உதவி தேவை

ஹலோ தோழிகளே

நான் இப்பொழுது 7 மாத கர்பிணியாக உள்ளேன் நான் வேலைக்கு செல்லும் பெண் அடுத்த மாதத்தில் இருந்து நான் வேலைக்கு செல்ல மாட்டேன் delivery க்கு எனக்கு 6 மதம் தான் leave தருவார்கள். குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களில் நான் வேலைக்கு வந்தாக வேண்டும். எனக்கு அம்மா இல்லை. நான் வேலை செய்யும் இடத்திற்கும் என் வீட்டிற்கும் 17 km இடைவெளி. குழந்தை பிறந்த 4 மாதங்களில் நான் வேலைக்கு வர வேண்டிய சூழ்நிலை. நான் குழந்தையை எப்படி பார்த்து கொள்வது. அதற்கு எப்படி பாலூட்டுவது என்று எனக்கு கவலையாக உள்ளது. நான் வேலைக்கு வந்தால் தான் என் குடும்பத்தை ஓர் அளவிற்கு நடத்த முடியும் என கணவருக்கு சம்பளம் குறைவு. குழந்தையை பார்க்க எனக்கு யோசனை தாருங்கள்

ஹாய் சங்கீதா எப்படி இருக்கீங்க, நீங்க மனதளவில் உங்கள தயார்படுத்திக்கோங்க மனதைரியம் முக்கியம் உங்க கூட கணவர் இருக்கார் அதுவே ரொம்ப பெரிய சப்போர்ட்னு நினைங்க. இப்பவே ஹாஸ்பிடலுக்கு என்னலாம் எடுத்துட்டு போகனும்னு தேவைப்படுதோ அதெல்லாம் ஒன்னு ஒன்னா எடுத்து வைங்க முடியும்போது அதுப்போல எந்த பொருளா எதுல வைக்கிறீங்கன்னு உங்க கணவர்கிட்டயும் சொல்லி வைங்க நீங்க ஒரு இடத்துல வச்சுட்டு அவரு தேடிகிட்டு இருக்க சிரமம் இருக்காதுல. கவலைப்படாதீங்க சங்கீதா ஹாஸ்பிட்டலில் நர்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க நிச்சயமா. இதுலாம் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காதீங்கம்மா பாப்பா கூட பேசிகிட்டு சந்தோஷமா இருங்க.
நம்ம அறுசுவையிலயே தேடி பார்த்தீங்கன்னா கிடைக்கும்பா ஹாஸ்பிடலுக்கு என்ன எடுத்துட்டு போகனும்னு தோழிகள் சொல்லி இருக்காங்க.

நான் அந்த இழையை படித்து இருக்கேன் பா மிகவும் உபயோகமாக இருக்கிறது. எனக்கு என்ன பயம் என்றால் நாங்கள் பார்ப்பது அரசு மருத்துவமனையில் அங்கு எப்படி இருக்குமோ இரவில் என்னுடன் யார் இருப்பார்களோ என்று தான்

மேலும் சில பதிவுகள்