பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்

நான் இது வரைக்கு பட்டில கலந்துக்கனதே இல்ல..
சரி நேத்துலந்து முளைய போட்டு கசக்கி,பிழிஞ்சி பார்த்தாலும் ஒன்னும் வரல(சரி இருந்ததான வரும்)

என்னோட அணி முழுமையன பகிர்வு...
பகிர்வு..பகிர்வு.

பாருங்க..நடுவரே நம்மளொட சந்தோஷம் ,துக்கம்னா நாம நமக்கு நெருக்கமானவங்ககிட்டதான பகிர்ந்துக்குவோம்
நமக்கு நெருக்கமானவங்க நம்ம நட்பை தவிர யாரா இருக்க முடியும்..

நட்புக்குள்ள ஆழமான புரிதல் இருந்தாதான நாம எல்லாத்தையும் பகிர்துக்குவோம்..இல்ல இல்ல நான் யாருக்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்..நானே எல்லாத்தையும் பார்த்துப்பேன் சொன்
எப்படீங்க..நான் சொல்ல நாட்டேன்பா இதால ஆபத்து வந்திடும்னு

உஷாராஇருக்காங்களம்.

நடுவரே “உன் நண்பனை பற்றி சொல் உன்னைபற்றி
சொல்கிறேன்“ சொல்லறாம்க்களே..நாம நல்ல
நண்பனா இருந்தா நம்ம நண்பணும்
நல்லவனாத்தான இருப்பான்..

வேப்பெண்ண,வெளக்கெண்ண,மண்ணெண்ண எவன் எப்படி போன எனக்கு என்னனு போய்டும்
பார்த்து பார்த்து பழுகுற நட்பு..

Be simple be sample

வணக்கம் நடுவர் அவர்களே... நட்பிற்க்கு சுவை சேர்ப்பது "முழுமையான பகிர்வு" தான் என்ற அணியின் பக்கம் நான் வாதாட இருக்கிறேன்..

நாம் நம் அன்றாட வாழ்வில் பலவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்களையெல்லாம் நண்பர் என்று சொல்லிவிடமுடியாது.. எதிரணி தோழி சொல்வது போல "ஃபேஸ் புக்"கில் உரையாடும் மனிதர்களை எல்லாம் நண்பர்கள் என்று சொல்லிவிடமுடியாது..

நம் வாழ்வில் ஒரு பகுதியாக வருபவர்கள் தான் "நண்பர்கள்". அப்படி இருக்கும்போது அவர்களிடம் பட்டும், படாமலும் அதாவது முழுமையான பகிர்வு இல்லாமல் இருப்பது சில நேரங்களில் இருவரில் ஒருவருக்கு மன வருத்ததைக் கூட தரலாம்.

உதாரணத்திற்க்கு ஒரு நிகழ்ச்சியை இங்கு பகிர விரும்புகிறேன். இரு சகோதரிகள் அவரவர் குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கிறார்கள். அவர்களது தூரத்து உறவினப்பெண் ஒருவர், அவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்கிற காரணத்துக்காக வெளிநாடு வந்தார். மூத்த சகோதரியும், அந்த உறவுக்காற பெண்மனியும் "தோஸ்த்"..

மூத்த சகோதரியும், இளைய சகோதரியை விட நண்பிக்குத்தான் முதல் இடம் தந்தார். அவர்கள் குடும்பத்தோடு இவர்கள் வீட்டிற்க்கு வந்து தங்குவார்கள். இவர்களும் அங்கு போய் தங்குவார்கள்... இப்படி போய்க் கொண்டிருந்தது அவர்கள் நட்பு.

அந்த உறவினப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.. ஆறு மாதத்திற்குப் பின் சொந்த நாடு திரும்பிவிட்டார் அந்த பெண்மனி. ஒரு நாள், அவரது இன்னொரு சகோதரி மூத்த சகோதரியிடம் எதேச்சையாக அந்த பெண்மனியின் வீட்டில் விஷேஷம் என்றும், இவர்களை அழைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.."நீங்கள் இருவரும் நண்பிகள் தானே; உனக்கு தெரியாதா??" என்று கேட்டதுதான் மிச்சம்.... மூத்த சகோதரிக்கு முகத்தில் ஈயாடவில்லை..

இனிமேல் அந்த பெண்மனியை பார்க்க நேர்ந்தால் பழையபடி நட்பு பாராட்ட இயலுமா?? சொல்லுங்கள் நடுவர் அவர்களே....

"நட்பு என்பது நடிப்பாக இருக்கக் கூடாது; நாடித்துடிப்பாக இருக்க வேண்டும்" என்று கூறி தற்சமயம் விடைபெறுகிறேன்..

நேரம் கிடைத்தால், இன்னும் வாதங்களுடன் வருகிறேன்... நன்றி!!!!

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

//.நேற்று ஃபேஸ்புக்கில் அறிமுகமான நண்பருடன் அனைத்தையும் உளறிக்கொட்டி வாழ்வை வீணாக்குவது.// பேஸ்புக் , பேசாத புக்கு எல்லாம் அறிமுகம் ஆகறதுக்கு முன்னாடியே எதிரணி சொல்றாப்பல நடந்துருக்கு யுவரானர்,அறிமுகம் ஆவரங்க எல்லாருமே நண்பேன்டா அப்படின்னு நினைச்சுட்டு அனைத்தையும் உளறிக்கொட்டி சொல்றவங்களுக்கு வேணும்னா இதுபோல நடக்கறது சாத்தியம் // கவனிங்க நடுவரே, சாத்தியம்னு தான் சொல்றேன்//
//நட்பு என்பது புரிதல் நடுவரே,அப்படி இருக்கும்போது உன் நிலைமையை சொல்லி பகிர்ந்து புரிந்துகொள்வது சரிவருமா?இல்லை நீ எந்த நிலையில் இருக்கிறாய் என்று புரிந்துகொண்டு நடந்துகொள்வது உசிதமா?// நண்பனுக்கு வயிறுவலிக்குதுன்னு சொன்னாத்தானே நடுவரே நாங்க ஆஸ்பத்திரி, மருந்து,மாத்திரைன்னு ஏதுனா உதவி வேண்ம்னா செய்ய முடியும், அப்படி இல்லாம் எதிர்அணி சொல்றாப்பல அளவா சொல்ற நண்பன் ஒரு மாதிரி இருகிறத பார்த்துட்டு நாங்களே தலைவலிக்கிறவருக்கு, வயித்துவலி மாத்திரைய குடுத்துட்டம்னா, அவருக்கு திருகுவலியும், எனக்கு போலீஸ்கிட்ட இருந்து தர்மாடி வாங்குன வலியும் தான் கிடைக்கும்..;). பின்ன உயிர் நண்பனை மருந்து மாத்தி கொடுத்து கொல்ல முயற்சின்னு பேப்பர்ல வரும்...;) தானா புரிஞ்சு நடந்தா இத மாதிரி தான் நடக்கும் நடுவரே..
//நடுவரே, பொறியல் சூப்பர்னு சாதம் முழுக்க பொறியலோடு உண்பீரா?// எதிஅண் நட்ப பொற்யல்ன்னு சொல்லி லைட்டா டச் பண்ணசொல்றாங்க நடுவ்ரே, நாங்க நட்ப சாதம்னு சொல்றோம் அவ்வளோ தான்,
நடுவரே முத்ல்ல நட்பு என்பது எப்படி இருக்கனும்?
தாமரை இலை மேல் உள்ள நீர் துளி போல் இருத்தல் வேண்டும்.அப்படின்னா எதிரணி சொல்றாப்பல அளவான பகிர்தல் தான் நட்புக்கு சுவையான்னு நீங்க நினைக்கலாம், ஆனா அர்த்தம் என்னன்னா
எப்படி, இலையால் நீருக்கு ஏதும் தீங்கு இல்லையோ அது போல்
ஒருவரால் மற்றவர்க்கு ஏதும் தீங்கு இல்லாமல் இருத்தல் வேண்டும், அந்த மாதிரி நட்புகிட்ட எதுக்கு ஒளிவு மறைவு நடுவரே?
//.கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார்,தினமும் பார்த்து என் குடும்பம் இப்படி,சூழ்நிலை இப்படி,மேலும் அறிவுகள்,பிடித்தவை,பிடிக்காதவை இவற்றை பற்றி பேசிப்பேசியா பகிர்ந்து கொண்டார்கள்?///ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.ஒருவருக்கொருவர் பார்த்துக்க மட்டும் தான் இல்லை நடுவரே, மத்தபடி இவரப்பத்தி அவருக்கும், அவரப்பத்தி இவருக்கும் எல்லா விசயமும் தெரிஞ்சு தான் இருந்துருக்கு...:)
பார்த்த வுடனே ஏற்படற நட்புல வேணுமா பிரச்சனைகள் வரலாம், ஆனா பரஸ்பரம் புரிதலோட ( எல்லா நிலையிலும் )பழகுன நட்புகிட்ட எந்த விசயம் போனாலும் பிரச்சனை வராது, நட்பு மேலும் மேலும் அதிகமாகும்னு தான் எஙக அணில சொல்றோம்.
நட்பு அப்படிங்கிறது வலைப்பின்னல் மாதிரி.. அதுக்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவப்படாது, தேவையும் இல்லை...:)

நட்பு என்பது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத ஒரு உறவு எதுன்னா அது நட்பு மட்டும் தான். ஏன்னா நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்புக்கு மிக மிகத் தேவையான ஒரு விசயம்னா நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை உள்ள இந்த நட்புகிட்ட நம்ப இன்ப துன்பங்களை பகிர்ந்துக்கிறதுல என்ன தப்பு இருக்க முடியும்? அறுசுவையும் சேர்ந்து இருப்பது தான் விருந்து .அதுபோல எல்லா ஏ டூ இஜட் சொல்றதுதான் நட்புக்கும் சுவை..
அதனால் இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது தான் உண்மையான நல்ல நட்புக்கு சுவை சேர்க்கும் எனக் கூறி எனது செகண்ட் அட்டம்ட முடிச்சுகிறேன்... ஆனா மீண்டும் வருவேன் நடுவரே...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வணக்கம்ங்க அக்காங், வருகைதந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க :-) நீங்க முழுமையான பகிர்வு அணியா.!! சந்த்தோஷம்
//நம்மளோட சந்தோஷம் துக்கம்னா நமக்கு நெருக்கமானவங்ககிட்டதான் பகிர்ந்துக்குவோம், நமக்கு நெருக்கமானவங்க நம்ம நட்பைவிட தவிர யாரு இருக்க முடியும்//
ஆமாங்க கண்டிப்பாக,
//உன் நண்பனை காட்டு, உன்னைப்பற்றி சொல்கிறேன்//
அருமைங்க,
//நாம நல்ல நண்பனா இருந்தா நம்ம நண்பனும் நல்லவனாத்தான இருப்பான்//
கண்டிப்பாக நோட் பண்ணவேண்டிய விஷயம்,
மேலும் பல விரிவான வாதங்களுடன் வாங்க, அக்காங் உங்கள் வாதத்திற்கு எதிரணியினர் என்ன சொல்றாய்ங்கனு பாப்போம் :-)

நட்புடன்
குணா

வாங்க. வணக்கம்..
நீங்களும் முழுமையான பகிர்வு அணியா.!! மகிழ்ச்சிங்க,
// நம் வாழ்வில் ஒரு பகுதியாய் வருபவர்கள் தான் நண்பர்கள், அவர்களிடம் பட்டும் படாமலும் அதாவது முழுமையான பகிர்வு இல்லாமல் இருப்பது சிலநேரங்களில் இருவரில் ஒருவருக்கு கூட மனவருத்தத்தைக்கூட தரலாம்//
ம்ம்.. நீங்கள் சொல்வதை பார்த்தால்
பாவம்தான்.. அந்தப்பெண்மணி பழையபடி நட்புடன் பழக காயம்பட்ட மனம் மறுக்கவே செய்யும்...
//"நட்பு என்பது நடிப்பாக இருக்கக்கூடாது ; நாடித்துடிப்பாக இருக்கவேண்டும்"//
முழுமையான பகிர்வில் நட்பு வட்டம் இருப்பதே சுவை,னு சொல்றீங்க :-) மேலும் வாதங்களுடன் வாங்க...

நட்புடன்
குணா

நடுவரே மனதால் உணர முடியாத நட்பிடம் வார்த்தைகள் எந்த அளவிற்கு புரிந்துகொள்ள செய்திடும்?சிச்சுவேஷன் சொன்னாதான் புரியுமா?
நண்பன் - 1 அண்டு 2 இருக்காங்க அதில் 1 விரும்பும் பெண்ணை 2 விரும்பினால் நம்பர் 1 2க்கு தெரியாமல் விட்டு கொடுப்பாராம்.இது எப்படி நியாயம் நடுவரே??? நம்பர் 2க்கு பின்னால் இது தெரியவரும்போது இரு நண்பர்களுக்கும் மனமுறிவை ஏர்படுத்துமல்லவா???வாழ்வில் எந்த நட்பையும் நம்பாமல் வெறுக்கும் மனப்போக்கு வருமல்லவா???இது சரிவருமா???
நம் எதிரணி சொல்வாங்க இதுக்குதான் பகிர்வு வேணும்னு......ஆனால் பகிர்ந்தால் தன்னைவிட தன்நண்பன் சுகமாகட்டும்னு ஆண்டியா யோசிக்கும் சில முட்டாள் நட்புக்களும் இக்காலத்தில் உண்டு நடுவரே....
செண்ட்டிமென்டல் பொஸசிவா இருக்கும் நண்பர்கள்தான் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு பின் சுயரூபம் தெரிந்து கூடஇருக்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் திணருகிறார்கள் நடுவரே.....உங்களுக்கு தெரியாததா? எத்தனை சினிமாவில் பாக்கரீங்க?!
நடுவரே, கஷ்டம்னு காசு கேட்டுபாருங்க முடிந்தவரை கழண்டுக்கதான் பார்ப்பாங்க அது நட்பானாலும் சொந்தமானாலும் ஒன்றே...:-(,
விதிவிலக்காக கொஞ்சம்பேர் பணம் கொடுப்பர் அதுவும் பேரைக்காப்பாற்ற.இல்லையா உள்மன மகிழ்ச்சியோடு கொடுக்கராங்கண்ணே வையுங்க..அதை எத்தனைகாலம் விட்டுவைப்பர்,திரும்ப வட்டியில்லாமல் வாங்குவாரா?இல்லை கேரண்ட்டி இல்லாமல் கொடுப்பாரா???
அது கிடக்கட்டும் நடுவரே......என் அண்ணன்,அண்ணி ஏதாவது ஒரு உறவுக்கு கிட்னி தெவை என்னுது பொருந்தாது,உன்னுது பொருந்தும் டொனேட் பண்ணுன்னு சொல்லிப்பாருங்க நடுவரே...பயபுல்ல பி.டி.உஷாவ முத்திட்டு ஓடி மெடல் வாங்குவானாக்கும்.......யோசிங்க நடுவரே.....
அனைத்து பகிர்வுகளும் வாழ்வுக்கு உகந்தவை அல்ல, அளவான பகிர்வே ஆனந்தம் தரும்.....மீண்டும் வருகிறேன் பதிவோடும் பகிர்வோடும்........

நடுவருக்கு காந்தவிலக்கு விசை பற்றி தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன்...! ஒருபக்கதுருவங்கள் ஒன்றையொன்று விலக்கிக்கொள்ளும்.அதுவே எதிர் துருவங்கள் ஒன்றாஇயொன்று ஈர்த்துக்கொள்ளும்....
தனக்கு பிடித்த பூ தன் தோழிக்கும் பிடிக்கும்,தனக்கு பிடித்தகலரில் துவங்கி,சாப்பாடு,பாடல்,மியுசிக்,பாய்பிரண் வரைக்கும் போகும்....ஒரு கட்டத்தில் அவளுக்கென்ன எனக்கு பிடித்ததுதான் பிடிக்கும்னு ஒரு தேக்க நிலை வரும்....:-(
காதலைப்போல நட்பும் ஒரு உன்னதம் நடுவரே...., தோழமையின் விருப்பு வெருப்புகளை தேடத்தூண்டும் நேரடியாக எனக்கு இது பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டோ சொல்லியோ பகிர்ந்துக்காது.அதில் சுவையும் இல்லை நடுவரே...
காதலியின் முகத்தில் வசீகரம் இருந்தலும் அதையும் மீறி ஒரு கவர்ச்சியிருக்கும் இதை அவளிடம் பகிரமுடியாது,அதேபோல நட்பிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது, தன் தோழமையைப்பற்றி புரிந்துகொள்ளும் தனித்தன்மை அதை நேரடியாக பகிர்வதில் சுவை குறைவே....

ஒரு பார்ட்டி அரேஞ் பண்ரீங்க,எனக்கும் என் அணியிணருக்கும் விருப்பப்பட்டதை த்ரிந்து புரிந்து சமையல் செய்யசொல்ரீங்க..... நம் எதிரணியினரிடம் அவர்களுக்கு வேணுங்கரதை கேட்டு சமைக்கசொல்ரீங்க, எதில் சுவை அதிகம் நடுவரே?
பார்ட்டியில் நமக்கு பரிமாறப்படுவது இதுதான்னு தெரிந்து வருபவர்களுக்கா?அல்லது தெரியாமல் வந்து அட நம் தோழர் நமக்கு விருப்பப்பட்டதை தெரிந்து வைத்திருக்காரேன்னு ஒரு புரிதல் வருமே அந்த மகிழ்ச்சிக்கா???நீங்களே முடிவுபண்ணுங்க

எந்த ந்ண்பனை வீட்டிற்கு வெளியேயும்,எந்த நண்பனை வீட்டிற்கு உள்ளேயும்,எந்த நட்பை பூஜை அறைவரையும் அனுமதிக்கலம்னு நாம் தெரிந்து வைத்திருக்கும்போது, நட்புகளிடம் எதை பகிர்ந்து கொள்ளலாம் எதை பகிரக்கூடாதுன்னு தெரிந்து செயல்படுவதே வாழ்விற்கு நல்லது நடுவரே...
ஒவ்வொருவருக்கும் தன் உடலும் மனமும் தவிர மற்ற அனைவரும் அன்னியரே, அதில் சில அளவுகளை வைத்து வகுத்து நாம் சிலரை மனதின் அருகேயும்,சிலரை தள்ளியும் வைத்திருக்கோம்.அப்படி இருக்க நமக்குன்னு உள்ள ரகசியங்களை நட்பு என்ற ஒன்றால் மட்டும் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அது தவறும்கூட நடுவரே.....ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எண்ணங்கள் வேன்டும்,அதை நட்பு என்ற ஒருவார்த்தையால் அனைவரிடமும் பகிரவேண்டிய அவசியம் இல்லை நடுவரே......உங்களை திறந்த புத்தகமாக்கினால் இவ்வளவுதானா இவன் என்ற எண்ணம் வரும் அது நட்பை விலகிச்செல்ல வைக்கும்....யோசிங்க நடுவரே.....

நட்பை சாதம்னு சொல்லி ஃபுல்லா சாப்பிடுங்கனு சொல்றீங்க, ம்ம்
//பார்த்த உடனே ஏற்படற பிரச்சினைகள் வேணா புது நட்பில் ஏற்படலாம், ஆனா பரஸ்பரம் புரிதலோட (எல்லா நிலையிலும்) பழகுன நட்புகிட்ட எந்த விஷயம் போனாலும் பிரச்சினை ஆகாது, நட்பு மேலும் மேலும் அதிகமாகும் //
//நட்பு அப்டிங்கிறது வலைப்பின்னல் மாதிரி, recharge, activation, roaming &signal எல்லாம் தேவைப்படாது, தேவையும் இல்லை//
//அறுசுவையும் சேர்ந்து இருப்பது தான் விருந்து, அதுபோல் ஏ டூ இஜட் சொல்றதுதான் நட்புக்கு சுவை//
ரொம்ப அருமைங்க, மேலும் பல வாதங்களோட வாங்க :-) அளவான பகிர்வு அணியினர் இதற்கு என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-)

நட்புடன்
குணா

//செண்ட்டிமென்டல் பொஸசிவா இருக்கும் நண்பர்கள் தான் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு பின்சுயரூபம் தெரிந்து கூட இருக்கவும் முடியாமலும் விலகவும் முடியாமலும் திணறுகிறார்கள்//
கண்டிப்பாக இதுவும் சில இடங்களில் நடக்குதுங்க, சினிமாவிலும் இப்படித்தான் காட்டுறாங்க,

//என் அண்ணன், அண்ணி ஏதாவது ஒரு உறவுக்கு கிட்னி தேவை, என்னுது பொருந்தாது உன்னுது பொருந்தும், டொனேட் பண்ணுனு சொல்லிப்பாருங்க//
ஆஹா...
// அனைத்து பகிர்வுகளும் வாழ்வுக்கு உகந்தவை அல்ல, அளவான பகிர்வே ஆனந்தம் தரும்//
ம்ம்..அருமைங்க,
முழுமையான பகிர்வு அணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.
அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க :-)

நட்புடன்
குணா

..எல்லாரும் ஒரு உதாரணம் சொல்லறாங்க..இவ்ளோ ஏங்க எனக்கும் என் தோழிக்கும் இருக்குர நட்பு எங்களுக்கே ஆச்சர்யமான விஷயம்தான்.எனக்கோ இல்ல அவளுக்கோ ஏதோ கஷ்டம் இல்ல சந்தோஷம் நு பகிர்ந்துக்கனும்னு நினைச்சாலே போன் பண்ணீடுவோம்அவளுக்கு நானோ இல்ல எனக்கு அவளோ போன் பண்ணனும்னு நினைக்கும் போதோ இங்க போன் வந்திடும்....உண்மையான நட்புக்கு அழகே முழுமையான பகிர்வும்,புரிதல்தாங்க..

Be simple be sample

மேலும் சில பதிவுகள்