பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *

அறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான "90"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது
முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? விரிவாக சொல்லணும்னா உங்களின்
இன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா? இல்லை
அளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா? அருமையான தலைப்பை அளித்த **இளவரசி
மேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

வணக்கம்,
// முழுமையான பகிர்தல் என்பது அலுவலக ரகசியங்கள் மற்றும் இல்லறத்துணை பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.//
// அப்துல்கலாம் பள்ளி கல்லூரி நண்பர்ளை சந்தித்த போது கல்லூரி பள்ளிக்கால நிகழ்வுகளை மட்டும்தான் அவரால் பேச முடியும்... ஏனென்றால் அப்போது அவர் விஞ்ஞானி இல்லை, சாதாரண மாணவன் தான். இப்போது அவர் விஞ்ஞானி ஆகிவிட்ட காரணத்திற்காக தன் பள்ளி நண்பரிடம் போய் அணுவைப்பற்றியும் ஆராய்ச்சி பற்றியும் பேச முடியுமா?? அப்படி பேசினால் கலாமை ஒரு விஞ்ஞானியாகத்தான் பார்க்க தோன்றுமே தவிர, நண்பனாக பார்க்க முடியாது. //
ரொம்ப அருமைங்க, உண்மையும் கூட, மேலும் வாதங்களுடன் வாங்க :-)

நட்புடன்
குணா

வணக்கம்,
// எத்தனை பேர் அவங்களோட மனதின் ரகசியங்களை எழுதிட்டு மன அமைதியோடு இருக்காங்க? எழுதியும் வச்சிட்டு அந்த டைரிய பாதுகாக்க அவங்க படற பாடு இருக்கே.. அதுக்கு தனி நம்பர் போட்ட லாக் வேற //
உண்மைதான், :-)

//வகைப்படுத்த தெரிந்தவர்கள் ஏதோ ஒருவகை நட்புகிட்ட தங்கள் ரகசியங்களை கண்டிப்பாக பகிர்ந்திருப்பார்கள் //
ரொம்ப அருமையா பாடலுடன் சொல்லியிருக்கீங்க, அளவான பகிர்வு அணியினர் என்ன பதில் சொல்றாங்கனு பார்ப்போம், மேலும் வாதங்களோட வாங்க :-)

நட்புடன்
குணா

// எத்தனை பேர் அவங்களோட மனதின் ரகசியங்களை எழுதிட்டு மன அமைதியோடு இருக்காங்க? எழுதியும் வச்சிட்டு அந்த டைரிய பாதுகாக்க அவங்க படற பாடு இருக்கே.. அதுக்கு தனி நம்பர் போட்ட லாக் வேற //

டைரிக்காவது லாக் போட்டு வச்சிரலாம் ஆனா நண்பருக்கு லாக் போட முடியுமா??????????? நடுவரே!!!

//வகைப்படுத்த தெரிந்தவர்கள் ஏதோ ஒருவகை நட்புகிட்ட தங்கள் ரகசியங்களை கண்டிப்பாக பகிர்ந்திருப்பார்கள் //

அது நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம் நடுவரே

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நடுவருக்கு வணக்கங்கள்,
வீடுவரை மனைவி,
காடுவரை பிள்ளை,
கடைசிவரை யாரோன்னுதான் கவிஞர் பாடினார்...
அவருக்கில்லாத நட்ப்பா நடுவரே....?

பரம்சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்யமா?
யாரும் இருக்குமிடம் இருந்துகொண்டால்
எல்லாம் செளவுக்யமே கருடன் சொன்னது...!

புரியுதா நடுவரே
எதற்கும் எல்லை உண்டு,
பகிர்தலுக்கும் அளவு உண்டு...

மனைவி,அன்னையின் கைப்பக்குவம் நல்ல சுவையான சமையல் என் நண்பனுக்கு பிடிக்கும்னு எடுத்து எடுத்து அனைத்தையும் பகிர்கிறேன்னு கொட்டிப்பாருங்கள்,
உணவின் சுவை சீக்கிரம் திகட்டிவிடும்,இந்தபக்கம் ஆசை மகனுக்கு,அல்லது ஆசை கணவனுக்கு சமைத்தவற்றை அவன் உண்ணலைன்னு வருத்தம்தான் மிஞ்சும்...
இப்படி ஒருபுறம் திகட்டலும்,மறுபுறம் வருத்தமும் மிஞ்சுமளவிற்கு பகிர்தல் இருக்ககூடாது நடுவரே...,
அளவோடு கொடுத்து சுவையை பெருக்கனும்,

"ஒருநாளில் திகட்டுவதுபோல
நட்பின் பகிர்தல் இருக்ககூடாது.....
ஒருநாளும் திடட்டாவண்ணம்
நட்பின் பகிர்தல் அளவோடு இருக்க வேண்டும்....:-))"

சம்மந்தப்பட்டதை சம்ப்மந்தப்பட்டவரிடம்தான் பகிரவேண்டும்....காதலி பற்றிய சந்தேகங்களை பகிர துணியும் நட்பு, மனைவியின் அன்பினில் உள்ள சங்கடத்தை நட்பிடம் பகிர தோன்றாது தோன்றவும் கூடாது.

(நடுவரே,எனக்கொரு டவுட்டு நாங்கெல்லாம் உங்களின் நட்புக்கள் எங்களிடம் இப்பட்டியின் தீர்ப்புபற்றி (முன்னமே)விசாரித்தீரா?அல்லது இப்படித்தான் வரும்னு பகிர்ந்துகொண்டீரா?இல்லைல்ல அப்ப உங்களுக்கே தெரியுதுள்ள நட்பில் அளவான பகிர்வுதான் இருக்கனும்னு...)

ஆக நடுவரே எத்திசையில் இருந்து சிந்தித்தாலும் அளவான பகிர்தலே நட்பில் சுவை சேர்க்குமென்பதில் ஐய்யமொன்றூமில்லை......இத்துடன் எனது வாதத்தினை முடித்துக்கொள்கிறேன்.....நல்ல தீர்ப்பு வருமென்ற நம்ப்பிக்கையில்..வரேன் நடுவரே.....

வணக்கம்,
//டைரிக்காவது லாக் போட்டு வச்சிரலாம் ஆனா நண்பருக்கு லாக் போட முடியுமா??????????? நடுவரே!!!//
நண்பருக்கு லாக்..ஆஆஆ..!!! :) முடியாதுங்க..
//அது நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம்//
முழுபகிர்வு அணியினர் என்ன சொல்றாங்கனு, பார்போம்,
மேலும் வாதங்களோட வாங்க :-)

நட்புடன்
குணா

வணக்கங்க,
//பரம்சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்யமா?
யாரும் இருக்குமிடம் இருந்துகொண்டால்
எல்லாம் செளவுக்யமே கருடன் சொன்னது...!//
ம்ம்..அருமைங்க,
//"ஒருநாளில் திகட்டுவதுபோல
நட்பின் பகிர்தல் இருக்ககூடாது.....
ஒருநாளும் திடட்டாவண்ணம்
நட்பின் பகிர்தல் அளவோடு இருக்க வேண்டும்....:-))" //
//சம்மந்தப்பட்டதை சம்ப்மந்தப்பட்டவரிடம்தான் பகிரவேண்டும்....காதலி பற்றிய சந்தேகங்களை பகிர துணியும் நட்பு, மனைவியின் அன்பினில் உள்ள சங்கடத்தை நட்பிடம் பகிர தோன்றாது தோன்றவும் கூடாது//
ரொம்ப அருமைங்க, மேலும் பல வாதங்களோட வாங்க :-)

//(நடுவரே,எனக்கொரு டவுட்டு நாங்கெல்லாம் உங்களின் நட்புக்கள் எங்களிடம் இப்பட்டியின் தீர்ப்புபற்றி (முன்னமே)விசாரித்தீரா?அல்லது இப்படித்தான் வரும்னு பகிர்ந்துகொண்டீரா?இல்லைல்ல அப்ப உங்களுக்கே தெரியுதுள்ள நட்பில் அளவான பகிர்வுதான் இருக்கனும்னு...)//
அய்யய்யோ..!! நானே கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்.... :)

நட்புடன்
குணா

ஞாயிறு அன்று உறவினர்கள் வருகையால் பட்டியில் கவனம் செலுத்த இயலவில்லை,, ஆகவே அன்பு கூர்ந்து தீர்ப்பு கூற 2 நாள் அதிகமாக அவகாசம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,, இன்றுடன் உங்கள் இறுதிகட்ட வாதங்களை முடித்துக்கொள்ளவும்..
05/06/2013 தீர்ப்பு வெளியிடப்படும்..

நட்புடன்
குணா

//அது நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப உறுப்பினராகவும் இருக்கலாம் நடுவரே// எனக்கு ஒரு டவுட்டு நடுவரே, இப்ப பட்டி நட்புகிட்ட இருக்கிற பகிர்வப்பத்தியா இல்ல குடும்ப உறுப்பினர்கிட்ட பகிர்ந்துக்கிறதப்பத்தியா?

//டைரிக்காவது லாக் போட்டு வச்சிரலாம் ஆனா நண்பருக்கு லாக் போட முடியுமா??????????? நடுவரே!!!// நட்புக்கிடையேயும் அன்பு, புரிதல் , நம்புக்கை அப்படிங்கிற லாக் இருக்கு நடுவரே....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவர் எங்கே...? எங்கே? சீக்கிரம் வந்து சட்டு புட்டுன்னு தீர்ப்பைப் போடுங்கோ....காத்திருக்கோம்ல போய் பண்ணயம்பாக்கோனுமாக்கும்.....சீக்கிரமா வாங்கோ நடுவரே.....

நடுவர் ஏற்கெனவே அவர் நிலையை விளக்கி சொல்லி இன்னிக்கு தீர்ப்பு போடுவேன்னு சொல்லியிருக்காரே. காத்திருப்போம். விரைவில் வருவார் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்