பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

சந்தேகமே இல்லாமல் நட்புக்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வு தான்.... எந்த ஒரு விஷயங்களையும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அது நம் நட்பை வலுபடுத்துகிறது.... நம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால் அது ரெண்டு மடங்கு அதிக மாகும்... நமது சோகத்தை பகிரும் போது நமது மனம் லேசாகி விடும்... நட்பில் முழுமையான பகிர்வு இல்லை என்றால் அது எப்படி உறுதியான நட்பாக இருக்க முடியும்?
நட்பில் ஒளிவுமறைவு இருந்தால் அது எப்படி உண்மையான நட்பாக இருக்க முடியும்????

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

//..அதை எத்தனைகாலம் விட்டுவைப்பர்,திரும்ப வட்டியில்லாமல் வாங்குவாரா?இல்லை கேரண்ட்டி இல்லாமல் கொடுப்பாரா???///
இப்படி சொல்றாங்களே நடுவரே இதுக்கு உதாரணம் என் ஃபிரெண்டோட வாழ்கையே இருக்கு அவளுக்கு காதல் திருமணம் ஆனா அவங்க திருமணம் செய்துக்க போதுமான அளவு பண வசதியோ திருமணத்திற்கு பிறகு வீடு பார்த்து தங்கவோ வசதி இல்லை... ஆனா என் ஃபிரெண்ட் கணவரோட நண்பர் அவங்களுக்கு எல்லா வசதியும் செய்து குடுத்தாங்க அனால் இன்று வரை அதற்கு அவங்க எந்த பலனும் எதிர் பார்கள... இதற்கு காரணம் நட்பு மட்டும் தான்... நட்பை தவிர அவங்களுக்குள்ள வேறு எந்த உறவும் இல்ல... அவங்க நட்பில் எந்த வித ஒளிவுமறைவும் இல்லாதது தான் அவங்க உறுதியான நட்புக்கு காரணம்... நாம அளவா பகிர்ந்து கிட்டா எப்படி நடுவரே நட்பில் இருக்கம் இருக்கும்??? அளவோட பகிர்ந்துகொள்ளும் போது நாம எப்படி அவங்க நமக்கு உதவனும் நு எதிர் பார்க்க முடியும்????

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

//காதலைப் போல நட்பும் ஒரு உன்னதம்//
//தோழமையின் விருப்பு வெறுப்புகளை தேடத்தூண்டும் நேரடியாக எனக்கு இது எனக்கு பிடிக்கும் இது பிடிக்காதுன்னு கேட்டோ சொல்லியோ பகிர்ந்துக்காது அதில் சுவையும் இல்லை//
அருமை அருமை

//தன் உடலும் மனமும் தவிர மற்ற அனைவரும் அன்னியரே, அதில் சில அளவுகளை வகுத்து சிலரை நம் மனதின் அருகேயும், சிலரை தள்ளியும் வைத்திருக்கோம், அப்படி இருக்க நமக்குன்னு உள்ள ரகசியங்களை நட்பு என்ற ஒன்றால் பகிர்ந்து கொள்ளமுடியுமா? //
இப்படி ஒரு விஷயம் இருக்குங்களா.!
முழுமையான பகிர்வு அணியினரே இதற்கு என்ன சொல்றீங்க?

//திறந்த புத்தகமாக்கினால் இவ்வளவு தானா இவன் என்ற எண்ணம் வரும், அது நட்பை விலகிச்செல்ல வைக்கும்//
நியூஸ்பேப்பர் மாதிரி இருக்காதீங்க, பெர்ஷனல் டைரி மாதி இருங்கனு சொல்றீங்க, அருமை அருமை, அடுத்த கட்ட வாதத்துடன் வாங்க,

நட்புடன்
குணா

மனதளவில் உள்ள புரிதல் அதிகமாக இருக்கும்போது முழுமையான பகிர்வு நட்புக்கு அழகுனு சொல்றீங்க..
ரொம்ப அருமைங்க, ஆச்சர்யமான விஷயம்.!

நட்புடன்
குணா

முதன் முறையாக பொறுப்பேற்றிருக்கும் குணாவிற்க்கு அன்பான வாழ்த்துக்கள்...

அன்புடன்
THAVAM

// நட்பில் முழுமையான பகிர்வு இல்லை என்றால் அது எப்படி உறுதியான நட்பாக இருக்க முடியும்?
நட்பில் ஒளிவுமறைவு இருந்தால் அது எப்படி உண்மையான நட்பாக இருக்க முடியும்???? //
வணக்கம், நீங்களும் முழுமையான பகிர்வு அணியா..!! சந்தோஷம், எதிரணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம். :)

நட்புடன்
குணா

// நட்பில் எந்த வித ஒளிவுமறைவும் இல்லாதது தான் அவங்க உறுதியான நட்புக்கு காரணம்... நாம அளவா பகிர்ந்து கிட்டா எப்படி நட்பில் இருக்கம் இருக்கும்??? அளவோட பகிர்ந்துகொள்ளும் போது நாம எப்படி அவங்க நமக்கு உதவனும் நு எதிர் பார்க்க முடியும்???? //
ரொம்ப சரியா சொன்னீங்க, அருமை அருமை..அடுத்த கட்ட வாதத்தோட வாங்க..

நட்புடன்
குணா

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ,உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? வாதத்தோட வாங்க :)

நட்புடன்
குணா

இதுவரை முழுமையான பகிர்வு அணியில் *"சுமிபாபு, சங்கீசெல்வா,இளவரசி மேடம், ஷபீ மேடம், Faridha மேடம், ரேவதி அக்காங் *ஆகியோர் , தங்கள் வாதங்களை அருமையாக பதிவிட்டு வருகின்றனர்.
அளவான பகிர்வே அணியில் *"ரேணுகா மேடம், கவிசிவா அக்காங், அருள்செல்வி சகோ"*,ஆகியோர் , தங்கள் வாதங்களை அருமையாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் பல அன்புள்ளங்கள் வருகை தந்து வாதம் புரிந்து பட்டியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், :)

நட்புடன்
குணா

நடுவரே மீண்டும் வணக்கம். அளவான பகிர்தல் என்று எங்கள் அணியினர் சொல்வது உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதை அல்ல. நண்பனே என்றாலும் குடும்ப விஷயங்களை எல்லாம் நன்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அன்பதைதான். இதைத்தான் அளவான பகிர்தல் என்கிறோம்.

நண்பன் ஏதோ ஒன்றை தன்னிடம் மறைத்து விட்டதாக தெரிய வந்தால் நட்பில் விரிசல் வருமே என்கிறார்கள் எதிரணியினர். அதற்கு காரணம் அலவான பகிர்தல் இல்லை நடுவரே. அந்த நட்பில் புரிதல் இல்லை என்பதே காரணம். தன் நண்பன் தன்னைடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லாம இருந்திருந்தால், அதற்கு தன் நண்பனுக்கும் ஏதும் நியாயமான காரனம் இருக்கும் என்பதை நல்ல நண்பனால் புரிந்து கொள்ள முடியும். இந்த புரிதல் இல்லாத நட்பில்தான் பிரச்சினை வரும்.

நட்பு என்பது எதனையும் எதிர்பாராததாக இருக்க வேண்டும். என் நண்பன் என்பதற்காக அவருக்கென்று ரகசியங்கள் இருக்கக்கூடாது எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நட்பே கிடையாது.

எந்த ஒரு உறவிலும் முழுமையான பகிர்வு என்பது சாத்தியமே இல்லை. உறவுகளிடம் சொல்ல முடியாத விஷயங்களை நண்பர்களிடம் சொல்ல முடியும் என்பது உண்மை. ஆனால் நண்பனிடம் கூட சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கும். அதையும் முழுமையான பகிர்வே நட்புக்கு அழகுன்னு எதிரணி சொல்வது போல் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. முக்கியமாக கணவன் மனைவிக்கு இடையேயான விவாதங்கள் போன்ற நான்கு சுவற்றுக்குள் முடிய வேண்டிய விஷயங்களை முழுமையான பகிர்தல் நட்புக்கு தேவை என்ற அடிப்படையில் நண்பர்களிடம் சொல்லலாமா?

சூப்பர் சுப்ரீம் சுமார்னு எல்லாம் எதிரணியினர் கதை சொன்னாங்கோ :). நண்பனின் முகவாட்டம் கண்டு அவன் சொல்லாமலேயே ஒரு நல்ல நட்பால் புரிந்து கொள்ள முடியும். நட்புக்கு ஆறுதல் சொல்ல அவன் எல்லாவற்றையும் மனம் திறந்து கொட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல நட்பாக இருந்தால் " ஏன் டல்லா இருக்க... என்னிடம் சொல்ல முடியும் பிரச்சினைன்னா சொல்லு சேர்ந்து தீர்வு காண முயற்சிப்போம். என்னிடம் சொல்ல முடியாத பிரச்சினையா... பரவாயில்லை... கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணு. மனசை அமைதியாக்கிட்டு என்ன செய்யலாம்னு யோசி தீர்வு கிடைக்கும்னு " ன்னு ஆறுதலாக பேசுவதுதான் உண்மையான நட்பு. அதை விட்டுட்டு அவர் பேசாமல் இருந்தால் இவரும் பேசாமல் போனால் அதன் பெயர் நட்பு இல்லை நடுவரே!

என் கல்லூரி நட்புகளுடன் தொடர்பு அற்றுப்போய் கிட்டத்தட்ட 14வருடங்கள் கழித்து சந்தித்த போதும் அன்று இருந்த அதே நட்புரிமையுடன் எந்த தயக்கமும் இல்லாமல் பேச முடிந்தது. 14 வருடங்களாக எந்த விதமான பகிர்தலும் இல்லை. ஆனாலும் எங்களால் இயல்பாக அன்றிருந்ததைப் போலவே பேச முடிந்தது என்றால் அதுதான் நட்பு நடுவரே! உண்மையான நட்புக்கு தினம் தினம் சந்தித்து பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வருடங்கள் கழித்து சந்திக்கும் போதும் அதே நட்புடன் ஏந்த தயக்கமும் இன்றி பேச முடியும் நட்பே உண்மையான நட்பு. சிறந்த நட்பு. பகிர்தலே இல்லை என்றாலும் அந்த நட்பு நீடிக்கும்.

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டால்தான் நட்பு நீடிக்கும் என்பதெல்லாம் இல்லை. நட்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வதே சிறந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்