சேப்பங்கிழங்கு புளிக்கறி

தேதி: June 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சேப்பங்கிழங்கு - அரை கிலோ
தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கடுகு - தாளிக்க


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கால் கப் தண்ணீரில் புளியை ஊறவைத்து திக்காக கரைத்துக் கொள்ளவும்.
சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கிழங்கு வெந்ததும் எடுத்து தோலை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, சேப்பங்கிழங்கை போட்டு வதக்கவும்.
3 நிமிடங்கள் கழித்து புளிக்கரைசலை ஊற்றி பிரட்டிவிட்டு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சீனி போட்டு பிரட்டவும்.
அதிக தீயில் வைத்து நன்கு பிரட்டி விட்டு கொண்டே இருக்கவும்.
கிழங்கு நன்கு ரோஸ்ட் ஆகும் வரை கிளறிவிட்டு இறக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு புளிக்கறி ரெடி.
இந்த சேப்பங்கிழங்கு புளிக்கறி செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

seppaikilanku pilikari paarkum pothe saapita thonuthu super