பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

நட்பைப்பற்றி ரொம்ப அழகான வர்ணனையுடன் ஆரம்பிச்சிருக்கீங்க..
பாரதி கவிதையும் அருமை, இணையத்தில் எடுத்த கவிதையும் அருமைங்க,
ஆஹா.. மகாபாரதம் கதையுமா??
முழுமையான பகிர்வில் உள்ள நட்பில் தற்செயலாய் ஏற்பட்ட தவறு கூட பெரிதாய் தெரியாது என்று சொல்றீங்க,
அருமை, அருமை மேலும் வாதத்துடன் வாங்க,
அளவான பகிர்வணியினர் என்ன சொல்றாங்கனு பார்போம்,

நட்புடன்
குணா

நட்பைப்பற்றி ரொம்ப அழகான வர்ணனையுடன் ஆரம்பிச்சிருக்கீங்க..
பாரதி கவிதையும் அருமை, இணையத்தில் எடுத்த கவிதையும் அருமைங்க,
ஆஹா.. மகாபாரதம் கதையுமா??
முழுமையான பகிர்வில் உள்ள நட்பில் தற்செயலாய் ஏற்பட்ட தவறு கூட பெரிதாய் தெரியாது என்று சொல்றீங்க,
அருமை, அருமை மேலும் வாதத்துடன் வாங்க,
அளவான பகிர்வணியினர் என்ன சொல்றாங்கனு பார்போம்,

நட்புடன்
குணா

வாங்க வணக்கம், நீங்க அளவான பகிர்வு அணியா? விரிவான வாதங்களுடன் மீண்டும் வாங்க :-)

நட்புடன்
குணா

கொஞ்சம் வேலை'ல பிஸி ஆயிட்டேன்ங்க, இரண்டு அணிக்கும் கலகம் வர்ற மாதிரி தலைப்பா? நல்லதுங்க ஒரு நல்ல தீர்வு கிடைக்கும், இரண்டு அணி சராமரி தாக்குதல் பண்றீங்க, பதிவுகள் வர தாமதமானாலும் உங்க ஃபைட்டை தொடருங்க , வரவேண்டிய நேரத்தில கரெக்டா நான் வந்திடுவேன் :-)

நட்புடன்
குணா

வெயிட்டிங் வேண்டாம், உங்கள் வாதங்களை தொடருங்க,

நட்புடன்
குணா

நடுவருக்கு வணக்கம்.. இராமயணம், மகாபாரதம்னு இதிகாசநட்பையெல்லாம் கூறும் எதிரணியாளர்களிடம் ஒரு கேள்வி.. இப்ப சின்னபுள்ளையா இருக்கச்ச பள்ளிக்கு போறம் பலப்பத்தை தொலைச்சிப்புடறோம், வீட்டுக்கு வாரோம்.. அம்மாகிட்டையோ, அப்பாகிட்டையோ திட்டையும் வாங்கிடறோம். அந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வார தோழிக்கிட்ட நான் இப்பத்தான் அடிவாங்கினேன்,திட்டு வாங்கினேனு சொல்றமா? இல்ல சொல்லத்தான் முடியுமா? சமாளிச்சு பேசி அனுப்பிடறோம்.. பல்விழுகிற முன்னாடியே இவ்வளவு கேர்ஃபுல்லா இருக்கிற நாம பெரியவங்களாகி எல்லாத்தயும் பிட்டு பிட்டு வெப்போம்னு சொல்றது நிசமா??
நியாயமா?
வீட்ல நட்க்கிற சங்கதி ஒண்ணு விடாம போய் ஸ்கூல்ல கடைவெச்சிறாதனு அம்மா சொல்லி அனுப்புவாங்களே அதெல்லாம் எதுக்கு? சின்னபுள்ளையா இருக்கிறப்ப இருந்தே பாலபாடம் என்னன்னா கண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு போய் உளறப்படாதுனுதானே..

