காரட் பீன்ஸ் பொரியல்

தேதி: May 18, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

காரட் - ஒரு கிலோ
பீன்ஸ் - 2 கிலோ
மிளகாய் வற்றல் - 15
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - கால் கிலோ
எண்ணெய் - அரை கப்
தேங்காய் - ஒன்று
பெருங்காயத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி


 

பீன்ஸ், காரட் இரண்டையும் பொடியாக நறுக்கி, வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
தாளித்தவற்றுடன் வேக வைத்த பீன்ஸ் மற்றும் காரட்டை தண்ணீரை வடித்து விட்டுச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு அதில் வேகவைத்த பருப்பில் தண்ணீரை வடித்து விட்டுச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கிளறிய பிறகு அதில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக கிளறவும்.
அதன் பிறகு பெருங்காயத் தூள் மற்றும் உப்பு போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, காய் நன்கு வேகும் வரை 5 நிமிடங்கள் கிளறி, கரண்டியை வைத்து காயின் மேல் பரவலாக அழுத்தி தேய்த்து விட்டு அப்படியே மேலும் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கிவிடவும்.
காரட் பீன்ஸ் பொரியல் தயார். இது ஒரு பிராமண வகை உணவு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்களோடு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி . உங்களது சேவைகள் எனக்கு பெரிதும் உதவியாக உள்ளது . தொடர்க உங்களது சேவை

நன்றி
துஷி

"உள்ளது உணர்"

ரொம்ப நல்ல இருக்கு

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது