பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

வணக்கம் நடுவரே! எதிரணியினர் புராண இதிகாச உதாரணம் எல்லாம் சொல்லியிருக்காங்க. கிருஷ்ணருக்கு குசேலரின் நிலைமை தெரிஞ்சிருந்தும் அவரா வந்து பகிர்ந்துக்கட்டும்னு இருந்தாராம். அது எப்படி நடுவரே சிறந்த நட்பாக இருக்க முடியும். நட்பு என்றால் நண்பனின் முகவாட்டம் கண்டே அவனை அறிந்து கொள்ள வேண்டாமா? அவனா சொல்லட்டும் அப்பதான் உதவுவேன் என்றால் அது நட்பே இல்லியே!

கர்ணன் துரியோதனன் நட்பு பற்றியும் சொன்னாங்க. அது கூடா நட்பு. அந்த நட்பின் அடிப்படையே செஞ்சோற்றுக் கடனால் உருவானது. தன் நண்பன் துரியோதனனின் பாதை தவறென்று தெரிந்திருந்தும் அவனுக்கு துணை நின்றதும் நன்றிக்கடனுக்காகத்தானே தவிர நட்பால் அல்ல.

நட்பில் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக இருக்க வேண்டுமே தவிர ரகசியங்களே இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை. உயர்பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்று எடுத்துக் கொள்வோம். அலுவலக விஷயங்கள் எல்லாவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா? ஐய்யோ அவன் என் நண்பன். என் மனசாட்சி என்றுன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றையும் உளறிக் கொட்டினால் வேலைக்கே ஆப்பு வந்து விடும். அளவான பகிர்தலே எல்லோருக்கும் நல்லது.

நண்பர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் மூன்றாமாவர் ஒருவரின் பங்கும் இருக்கிறது என்றால் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பகிர்ந்து கொள்ளவும் கூடாது. அதுதான் மூவருக்கும் நல்லது.

அளவாக பகிர்ந்து நிறவான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் நடுவரே :)

மீண்டும் வருவோம்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

// நட்பு நல்லா போயிகிட்டு இருக்கிறவரைக்கும், முழுபகிர்வு நல்லதுன்னு சொல்ற நீங்க //
மேடம், நான் முழுபகிர்வு அணிக்கு சாதகமா பேசலையே :-) இரு அணிக்கும் பொதுவான கேள்வி கேட்டிருப்பேன்ங்க, பதில் போட்டிருப்பேன்,
நீங்க கேட்டமாதிரி நிறைய கேள்விகள் வருவது சகஜம்தான்..
மேலும் வாதத்தோட வாங்க

நட்புடன்
குணா

//நான் சொல்ல போகும் சில கருத்துக்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை...//
நட்பு என்பது ஒரு கலை. அந்த கலையானது, ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
//நட்பு நல்லா போயிகிட்டு இருக்கிறவரைக்கும் முழு பகிர்வு நல்லதுன்னு சொல்லுற நீங்க, ஒரு முறிவுன்னு வர்றப்ப என்ன நினைப்பு வரும் தெரியுமா.// முறையான புரிதலும் பகிர்தலும் இருக்கின்ற இடத்தில பிரிவு எப்படி நடுவரே வரும், நல்லா கேட்கறங்கய்யா டீட்டெயிலு...;)
//கர்ணன் துரியோதனன் நட்பு பற்றியும் சொன்னாங்க. அது கூடா நட்பு. அந்த நட்பின் அடிப்படையே செஞ்சோற்றுக் கடனால் உருவானது. தன் நண்பன் துரியோதனனின் பாதை தவறென்று தெரிந்திருந்தும் அவனுக்கு துணை நின்றதும் நன்றிக்கடனுக்காகத்தானே தவிர நட்பால் அல்ல.//அப்புறமும் எதுக்குங்க நட்புக்கு உதாரணமா கர்ணனை சொல்றாங்க, உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு பெரியவங்க சும்மா சொல்லவில்லை நடுவரே,
//உயர்பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்று எடுத்துக் கொள்வோம். அலுவலக விஷயங்கள் எல்லாவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா? //மு‌ன்னா‌ள் குடியரசு‌‌‌த் தலைவ‌ர் அ‌ப்து‌ல் கலா‌ம், தா‌ன் வ‌கி‌த்து வ‌ந்த பெ‌ரிய பொறு‌ப்‌‌பி‌ன் (பத‌வி) போது‌ம் த‌ன் ந‌ண்பனை பா‌ர்‌க்க டெ‌‌ல்‌லி‌‌யி‌ல் இரு‌ந்து வருவாராம், அது தான் ந‌ட்‌பி‌ன் அடையாள‌ம். அ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ன் போது அவ‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ண்ட ‌நிக‌ழ்வுக‌ள் கண‌‌க்‌கி‌ல் அட‌ங்காதது.

நடுவரே நீங்களும், எதிர் அணியும் நம்ப விஜய்டீவில நீயா நானா பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன், அதுல போன வருடம் தலைமுறையை தாண்டிய நட்புன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாச்சு, அதுல பேசுனவங்கள்ள 90 சதவீதம் பேர் நண்பன்கிட்ட முழுமையா பகிர்ந்துக்க முடியலேன்னா அப்புறம் என் நண்பன் இவன் அப்படின்னு சொல்றதுல என்ன அர்த்தம் இருக்க முடியும்னு தான் கேட்டாங்க,அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சியின் இடையே நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருப்பவர்களைப் பற்றி ஒளிபரப்பினார்கள். அண்ணன் தம்பிகளாக இருப்பவர்களே ஒரே குடும்பத்தில் இருக்க சிரமப்படும் இந்த நேரத்தில் நண்பர்கள் இருவரும் ஒரே குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பதை நிகழ்ச்சியில் காட்டியது கவிதையாய் அமைந்திருந்தது.இரண்டு நண்பர்களுக்கு இடையே முழுமையான பகிர்வு இல்லைனா இதுபோல தலைமுறையையும் தாண்டி நட்பு தொடர்ந்துருக்குமா நடுவரே?
இப்ப ஒருத்தங்ககிட்ட நம்ம பெற்றோர அறிமுகப்படுத்தரோம்னு வைங்க , எப்படி அறிமுக படுத்துவீஙக? இது என் அம்மா. என் அப்பான்னு தானெ, ஆனா நண்பனை அறிமுகப்படுத்தும்போது இவன் என் உயிர் நண்பன்/நண்பின்னு தானே, இந்த உயிர்ங்கிற வார்த்தையை காதலுக்கு//(இப்ப எல்லாம் காதலிய/ காதலன இப்படி அற்முகப்படுத்தறாங்களான்னு தெரியாது..;)// அப்புறமா நட்புக்கு மட்டும் தான் நாமபயன் படுத்தறோம் நடுவரே...:)
நட்பு என்பது ஒரு கொண்டாட்டம் ! நீண்ட கால நட்பு ஒரு உன்னதமான அனுபவம். ஒருவருடன் நீண்டகாலம் நட்பில் இருப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். அநேகம் பேருக்கு அது வாய்த்துவிடுவதில்லை. நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல்.
பாடல் தெரியவில்லை.. விளக்கம் இதுதான்.

ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று வாழைமரம் போன்றவர்கள்.
-பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பிதில்லை.அதுதானாகவே முளைக்கிறது.தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத்தானாகவே வளர்கிறது.தனது உடம்பு ஓலையையும் நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது.
அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்குப் பலன் தருகிறது.வாழை மரமோ, நாம்தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப்பலன் தருகிறது.
நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன்,பனைமரம் போன்று நண்பன்.
அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன்,தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.
அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.
இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பன் நமக்கு இருந்தால்//நாமளும் அப்படி தான் இருக்கனும்ங்கிறது ரொம்ப முக்கியம்//அவங்க கிட்ட முழுமையாபகிர்ந்துக்கிறதுல என்ன தப்பு நடுவரே. தெவைக்கு அளவா பகிர்ந்துகிட்டா அந்த நட்பயே அவமானப்படுத்துவது ஆகாதா நடுவரே?
காதல் மட்டுமல்ல நட்பு பூக்கிறது கூட ஒரு அழகான தருணம்தான். துன்பமான நேரத்தில் கை கொடுப்பது நட்பு. கண்ணீர் வழியும் போது கண்களைத் தாண்டிப் போகும் முன் துடைக்கும் கைகள்தான் நட்பின் கரம். அந்த அளவிற்கு ஒரு உயர்வான இடம் நட்பிற்கு உண்டு. கடைசியா எனக்கு பிடித்த நான் எங்கோ படித்த ஒரு கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்...

ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."

இப்படிப்பட்ட நட்புகிட்ட நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொள்வது அந்த நட்புக்கு சுவை மட்டும் அல்ல நல்ல மரியாதையும் கூட, என்று கூறி இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவை சுவை சுவையை தவிற வேறில்லை எனக் கூறி விடை பெறுகிறேன்....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவரே நட்புக்கு இலக்கணமாக சொல்வது கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைத்தான். ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்த போதும் அவர்களுக்குள்ளே இருந்தது ஆத்மார்த்தமான நட்பு. பகிர்தல் என்ற ஒன்றே இல்லை. ஆனால் உள்ளன்பு இருந்தது. அதைத்தான் எங்கள் அணியினர் சொல்கிறோம்.

கர்ணனை உதாரணமாக சொல்வது அவனது கொடைத்தன்மையையும், செஞ்சோற்றுக்கடனையும்தான்.

"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா கர்ணா" இந்தப்பாட்டைக் கேட்டதில்லையா நடுவரே!

உண்மையில் தவறான நட்புக்கு உதாரணம்தான் கர்ணன் துரியோதனன் நட்பு.

அடுத்து அப்துல் கலாம் அவர்களுடைய நண்பர்களை சந்தித்த போது பகிர்ந்து நெகிழ்ந்த நிகழ்வுகளைப்பற்றி சொன்னார்கள். நிச்சயம் தன் கல்லூரி பள்ளிக்கால நிகழ்வுகளை மீண்டும் பேசி பகிர்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் ஐயா அப்துல்கலாம் அவருக்குத் தெரிந்த இந்திய இறையாண்மை விவகாரங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பாரா என்றால் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டார். கொள்கைகள் பற்றிய சந்தேகம் வந்தாலும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்தாலோசிப்பாரே தவிர நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார். இதைத்தாங்க எங்க அணியினர் சொல்றோம். எல்லாத்தையும் பகிர்ந்து கொள்கிறோம் என்று எல்லாவற்றையும் அது உயிர் நட்பே என்றாலும் பகிர்ந்து கொள்ள முடியாது அது கூடாது.

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அது நட்பிற்கும் உண்டு. நண்பர்களிடம் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது. கூடாது. முக்கியமாக நம் துணை பற்றிய குறைகளை நம் நண்பர்களிடம் அளவுக்கு மீறி பகிர்ந்து கொள்ளும் போது நிச்சயம் அது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். அளவான பகிர்தலே அனைவருக்கும் நல்லது. அதுவே நட்பின் சுவையையும் இனிமையையும் அதிகரிக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கமுங்க,
//நட்பு என்றால் நண்பனின் முகவாட்டம் கண்டே அவனை அறிந்து கொள்ள வேண்டாமா? //
அறியணும்ங்க,

//நட்பில் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக இருக்கவேண்டுமே தவிர ரகசியங்கள் எல்லாம் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை //
//அலுவலக விஷயங்கள் எல்லாவற்றையும், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா? ஐயோ அவன் என் நண்பன் என் மனசாட்சி என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எல்லாவற்றையும் உளறிக் கொட்டினால் வேலைக்கே ஆப்பு வந்துவிடும்//
எல்லோரும் பல பாயிண்ட்ஸ் கொடுத்து யோசிக்க வைக்கறீங்க, :-) முழுபகிர்வு அணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம் , மேலும் வாதங்களோட வாங்க..

நட்புடன்
குணா

நடுவரே,தோழிகளே எல்லாரும் எங்க போயிடீங்க, வார விடுமுறை கொண்டட்டத்தில பட்டிய அம்போன்னு விட்டுட்டு போறது நியாயமா...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

// நட்பு என்பது ஒரு கலை, அந்தக் கலையானது ஒரு நல்ல இசைக்கருவியைப் போன்றது, முதலில் விதிகளின்படி இக்கருவியை வாசிக்கத்தொடங்க வேண்டும், பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்//
அருமை, அருமை , நானும் என்றோ படிச்சிருக்கேன்ங்.
கவிதையும் ரொம்ப அருமைங்க, ரொம்ப ஆழமான கருத்துக்கள்ங்க, நட்பின் பகிர்வை நன்கு சொல்லிருக்கீங்க, மேலும் வாதங்களோட வாங்க :-)

நட்புடன்
குணா

//கர்ணனை உதாரணமாக சொல்வது அவனது கொடைத்தன்மையும் செஞ்சோற்றுக்கடனையும் தான்//
ஆமாங்க, அப்படித்தான் இன்றுவரை பேசப்படுகிறது,
ஆனால் கர்ணன்,துரியோதனின் முதல் சந்திப்பு நடந்தது துரோணரின் வில்வித்தைப்போட்டியில், அப்போட்டியில் கலந்துகொள்ள அரச குமாரனாய் இருக்க வேண்டும், அங்கு அனைவரும் தேரோட்டியின் மகன் என்று கர்ணனை அவமானப்படுத்தியபோது துரியோதனன் கர்ணனை தன் கட்டுப்பாட்டில் இருந்த அங்கதேசத்து நாட்டிற்கு அரசனாய் அச்சபையில் அறிவித்து கர்ணனை தலைநிமிரவைத்தான், அதுதான் கர்ணனை துரியோதனனை நட்பு கொள்ள வைத்தது.
நீங்கள் சொன்ன பாட்டையும் கேட்டுள்ளேன் அக்காங்,

இந்திய இறையாண்மை விவகாரங்களை நண்பரிடம் பகிரமாட்டார் கலாம் ஐயா, உண்மைங்க,
ரொம்ப அருமையான கருத்துக்கள், மேலும் வாதங்களோட வாங்க :-)

நட்புடன்
குணா

வணக்கம் நடுவர் அவர்களே... இப்பொழுது தான் நேரம் கிடைத்தது பட்டியில் பதிவிட... எதிரணியினர் நன்றாகவே வாதாடியிருக்கின்றனர்... பாராட்டுக்கள். அவர்கள் சொல்வது போல முழுமையான பகிர்தல் என்பது... அலுவலக ரகசியங்கள் மற்றும் இல்லறத்துணை பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேன்டும் என்கிற அவசியம் இல்லை...

ஒரு நபர் தன் நண்பரிடம் தன்னைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது முழுமையான பகிர்வு. உதாரணத்திற்கு,, ஏ-வும், பீ-யும் நண்பர்கள்... ஏ-க்கு கல்யாணம் ஆகிவிட்டது. பீ-க்கு ஏ-வுடைய மனைவியைப் பற்றியோ, அவளது குணம் பற்றியோ அறிந்திருக்க வேன்டிய அவசியம் இல்லை.. ஆனால் ஏ-வினுடைய குணம் மற்றும் செயல்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். அதுதான், அந்தப் புரிதல் தான்.. நட்பிற்க்கு பாலமாகவும், பலமாகவும் அமையும்...

//அப்துல் கலாம் அவர்களுடைய நண்பர்களை சந்தித்த போது பகிர்ந்து நெகிழ்ந்த நிகழ்வுகளைப்பற்றி சொன்னார்கள். நிச்சயம் தன் கல்லூரி பள்ளிக்கால நிகழ்வுகளை மீண்டும் பேசி பகிர்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் ஐயா அப்துல்கலாம் அவருக்குத் தெரிந்த இந்திய இறையாண்மை விவகாரங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பாரா என்றால் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டார்.// அப்துல் கலாம் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திதித்த போது கல்லூரி பள்ளிக்கால நிகழ்வுகளை மட்டும் தான் அவரால் பேசமுடியும்.. ஏனென்றால், அப்போது அவர் விஞ்ஞானி இல்லை.. சாதாரண மாணவன் தான். இப்போது அவர் விஞ்ஞானி ஆகிவிட்ட காரணத்திற்க்காக தன் பள்ளி நண்பரிடம் போய் அணுவைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் பேசமுடியுமா?? அப்படி பேசினால் அப்துல் கலாமை ஒரு விஞ்ஞானியாகத் தான் பார்க்கத் தோன்றுமே தவிர நண்பனாக பார்க்க முடியாது...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

எதிர் அணில இப்படி சொல்லி இருக்காங்க நடுவரே //நீங்கள் மனதின் ரகசியங்களை உங்களின் தனிப்பட்ட டைரியில் எழுதாமல் உங்கள் நண்பரின் மனதில் எழுத நினைக்கிறீர்கள்.

டைரியோ உங்கள் கண் பார்வையில் இருக்கும்
உங்கள் நண்பரோ ????????// ஏனுங்க நடுவரே, எத்தனைபேர் டைரில அவங்களோட மனதின் ரகசியங்களை எழுதிட்டு மன அமைதியோட இருக்காங்க? எழுதியும் வெச்சுட்டு அந்த டைரிய பாதுகாக்க படற பாடு இருக்கே..அம்மாடியோவ்.. அதுக்கு தனி நம்பர் லாக் போட்ட பூட்டு வேற நடுவரே. எப்போதுமே மூடுன கதவுக்கு பின்னாடி என்ன இருக்கும்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோரும்முமே ஆர்வம் இருக்கும் நடுவரே,அட்லீஸ்ட் நமக்கு பிடித்த நம்மை புரிஞ்சுக்கிட்ட , நமக்கு வாழ்வில் எல்லாமும் ஆன நம்ம நட்புகிட்ட நம்ம ரகசியங்களை பகிர்ந்துகிட்டா நம்ப மனசும் அமைதியாகும், எதாவது பிரச்சனையினா அதுக்கு ஒரு சொல்யூஸனும் நட்புகிட்ட இருந்து கிடைக்கும். நமக்குள்ளேயே வெச்சு ரகசியங்களை பாதுகாத்தா மனசு குப்பை தொட்டி ஆகறது மட்டும் இல்லாம இல்லாத நோய் எல்லாம் வந்து சேரும்...:(
நடுவரே இப்ப ஒரு குடும்பத்தில் பத்துப் பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பத்துப் பேர்களுக்கும் கண்,காது, மூக்கு, வாய்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒருவர்க்கு இருப்பதுபோல் மற்றவர்க்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் மனிதனுடைய உள்ளுறுப்புகளும். அவற்றில் ஒன்று தான் “மனம்’, மனம் ஒருவர்க்கு இருப்பதுபோல் மற்றவர்க்கு இருப்பதில்லை. இந்த உண்மையை உணர்ந்துகொண்ட பின்புதான் எவரோடும் நட்புக் கொள்ள வேண்டும். அப்படி கிடைத நட்பிடம் நாம் நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டால் அந்த நட்பு மேலும் வளரும்.
நடுவரே நட்பை நல்ல நட்பு, உண்மை நட்பு, வெள்ளை நட்பு, கறுப்பு நட்பு, நெருங்கிய நட்பு, உயர்ந்த நட்பு என்றெல்லாம் வகைப்படுத்திப் பார்க்க முடியும். இப்படி வகை படுத்த தெரிந்தவர்கள் ஏதோ ஒரு வகை நட்புகிட்ட தங்களை பற்றிய ரகசியங்களை கண்டிப்பாக பகிர்ந்திருப்பார்கள் நடுவரே.
நட்புக்கு பரிணாமம் அதிகம் நடுவரே
நட்பு என்பது
அகம் காட்டும் முகம்
உண்மை வழிகாட்டும் நெறி
காயங்களுக்கு களிம்பு
இதழில் அரும்பும் புன்சிரிப்பு
தோளில் தவழும் கைகள்
பசிக்கு உணவு
துன்பத்தில் தோள் கொடுக்கும் துணை
இதயத்தை மகிழ்விக்கும் இன்னிசை... இப்படி சொல்லி கொண்டே போகலாம் நடுவரே, இந்த மாதிரி நட்பு உங்களுக்கு கிடத்தால் நீங்க எல்லா விசயங்களையும் பகிருவீங்களா.. மாட்டீங்களா? நடுவரே நட்பில் உயிராய் பழகுவதைவிட உண்மையை பகிர்ந்து பழகி பாருங்கள், நம் உயிர் உடல் விட்டு உதிரும் வரை அந்த நட்பு நம்மை ஒட்டியே கிடக்கும், அதனால தான் அன்னைக்கே பாடி வெச்சாங்க,

வீடு வரை உறவு..
வீதி வரை மனைவி..
காடு வரை பிள்ளை..
கடைசி வரை யாரோ..? அந்த யாரோ நிச்சயமாக நாம் அனைத்தையும் பகிரும் நட்பாகத் தான் இருக்க முடியும், எனவே ஒரு மனிதன் தன் வாழ்வில் தன் இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது அவனுக்கு சுவையையே சேர்க்கும் எனக் கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்