ஈசி கேக்

தேதி: May 31, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (8 votes)

மைதா - ஒரு கப்
சீனி - ஒன்றேகால் கப்
வெண்ணெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெனிலா சுகர் - ஒன்றரை தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 3
பால் - கால் கப்
பாதாம் பருப்பு - 5 (விரும்பினால்)

முட்டையை நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அதனுடன் சீனி, வெனிலா சுகர் சேர்த்து கலக்கவும்.
பிறகு மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் உருக்கிய வெண்ணெய், எண்ணெய், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து கலக்கவும்.
நன்கு கலந்துவிட்டு வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் ஊற்றி, பாதாம் பருப்பு தூவவும்.
200 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 20 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
டேஸ்டியான ஈசி கேக் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கேக் பார்க்கவே நல்லா சாஃப்டா இருக்கு.யம்மி யம்மி

Eat healthy

அருமையாக இருக்கிறது மிகவும் எளிதான குறிப்பு வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.ரஸியா.நீங்க கேக் ஸ்பேசலிஸ்ட் ஆட்செ!

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மறக்காம பதிவிடும் உங்க அன்பிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

nice

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

Apo cake redya..today

நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

intha cake seithen musi romba nalla irunthau mikka nannri