மாங்காய் பச்சடி

தேதி: June 3, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பெரிய மாங்காய் - ஒன்று
அச்சு வெல்லம் - ஒன்று
சீனி - கால் கப்
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித் தழை - 2 கொத்து


 

மாங்காயின் தோலைச் சீவி விட்டு சதை பகுதியை நைசாக சீவிக் கொள்ளவும். வெல்லம் மற்றும் ஏலக்காயை பொடி செய்து வைக்கவும்.
மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மாங்காய், மிளகாய் தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு வெல்லம், உப்பு, சீனி சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது அதிக தீயில் வைத்துக் கிளறிவிடவும். கிளறிவிடாமல் இருந்தால் அடிபிடித்துவிடும்.
கொதித்து கெட்டியாக வந்ததும் ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவிடவும்.
சுவையான மாங்காய் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மாங்காய் பச்சடி பார்க்கவே நாவூறுது. இதே முறையில் நாங்களும் செய்வோம் காயத்ரி

பார்க்கவே நல்லா இருக்கு.கடைசி படம் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.