எதுக்கும் ஒரு எல்லை உண்டு.. கரைகாணா கடல் உண்டோ? அந்த மகாபெரும் சமுத்திரத்திற்கே கரை உண்டு. கரைபுரண்டு ஓடிவந்தா சுனாமி வந்திருச்சினு அர்த்தம்.. ஆறு அளவா ஓடினா அதனோட அழகை இரசிக்கிறோம்.. கொண்டாடுறோம்.. அதுவே கரைபுரண்டு ஓடினா காட்டாறுனு சொல்லி பய்ந்து ஒதுங்கிறோம்.
அதுபோலத்தான் நட்பில் பகிர்தலுக்கும் ஒரு எல்லை இருக்கு.
அதுக்காக அந்த நட்பு பொய்யானது அல்ல. உண்மை நட்பு அதை ஏற்றுக்கொள்ளும். நம்ம ஃபிரண்ட் செயதா சரியாத்தான் இருக்கும். அதுல ஏதோ காரணம் இருக்குனுதான் நினைக்குமே தவிர மாறா உள்ளம் குமுறாது.

மேலும் சமயம் வரும்போது சொல்வானு நினச்சுக்குமே தவிர, நம்மகிட்ட சொல்லவேயில்லப்பாருனு பழிவாங்க நினைக்காது. இந்த அன்புதான் கடைசிவரை நிலைக்கும். தொடரும்.
எல்லா விஷயத்தையும் சொன்னாத்தான் நம்மளை ஃபிரண்டா நினைப்பானு நினச்சு பயந்துக்கிட்டு நட்பு பாராட்டினாத்தான் அந்த நட்பு மேலோட்டமான நட்புனு சொல்லவாரோம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

// சின்னப்புள்ளையா இருக்கச்ச பள்ளிக்குப் போறோம் பலப்பத்தை தொலைச்சுப்புடறோம் வீட்டுக்கு வாரோம் அம்மாகிட்டயோ அப்பாகிட்டயோ திட்டையும் வாங்கிடறோம், அந்த சமயம் பக்கத்து வீட்டுக்கு வார தோழிகிட்ட நான் இப்பத்தான் அடிவாங்கினேன், திட்டு வாங்கினேனு சொல்றமா? இல்ல சொல்லத்தான் முடியுமா? //
ஆஹா..நோட் பண்ணுங்க முழுமையான பகிர்வு அணியினரே :-)
எதற்கும் ஒரு எல்லை உண்டு; அது நட்பில் பகிர்தலுக்கும் பொருந்தும்னு சொல்றீங்க,

நட்பு பொய்யானது அல்ல, விஷயங்களை பகிர்ந்தால் தான் நட்பு , என்று உண்மைநட்பு எண்ணாது என சொல்றீங்க,
அருமை, அருமை, மீண்டும் அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க :-)

நட்புடன்
குணா

அன்பு நடுவரே
/(எப்படியோ பட்டி முடியறதுக்குள்ளே ஒரு பதிவாவது போடனுனும்னு நினைச்சேன் )
லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும்.

நல்ல தலைப்பு, நல்ல நடுவர். சூப்பர் அணிகள் வாதங்கள் , எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

நான் எந்த சியடுன்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது . இதோ சொல்றேன் கடைசியில .
ரகசியம் என்பது நம்ம வாயை விட்டு அடுத்தவங்க காதுக்கு போனாலே அதுக்கு பேரை இழந்திடும். அது ரகசியமே இல்லை. சரி நம்ம ரகசியத்தை பகிர்ந்து கொண்டா லாபமா நஷ்டமா ? என்றால் கண்டிப்பா நன்ஷ்டம் தாங்க . மேலோட்டமா சொல்லலாமே தவிர எதையுமே யாரிடமும் முழுமையாக சொல்லாமல் இருப்பதே நல்லது

நண்பர்கள் என்பவர்களும் நம் வாழ்க்கையில் வந்து போய் கொண்டே இருப்பாங்க நாம் உற்ற நண்பி என்று சிறு வயதில் நினைத்த தோழி , ஒரே ஆலில் கானாமல போய் விடுவதும் உண்டு . நன் சந்தோஷங்கள் துக்கங்கள் எதையுமே அதிகமாக பொங்காமல் வாழ்வது நம் வாழ்க்கைக்கு சிறந்து. ஏன் என்று கேட்டால் , எல்லாருக்கும் நட்புகள் நல்ல உறவாக அமைந்து விடுவதில்லை . இவன் நம் சிறந்த தோழன் என்று நினைக்கும் தருணத்தில் அவனே துரோகியாக மாறிவிடுவதும் உண்டு. கழுத்தில் கத்தி வைப்பவர்களும் உண்டு.

