கார தேன் கோழி

தேதி: October 17, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி இறக்கைகள் - ஒரு கிலோ
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
பூண்டி விழுது - கால் தேக்கரண்டி
தேன் - இரண்டு மேசைக்கரண்டி
சோயா சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி
எலுமிச்சை ரசம் - இரண்டு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

கோழி இறக்கைகளை நன்கு கழுவி அரைதேக்கரண்டி உப்பை போட்டு மிளகுத்தூளையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
அவனை 375 டிகிரி F ல் வைத்து சூடாக்கவும்.
பிறகு அவனில் வைக்ககூடிய தட்டில் கோழியை பரப்பி வைத்து அவனில் வைத்து அரைமணி நேரம் வேகவிடவும். அரை வேக்காடாக வெளியே எடுத்து வடிந்த நீரை கொட்டி விடவும்.
ஒரு பெரிய கோப்பையில் தேன் மற்றுமுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு கோழி இறக்கைகளை சாஸில் போட்டு நன்கு கலக்கி ஒரு மணி நேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து ஊற வைக்கவும்.
பிறகு மீண்டும் அவனை 400 டிகிரி Fல் வைத்து சூடாக்கி ஊறிய கோழி இறக்கைகளை உள்ளே வைத்து அரைமணி நேரம் வைத்து திருப்பி விட்டு பத்து நிமிடம் கழித்து வெளியில் எடுத்துவிடவும் .
பிறகு ஒரு சிறிய கோப்பையில் அரை கோப்பை மயோனைஸ், ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சைரசம், ஒரு சிட்டிகை மிளகு, உப்புத்தூள், கால்கோப்பை செலரித்துண்டு, ஒரு துளி மிளகாய் சாஸை சேர்த்து நன்கு கலக்கி தயாரித்துள்ள கோழி இறக்கையுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்