.

அன்புடன்
சியாமளா

கவி,
சுவையான குறிப்பு..
கருப்பட்டிக்கு மாற்றா வெள்ளம்/பனைவெல்லம் சேர்க்கலாமா?
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஏலம் சுக்கு வாசனை காற்றிலேயே மிதந்து வந்திடுச்சா :)

நன்றி ஷியாமளா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்து செய்யலாம் கவி. ஆனால் நிச்சயம் சுவையில் வித்யாசம் இருக்கும். நான் வெல்லம் சேர்த்து செய்திருக்கிறேன். ஆனால் கருப்பட்டி அளவு அதற்கு சுவை இல்லை.

வாழ்த்துக்களுக்கு நன்றி கவி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப அருமைங் கவிசிவா மேடம் :-)

நட்புடன்
குணா

கவி

குறிப்பு அருமை.
செய்து பார்த்து சொல்கிறேன்.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றிங்க குணா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரம்ஸ் :). செய்து பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!