ஒரு நண்பனுடன் முழுமையாக பகிர்வது நட்பிற்கு இலக்கணம் என்று நினைத்து சொல்வது தவறு.நட்பு கோடு என்று வேண்டுமானாலும் முறியலாம். அதற்கு கோட்பாடுகள் கிடையாது. நம் பகிர்தலை அவன் மிஸ் யூஸ் பண்ணவும் வாய்ப்புள்ளது. அது நமக்கு மன உ ளைச்சளையும் இரிடேஷனையும் தரும்.. நல்ல நட்பு என்பது லிமிட் தெரிந்து பழகுவதே ஆகும்.

இப்போ புரிந்து கொண்டீரா ? நட்பிற்கு சுவை மட்டுமல்ல அறுசுவை சேர்ப்பது அளவான பகிர்வே !!
நன்றி

எதிரணி சொல்றாங்க ///நண்பர்கள் என்பவர்களும் நம் வாழ்க்கையில் வந்து போய் கொண்டே இருப்பாங்க நாம் உற்ற நண்பி என்று சிறு வயதில் நினைத்த தோழி , ஒரே ஆலில் கானாமல போய் விடுவதும் உண்டு . நன் சந்தோஷங்கள் துக்கங்கள் எதையுமே அதிகமாக பொங்காமல் வாழ்வது நம் வாழ்க்கைக்கு சிறந்து. ஏன் என்று கேட்டால் , எல்லாருக்கும் நட்புகள் நல்ல உறவாக அமைந்து விடுவதில்லை . இவன் நம் சிறந்த தோழன் என்று நினைக்கும் தருணத்தில் அவனே துரோகியாக மாறிவிடுவதும் உண்டு. கழுத்தில் கத்தி வைப்பவர்களும் உண்டு///

இப்படி அளவோடு நாம் நடப்பது 3 ஆம் மனிதரிடம் தான்.... நட்பில் ஏன் நாம் அப்படி பழக வேண்டும்???

அப்படி நினைத்தால் அது எப்படி நட்பாக இருக்க முடியும்??? நட்பு என்பது எந்த இரத்த உறவும் இல்லாமல் வரும் சொந்தம்... அது நமக்கு எப்போதும் ஆதரவாக தான் இருக்கும்... அது தான் நட்பு... அதை விட்டு விட்டு அவன் துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று சொல்வது தவறு....

உண்மையான தோழன் உயிர் போகும் சூழ்நிலையிலும் தன் நண்பனை விட்டு குடுக்க மாட்டான்....

எல்லோரையும் நம் நண்பர்களாக நினைத்து எல்லாவற்றையும் சொல்ல சொல்லவில்லை... நண்பன் என்பவன் நம்மை புரிந்து கொண்ட ஒருவன்... எல்லோரையும் நண்பன் என்ற பெயரில் அழைக்கலாம் ஆனால் அப்படி கூப்பிடும் எல்லோரும் நண்பர்களாக ஆகா முடியாது... உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் மறையாது...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வாங்க வணக்கம்ங்க, வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
அளவான பகிர்வு அணியா.! நீங்க,
நண்பர்களிடம் முழுமையான பகிர்வின் மூலம் ரகசியங்கள் வெளியானால் மன உளைச்சல்' ஏற்படும்'னு சொல்றீங்க,
உண்மைதான்,
நல்ல நட்பு லிமிட் தெரிந்து பழகுவதுனு சொல்றீங்க, முழுபகிர்வு அணியினர் என்ன சொல்றாங்கனு, பார்போம்,
மேலும் வாதங்களோட வாங்க :-)

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்