ஈசி சிக்கன் குருமா

தேதி: May 20, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
அரைக்க:
தேங்காய் - 2 துண்டுகள்
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு - தாளிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கி சிக்கனை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துச் சேர்க்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
ஈசி சிக்கன் குருமா தயார். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா&அறுசுவை குழுவினர்க்கும் நன்றி..

Be simple be sample

சூப்பர் ரேவ்ஸ். எனக்கு இது போல் குருமா பிடிக்கும். அவசியம் அடுத்த முரை சிக்கன் வாங்கும் போது செய்துட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையாக இருக்கிறது ரேவதி.. வாழ்த்துக்கள்.. கண்டிப்பா ட்ரை பன்னிட்டு சொல்றேன்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

குக்கர்ல இருக்கார் கோழி ;) கொஞ்ச நேரத்தில் படம் போடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா